செவ்வாய், 15 நவம்பர், 2011

சுவாமி எதிர்பார்த்த ‘சிதம்பரம் பைல்’ இன்று கையில்!

viruvirupu.com

New Delhi, India: According to informed sources, Subramanian Swami will get what he has been waiting for: a photocopy of the Central Bureau of Investigation’s (CBI’s) 2G file!  This file contains documents with endorsements and signatures of former Finance Minister P Chidambaram.

2ஜி-ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சுப்ரமணியன் சுவாமி ஆவலுடன் எதிர்பார்த்துள்ள பைல், இன்று அவரது கையில் கிடைக்கும் என்று தெரிகின்றது. உட்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இழுத்துவிட இந்த பைல் உதவும் என சுவாமி சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
சி.பி.ஐ.யால் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட பைல் இது. ஆனால், 2ஜி வழக்கை விசாரிக்கும் பட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த பைலை சி.பி.ஐ. தாக்கல் செய்திருக்கவில்லை. அதில் அமைச்சர் சிதம்பரத்தை மாட்டிவிடும் ஆதாரங்கள் இருப்பதாலேயே சி.பி.ஐ. அமுக்கி விட்டது என்பது சுவாமியின் வாதம்.
இதுபற்றி பரபரப்பு.காமில் வெளியான இதோ திருப்பம்! சி.பி.ஐ.-யால் மறைக்கப்பட்ட பைல், சுவாமியின் கையில்!!"

பட்டியாலா ஹவுஸ் சிறப்பு கோர்ட் நீதிபதி ஷைனி, “சுவாமி கேட்டுள்ள பைலின் போட்டோகாப்பி அல்லது சர்ட்டிஃபைட் காப்பி ஒன்று அவருக்கு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடுகிறேன். இந்த விஷயத்தில் சி.பி.ஐ. தாமதம் செய்யாமல், குறிப்பிட்ட பைலை சுவாமியிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுடிருந்தார்.
சி.பி.ஐ. வட்டாரத் தகவல்களின்படி, இந்த பைல் இன்று (செவ்வாய்கிழமை) சுவாமியிடம் கொடுக்கப்படவுள்ளது.
இவர்கள் குறிப்பிடும் பைல், சிறியது அல்ல. சுமார் 1.2000 பக்கங்கள் உடைய விரிவான பைல் இது. குறிப்பிட்ட பைல் சுவாமியால் கோர்ட் மூலம் கோரப்பட்டு உள்ளதால், இதிலுள்ள விபரங்கள் நிதித்துறையில் உள்ள சில அதிகாரிகளால் மீண்டும் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிகின்றது.
இந்த விவகாரம் நடைபெற்றபோது, ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தார். தற்போது உட்துறை அமைச்சராக உள்ள அவர் சம்மந்தப்பட்ட மற்றொரு பைல், நிதி அமைச்சில் இருந்தே லீக் ஆனதாக சர்ச்சை எழுந்திருந்தது. தற்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும், ப.சிதம்பரத்துக்கும் இடையே மோதல்கூட இந்த விஷயத்தில் ஏற்பட்டிருந்தது.
அது வேறு பைல், சுவாமி கோரியுள்ளது வேறு பைல் என்ற போதிலும், சுவாமி கோரியுள்ள பைலின் உள்விவகாரங்களை தெளிவாக மறு-ஆய்வு செய்வதற்கு திதித்துறை அதிகாரிகளையே அமைச்சர் சிதம்பரம் நாடியதாக தெரிகிறது. அமைச்சர் சிதம்பரம், தனக்கு நம்பிக்கையான நிதித்துறை அதிகாரிகள் சிலரை வைத்தே இந்த மறு-ஆய்வைச் செய்து இருப்பதாகவும் தெரியவருகிறது.
நிதித்துறை அதிகாரிகள் வட்டாரங்களில் கிடைக்கும் தகவல்களில் இருந்து, சுவாமி எதிர்பார்க்கும் முக்கிய விஷயம் ஏதும் இந்த பைலில் கிடையாது என்றே தெரிய வருகின்றது.
சுவாமியின் எதிர்பார்ப்பு, இந்த பைலை வைத்து அமைச்சர் சிதம்பரத்தை 2ஜி வழக்கில் தொடர்பு படுத்தலாம் என்பது. அதாவது, அந்த ஊழல் நடப்பதற்கு இவரும் ஏதோ ஒரு விதத்தில் காரணமாக இருந்திருக்கிறார் என்பதை நிரூபிப்பதே சுவாமியின் நோக்கம். இந்த பைலை வைத்துக்கொண்டு அதை அவரால் செய்ய முடியாது என்பதே நிதித்துறை அதிகாரிகள் மட்டத் தகவல்.
இவர்கள் குறிப்பிடும் 1,2000 பக்க பைலில் பல இடங்களில் அமைச்சர் சிதம்பரத்தில் கையொப்பங்கள் உள்ளன என்பது உண்மைதான். என்டோஸ்மென்ட் சிக்னேச்சர் என்ற வகையில் நிதித்துறைக்கு பொறுப்பான அமைச்சரால் போடப்பட்ட கையொப்பங்கள் அவை.
இந்தக் கையொப்பங்களின் மூலம், யுனிடெக் நிறுவனத்தின் ஈகுவிட்டி டைலியூஷன் 60 சதவீதத்துக்கு மேல் செல்வதற்கு அமைச்சர் சிதம்பரம் அனுமதி கொடுத்திருக்கிறார். கவனமாகப் படியுங்கள், இந்த அனுமதி வழங்கப்படுவதற்கு முன்பே, நோர்வேயை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் டெலிநோர் நிறுவனம், யுனிடெக்கில் 6,200 கோடி ரூபாவை முதலீடு செய்துவிட்டது.
அந்த முதலீடுதான், ஸ்பெக்ரம் வழக்கில் ஒரு அங்கமாக வருகின்றது!
யுனிடெக் நிறுவனத்துக்கு மேலதிக முதலீட்டைப் பெறுவதற்கு அமைச்சர் சிதம்பரத்தின் கையொப்பத்துடன் அனுமதி கொடுக்கப்பட்டது உண்மை. ஆனால், அதற்கு முன்னரே யுனிடெக் நிறுவனம் முதலீட்டை பெற்றுக்கொண்டு விட்டதே! இதனால், ஸ்பெக்ட்ரம் வழக்கில் இந்த பைல் அமைச்சர் சிதம்பரத்தைக் கொண்டு வராது என்பது அதிகாரிகள் தரப்புக் கருத்து.
இங்குள்ள சைட்-கிக், “ஏற்கனவே அனுமதி இல்லாமல் முதலீட்டைப் பெற்ற யுனிடென் நிறுவனத்துக்கு அமைச்சர் சிதம்பரம் எப்படி அனுமதி கொடுத்தார்? அது கண்டிக்கத் தக்கது”  என்று கோர்ட் அமைச்சர் சிதம்பரத்தில் கையில் செல்லமாக அடிக்கலாம். அவ்வளவுதான்.
எதற்கும் சுவாமியின் கையில் பைல் வரட்டும், என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை: