புதன், 16 நவம்பர், 2011

Reliance Kingfisher: நெருப்பு இல்லாமல், புகை இல்லை!

Viruvirupu

Mumbai, Inia: Mukesh Ambani-led Reliance Industries denied a rumor widely spoken on business circle for the past 24 hours. The Indian energy major Reliance was in talks to buy a stake in cash-strapped Kingfisher Airlines was that talk! But, our sources said, there were some kind of dialogue between two parties related to this matter.

முகேஷ் அம்பானி தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், வர்த்தக வட்டாரங்களில் கடந்த 24 மணி நேரமாக அடிபட்டுக் கொண்டிருந்த வதந்தி ஒன்றை இன்று (புதன்கிழமை) மறுத்துள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் ஒரு பகுதியை ரிலையன்ஸ் வாங்குவதற்கு பேச்சு வார்த்தைகளை நடாத்துகின்றது என்பதே அந்த வதந்தி.
ரிலையன்ஸ் - தெரியாத மைதானத்திலும் தைரியமாக இறங்கக் கூடிய ஆட்கள்!
நேற்று மதியத்தில் இருந்து இந்த வதந்தி மும்பை வர்த்தக வட்டாரங்களில் பெரிதாக அடிபட்டுக் கொண்டிருந்தது. குறிப்பிட்ட வதந்தி காரணமாக கிங்ஃபிஷர் பங்குகளில் சிறிய ஏற்றம்கூட ஏற்பட்டது என்பதிலிருந்து வதந்தி எந்தளவுக்கு பிஸினெஸ் சர்க்கிளில் அடிபட்டது என்பதை புரிந்து கொள்ளலாம்.

ரிலையன்ஸ் இந்த வதந்தியை மறுத்தாலும், பெயர் வெளியிட விரும்பாத கிங்ஃபிஷர் அதிகாரி ஒருவர், “நெருப்பு இல்லாமல் புகை வரவில்லை” என்றார்.
“ரிலையன்ஸ் பெயரைச் சொல்லி ஒரு பேங்க் இதுபற்றி கிங்ஃபிஷருடன் பேசியது என்பதுதான் உண்மை. இந்த விஷயம் நிச்சயம் ரிலையன்ஸ் தலைமைக்கு தெரிந்தே நடந்திருக்க வேண்டும்.
இதில் சம்மந்தப்பட்டுள்ள பேங்க், கிங்ஃபிஷர் மற்றும் ரிலையன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுடனும் நெருங்கி வேலை செய்யும் அரசு வங்கி.
ரிலையன்ஸ், கிங்பிஷரின் ஸ்டேக் ஒன்றை மொத்தமாக வாங்கி அதில் குறிப்பிட்ட சதவீத பங்குகளை தமது பங்குதாரர்களுக்கு விற்பனை செய்வதில், கிங்ஃபிஷருக்கு ஆட்சேபணை ஏதும் உள்ளதா என்று அந்த பேங்கின் உயரதிகாரி ஒருவர் கிங்ஃபிஷர் டைரக்டர் மட்டத்தில் விவாதித்து உண்மை” என்றும் அவர் கூறுகிறார்.
ஆனால், இந்தக் கதை பெரியளவில் பிசினெஸ் சர்க்கிளில் அடிபடுவது, ரிலையன்ஸ் பங்குகளில் தற்காலிக வீழ்ச்சி ஒன்றை ஏற்படுத்தி விடலாம் என்பது மற்றொரு உண்மை. அதன் காரணமாகக்கூட ரிலையன்ஸின் மறுப்பு வெளியாகி இருக்கலாம்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) யு.பி. குரூப் (கிங்ஃபிஷரின் தாய் நிறுவனம்) பிரதான நிதி அதிகாரி (CFO) ரவி நெடுங்காடி, “கிங்ஃபிஷரில் முதலீடு செய்ய வரும்பும் முக்கிய நிறுவனம் ஒன்று எம்மை அணுகியுள்ளது” என்று தெரிவித்திருந்தார். நேற்றைய தினம், வெளிநாட்டு முதலீடு பற்றிய எந்தப் பேச்சுமே இருந்திராத நிலையில், ரவி தெரிவித்திருந்தது இந்தியாவின் முக்கிய நிறுவனம் ஒன்றைப் பற்றித்தான் என்பதை ஊகிப்பது கடினமல்ல.
இன்றைய நிலையில் கிங்ஃபிஷரில் உடனடி முதலீடு செய்யும் அளவில் இந்தியாவுக்குள் இருப்பவை மொத்தம் 4 நிறுவனங்கள்தான். அவற்றில் ரிலையன்ஸ் தவிர மற்றைய மூவரும் கன்சவேட்டிவ் ஸ்டைல் ஆட்கள். தெரியாத துறையில் தலை போனாலும் கால் வைக்கும் ஆட்கள் அல்ல.  ரிலையன்ஸ் அப்படியல்ல!
கிங்ஃபிஷர் அதிகாரி கூறியதை நம்பலாம், “நெருப்பு இல்லாமல் புகை வரவில்லை”

கருத்துகள் இல்லை: