புதன், 16 நவம்பர், 2011

அ.தி.மு.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்த அ.தி.மு.க. அரசைக் கண்டித்து தி.மு.க. இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று 15.11.2011 காலை ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.


சென்னை மெமோ ரியல் ஹால் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு தி.மு.க. பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்றார். இதில் பல்லாயிரக்கணக் கானோர் பங்கேற்றனர்.
1989ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த மக்கள் நலப்பணியார் கள் ஏறத்தாழ 13 ஆயிரம் பேரை எவ்விதக் காரண மும் இன்றி பணி நீக்கம் செய்துள்ள அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து 15.11.2011 அன்று தமிழ் நாடு முழுவதும் மாவட் டத் தலைநகரங்களில் தி.மு.க. இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும் என தி.மு.க. பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்ப ழகன் அறிவித்திருந்தார்.
இதையடுத்து இன்று 15.11.2011 காலை தமிழ் நாடும் முழுவதும் மாவட்ட தலைநரங் களில் தி.மு.க இளை ஞரணி சார்பில் அ.தி. மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. இளைஞரணி யினர் அ.தி.மு.க. அரசை கண்டித்தும், பணி நீக் கம் செய்யப்பட்ட 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை மீண் டும் பணியில் சேர்க்க வேண்டும் எனவும் ஒலி முழக்கங்களை எழுப் பினர். சென்னை அரசு பொது மருத்துவமனை எதிரில் உள்ள மெமோ ரியல் ஹால் அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு தி.மு.க பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று கண்டன உரையாற்றி னார்.

கருத்துகள் இல்லை: