பேருந்து கட்டண உயர்வு உடனடியாக அமல்: பேருந்து பயணம் கனவாகிவிடுமோ என்று பயணிகள் அதிர்ச்சி
பேருந்து கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சாதாரண பேருந்து முதல் சூப்பர் டீலக்ஸ் பேருந்துகள் வரை அனைத்து பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தி முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்த கட்டண உயர்வு இன்று காலை முதல் அதிரடியாக அமுலுக்கு வந்துள்ளது.
சென்னையில் நகர பேருந்துகளில் குறைந்த கட்டணமாக 3 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மற்ற கட்டணங்கள் இரு மடங்காக உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.
இன்று காலையில் பேருந்தில் ஏறிய பயணிகள், கட்டணம் உயர்த்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். கட்டண உயர்வால் பேருந்து பயணம் கனவாகி போய்விடுமோ என்று பயணிகள் கூறியுள்ளனர்.
விலைவாசி கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், பஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்திருப்பது கண்டனத்துக்கு உரியது என்றும், இந்த விலை ஏற்றத்தை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆளும்கட்சி ஆதரவாளர்களாலேயே ஜீரணிக்கமுடியாத ,நியாயப் படுத்தமுடியாத கட்டனவுயர்வு..இந்நிலை தொடரந்தால் அடுத்த தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைக்கப் போவது ரத்தினக் கம்பள வெற்றி..ஜெயலலிதா அவர்களே சிந்தியுங்கள்..
தமிழக அரசின் இந்த அணுகுமுறை தவறானது ! ஏனென்றால் குறைவான சம்பளம் பெரும் தொலில்லளர்கள் பாதிக்கபடுவர்கள் !எனக்கு மாத சம்பளம் ரூபாய் 3000 .ஆனால் எனக்கு மாத பேருந்து கட்டணம் ரூபாய் 2400 .நான் எப்படி குடும்பத்தை சமாளிப்பது என தெரியவில்லை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக