செவ்வாய், 19 ஜூன், 2012

தொடர்கதையாகும் கைது படலம் தி.மு.க.முடிவெடுக்கம்

thangairaja - Dammam,சவுதி அரேபியா

பொதுவாக பெண்ணாட்சியாலர்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையே அவர்களை கர்வத்தோடும் அகங்காரிகளாகவும் ஆக்குகிறது. ஆண்கள் எல்லோருமே தங்களின் அடிமைகளாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் அடிமைகள் தவிர மற்றெல்லோரையும் எதிரிகளாக்குகிறது. எந்தவித சட்டமும் தங்களுக்கு கட்டுப்பட்டு அமைய வேண்டும் என நினைப்பது நமது ஜனநாயக நாட்டுக்கு மிகப் பெரிய சவாலாகவே இருக்கும். திமுக போராட்டம் நடத்துவதெல்லாம் சுத்த வேஸ்ட். மத்திய அரசில் தங்களுக்குள்ள அதிகாரத்தை பயன் படுத்தி மாற்று நடவடிக்கைகளில் இறங்குவது தான் புத்திசாலித்தனம். கத்தி எடுத்தவனை கத்தியால் தான் சமாளிக்க முடியும், வெறும் கையால் முழம் போட்டால் ஆகாது.

சென்னை: "தி.மு.க., நிர்வாகிகள் கைது செய்யப்படுவது குறித்து, ஆலோசித்து முடிவெடுக்க, விரைவில் பொதுக்குழு கூட்டப்படும்' என, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார்.

இதுகுறித்து, நிருபர்களுக்கு அவர் நேற்று அளித்து பேட்டி மாநாடு நடத்துவதற்கான இடத்தைத் தேர்வு செய்து, அங்கு சுத்தம் செய்யும் வேலைகள் நடைபெறுகின்றன. மாநாட்டு ஏற்பாடுகளை அதன் செயலர்கள் கவனித்து வருகிறார்கள். அகில இந்திய அளவில் பேர் வாங்கத்தான், ஜனாதிபதி வேட்பாளரை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதிலே, அவருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது குறித்தெல்லாம் நான் எதுவும் பேச விரும்பவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் முன்னாள் அமைச்சர் மற்றும் தி.மு.க., முன்னணியினரெல்லாம் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள். நேற்று முன் தினம் கைதாகி விடுதலையான மதுரை மாவட்ட தி.மு.க., செயலர் தளபதியை மீண்டும் கைது செய்ய முயற்சிகள் நடக்கின்றன. இதுபற்றியெல்லாம் ஆலோசித்து முடிவெடுக்க, கட்சியின் பொதுக்குழு அல்லது செயற்குழு விரைவில் கூடும், என்றார்.

ஜூன் 22ல் தி.மு.க., செயற்குழு: தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: வீரபாண்டி ஆறுமுகம் மீது இன்றைக்கு பரமபதசோபன ஆட்டத்தில் பாம்பின் தலைக்கே காய் நகர்த்துவது போல, அவர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டுள்ளது. மதுரை மாநகர மாவட்டச் செயலர் தளபதியை இரு நாட்களுக்கு முன், ஒரு வழக்கிலே கைது செய்து, கோர்ட் அவரை ஜாமினில் விடுவித்த பின், வேறு ஒரு வழக்கை அவர் மீது திணித்து, மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். இனியும் தி.மு.க., பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. வீண் பழி சுமத்தும் படலத்தை தமிழகம் இனியும் தாங்காது என்பதை எடுத்துக் காட்டும் வகையில், எத்தகைய போராட்டங்களில் ஈடுபடுவது என்பது குறித்து முடிவெடுக்க, தி.மு.க.,வின் அவசரச் செயற்குழுக் கூட்டம் வரும் 22ம் தேதி சென்னையில் கூடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: