முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திகார் சிறையில் உள்ளபோதும், தொகுதி மக்கள் இருவருக்கு, பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து, இதய நோய் சிகிச்சைக்கு பணம் பெற்றுத் தந்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதான குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ஆ.ராசா, கைது செய்யப்பட்டு பிப்ரவரி 2ம் தேதியிலிருந்து, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு, நீலகிரி லோக்சபா தொகுதி மக்களின் கோரிக்கைகளைப் பெற்று, உதவியாளர் அனுப்பி வருகிறார்.
அப்படிப் பெறப்பட்ட கோரிக்கைகளில், கோத்தகிரியைச் சேர்ந்த ரவிசெல்வன் என்பவரது குழந்தை பரணிதரன், அன்னூரைச் சேர்ந்த நாகராஜ் ஆகியோர் இதயநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ உதவி கோருபவை.
இக்கோரிக்கைகளை, பிரதமருக்கு பரிந்துரைத்து, பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து, தலா 50 ஆயிரம் ரூபாயை, மருத்துவ சிகிச்சைக்கு ராசா பெற்றுத் தந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக