சனி, 19 நவம்பர், 2011

இடி விழுந்த மாதிரியான முடிவுகள் வந்து தமிழகத்தையே அதிர வைத்திருக்கு

""பால் விலை, பேருந்து கட்டணம், மின் கட்டணம்னு எல்லாவற்றையும் உயர்த்தி, அதற்கு நியாயம் சொல்லும் ஜெ.வின் நடவடிக்கை யைத்தானே சொல்றே!''
""ஆமாங்க தலைவரே… நவம்பர் 17-ந் தேதி கேபினட் கூட்டம்னதுமே, ரொம்ப முக்கியமான முடிவுகள் வெளியாகும்னும்,மறுபடியும் மந்திரிசபை மாற்றம் இருக்கும்னும் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. கடைசியா, ஜெ.வே டி.வி.யில் விலையுயர்வு பற்றி அறிவிச்சி, மக்கள் தலையில் இடி விழ வச்சிட்டார். இந்த இடி, உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னாடியே விழும்னு எதிர்பார்க்கப்பட்டதை நம்ம நக்கீரன்தான் அப்பவே எழுதியிருந்தது. உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க ஜெயிக்கணும்ங்கிறதுக்காக லேட்டா விழும்னும் சொல்லியிருந்தது. அதுபோலவே இப்ப விழுந்திடிச்சி.''
""ஜெ தன்னோட உரையில் பெட்ரோல்- டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது பற்றி கண்டனம் தெரிவிச் சிருக்கிறார். பெட்ரோ லியப் பொருட்களோட விலை உயர்ந்தால் எப்படி மற்ற பொருட்களின் விலையும் உயருமோ, அதுபோல மின்கட்டணமும் பேருந்து கட்டணமும் உயர்ந்தால் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையும் உயரும்.''
""தலைவரே… பாலுக்கான கொள்முதல் விலையை 2 ரூபாய் மட்டும் உயர்த்திட்டு, விற்பனை விலையை ஆறேகால் ரூபாய் உயர்த்தியிருக்காங்க. பஸ் கட்டணத்தை ரகவாரியா உயர்த்தியவங்க, பஸ்களின் தரத்தை உயர்த்துவது பற்றி எதுவும் சொல்லலை. அரசு பஸ்ஸில் பயணிக்கிறதே எமனோட வாகனத்தில் போறமாதிரிதான்னு சொல்லும் பயணிகள், எங்க உயிரைப் பணயம் வைக்க, அதிகக் கட்டணம் கொடுக்கணுமான்னு கேட்குறாங்க.'' ""ஏற்கனவே வெளிமார்க்கெட்டில் கடுமையான விலைவாசியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, அரசாங்கம் ஏதாவது உதவி செய்யும்னு எதிர்பார்த்தால், நான் மட்டும் சும்மா விடுவேனான்னு தன் பங்குக்கு பாரத்தை ஏத்தியிருக்குப்பா.''
""ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாடு ஜெ. தலைமையில் நடந்து முடிந்த பிறகு, அதிகாரிகளோட கவனமெல்லாம் எப்படி ஜெ. கிட்டே நல்ல பேரு எடுக்கிறதுங்கிறதில்தான் இருக்குங்க தலைவரே... பவர்ஃபுல் போஸ்டிங் கைப் பிடிக்கிறதுக்காக ஒருத்தருக்கொருத்தர் போட்டா போட்டியில் ஈடுபட்டிருக்காங்க. ரிடைய ராவதற்குள்ளே சீஃப் செகரட்டரி அந்தஸ்துக்கோ டி.ஜி.பி. அந்தஸ்துக்கோ வந்திடணும்ங்கிறதுதான் சீனியர் அதிகாரிகளின் ஒரே கணக்கு. அதற்காக ஜெ.வுக்குப் பிடிக்காதவங்க மேலே நடவடிக்கை எடுக்கிறதுங்கிறதுதான் அவங்க டார்கெட். குறிப்பா, தி.மு.க பிரமுகர்கள் குறி வைக்கப்பட்டிருக்காங்க. 5 வருசம் கழிச்சி ஆட்சி மாறியதும் , கோபாலபுரம் போறதுக்கு நாலைஞ்சு ரூட் இருக்குன்னும், அதில் ஒரு ரூட் மூலம் சமாளிச்சிக்கலாம்ங்கிறதும் அவங்க நம்பிக்கை. அதனால இப்ப நடவடிக்கைகளை வேகப்படுத்தியிருக்காங்க.''

""அடுத்தடுத்த டார்கெட்டில் இருக்கிற தி.மு.க சீனியர்கள் யார்யாராம்?''

""இதுவரைக்கும் வீரபாண்டி, கே.என்.நேரு, பொன்முடி போன்ற சீனியர் மாஜிக்கள் மேலே கைது நடவடிக்கை பாய்ஞ்சுது. அடுத்தகட்டமா துரைமுருகன், எ.வ.வேலு இரண்டு பேர் மேலேயும் பார்வை பதிஞ்சிருக்காம். இவங்க வீடுகளுக்குள்ளே எந்த நேரமும் விஜிலென்ஸ் அதிகாரிகள் நுழையலாம். அதுபோல ஒரு மூத்த-முக்கிய அதிகாரிக்கும் குறிவைக்கப்பட்டிருக்கு. பொதுவா, விஜிலென்ஸ் யாரையும் கைது செய்வதில்லை. அதனால ஜே.கே.ரித்தீஷை கைது செஞ்ச மாதிரி நில மோசடி வழக்கிலும் மாஜி மந்திரிகளை கைது செய்யும் திட்டமும் இருக்காம். இதில், பேராசிரியர் அன்பழகன் பற்றிய டீடெய்லையும் ஒரு டீம் தீவிரமா எடுத்துக்கிட்டிருக்காம். ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இவ்வளவு தூரம் நெருக்கடியானதுக்கு அவர் போட்ட மனுதான் காரணம்னு ஆளுந்தரப்பு நினைக்குது. அதனால தான் அவரைப் பற்றியும் அவரோட வாரிசுகள், உறவினர்கள் பற்றியும் தோண்டுறாங்களாம். பேராசிரியர் கவனத்துக்கு இது போனப்ப, அவரோட இருந்தவங்க எப்ப வேணும்னாலும் அவங்க வரட்டும். புத்தக அலமாரியையெல்லாம் சுத்தம் பண்ணி நாளாகுது. சுத்தம் பண் ணிட்டுப் போகட்டும்னு சொல்லியிருக்காங்களாம்.''

""பேராசிரியர் வரைக்கும் தோண்டுறாங்கன்னா, மு.க.ஸ்டாலின் விஷயத்திலும் ரொம்ப தீவிரமா இருப்பாங்களே..!''

""ஸ்டாலினைப் பற்றியும் அவருடன் தொழில்ரீதியா தொடர்புள்ளவங்களையும் உளவுத்துறை,விஜிலென்ஸ், சி.பி.சி.ஐ.டி ணும் வாட்ச் பண்ணுதுங்கிற தகவலை ஏற்கனவே சொல்லியிருந்தேன். இதற்கிடையில், சி.பி.ஐ. மூலமா ஸ்டாலின் மேலே நடவடிக்கை பாய்ஞ்சுதுன்னா, அது தனக்கு அரசியல்ரீதியா சாதகமா இருக்கும்னு நினைக்கிற ஜெ, டெல்லிக்கு ஒரு டீமை அனுப்பியிருப்பதாகவும் தகவல் வருதுங்க தலைவரே… ஆ.ராசா மந்திரியா இருந்தப்ப அவர் டிபார்ட் மெண்ட்டுக்கு கனிமொழி வருவார்னு சி.பி.ஐ. யிடம் சாட்சி சொன்னவர்களைப் பிடித்து, தொழிலதிபர் பால்வா சென்னைக்கு வரும்போது ஸ்டாலினைத்தான் சந்திப்பார்னு சி.பி.ஐ.யிடம் சொல்ல வச்சி, ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்கணும்ங்கிறதுதான் இந்த டீமோடு மூவ்வாம். இது சரியா வரலைன்னா, தமிழகத்தில் ஸ்டாலின் பற்றித் தகவல்களைத் தோண்டும் துறைகளின் மும்முனைத் தாக்குதல் இருக்குமாம்.''

""பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணைத் தாக்குதலை எப்படி சமாளிக்கிறதுன்னு கார்டன் ரொம்ப யோசிக்குதாமே..''

""2ஜி வழக்கின் ட்ரையலில் ரிலையன்ஸ் அதிகாரிகள் சாட்சியமளிச்சிக் கிட்டிருக்காங்க. கோர்ட்டுக்குப் போறதுக்கு முன்னாடி, ரிலையன்ஸ் ஆபீசிலேயே சீனியர் வக்கீல்களை வச்சி, ஒரு ரிகர்சல் பார்த்துக்குறாங்களாம். கோர்ட் மாதிரியே நடக்கும் இந்த ரிகர்சலை அனில்அம்பானியும் நேரில் கவனிக்கிறாராம். அதே மாதிரி, சொத்துக்குவிப்பு வழக்கை சமாளிக்கிறதுக்காக கார்டனிலும் ஒரு கோர்ட் ரிகர்சல் நடக்குதாம். எந்தக் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்லணும், எதையெதை தவிர்க்கணும்னு ஜெ.வுக்கு அவரோட வக்கீல்கள் சொல்லித் தர்றாங்களாம். சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியிருக்கும் மற்றவங்களுக்கும் இந்த ட்ரையினிங் கொடுக்கப்படுதாம்.''

""அதோடு,இன்னொரு மூவ்வும் நடக்குதுப்பா... கார்டனில் கிடைத்த செருப்பு, நகையெல்லாம் அதிகாரி நல்லம்ம நாயுடு தலைமை யிலான டீமே வச்சதுன்னு கோர்ட் டில் ஜெ. சொல்லியிருந்தார். அந்த ரெய்டில் இருந்த அதி காரிகளில் சிலர் இப்பவும் பணியில் இருக்காங்க. அவங்க மூலமா, இதெல் லாம் கலைஞர் சொல்லி, கொண்டு வந்து வச்ச பொருட்கள்னு சாட்சி சொல்ல வைக்க மூவ் நடக்குது. இதை கோர்ட் எந்தளவுக்கு ஏத்துக்கும்ங்கிறது பற்றி விவாதம் இருந்தாலும், கேஸை இழுத்தடிக்க இது உதவும்னு கார்டன் உறுதியா நம்புது.''

""ஒவ்வொரு வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டிருக் கிறவர்களின் நம்பிக்கை பலமாகத்தான் இருக்குது. தயாநிதி மாறன் மீதான விசாரணையின் நிலைமை என்னவாம்?''

""விரைவில் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டை சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்யவிருக்குது. அந்த ரிப் போர்ட்டுக்குப் பிறகு தயாநிதியை விசாரணைக்கு அழைப்பாங்கன்னும், அதன்பிறகு சி.பி.ஐ எடுக்கிற முடிவின்படி தயாநிதி மாறன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கலாம்னும் தகவல் வருது. சி.பி.ஐ. வட்டாரத்தில் கேட்டால், இதுவரை எங்க வரலாற்றிலேயே இல்லாதபடி, ஒரு கேஸில் எங்க அதிகாரிகள் இரண்டு டீமா இருக்காங் கன்னு சொல்றாங்க. ஒரு டீம், தயாநிதிக்கு எதிரா சரியான ஆதாரம் இல்லை. அதனால அவர் மேலே நடவடிக்கை எடுக்கக்கூடாதுன்னும் இன்னொரு டீம், மற்றவங்க மேலே இருக்கிற கேஸைவிட, இவர் சம்பந்தப்பட்ட கேஸில் நிறைய ஆதாரம் இருக்குன்னும் சொல்லுதாம். தயாநிதியோ, என் மேலேயும் ப.சிதம்பரம் மேலேயும் நடவடிக்கை எடுத்தாதான் கனிமொழி வெளியே வரமுடியும்ங்கிறாராம். என்ன கணக்கில் அவர் சொல்றாருன்னு யாருக்கும் புரியலையாம்.''

""ஞானதேசிகனை என்ன கணக்கில் தமிழக காங்கிரஸ் தலைவரா ஆக்கியிருக் காங்கன்னு அரசியல் வட்டாரத்தில் ஆராய்ச்சி நடக்குதாமே!''

""அவர் அ.தி.மு.க ஆதரவாளர்ங்கிற தால, கூட்டணி மாற்றம்ங்கிற கணக் கோடுதான் சோனியா அவரை தலைவ ராக்கியிருக்கிறார்னு தி.மு.க தரப்பு நம்புது. புதுத் தலைவர் யார்னு டெல்லியில் டிஸ்கஷன் நடந்தப்ப பேசிய வாசன், அ.தி.மு.கவுக்கான கதவையும் நாம மூடிடக்கூடாது. எம்.பி. எலக்ஷனில் அவங்ககூட கூட்டணி வைக்கிற சூழல் வந்தா, அதற்கு ஞானதேசிகன் சரியா இருப்பார்னு சொல்லி யிருக்கிறார். ப.சி.க்கு இது பிடிக்கலையாம். ஆனாலும் அவர் மேலிடத்தின் மன நிலை அறிந்து எதிர்ப் பும் தெரிவிக்கலை யாம். ஞானதேசிகன் தேர்வு செய்யப்பட்ட தன் பின்னணி இது தான்னு டெல்லித்தரப்பு சொல்லுது.''
""ஓ...''
""இன்னொரு டெல்லித் தகவலை நான் சொல்றேன். டெல்லி ஹைகோர்ட்டில் கனிமொழியோட பெயில் பெட்டிஷன் காத்துக் கிட்டிருக்கு. சுப்ரீம்கோர்ட்டில் உள்ள 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பைப் பொறுத்துதான் இந்த பெயில் பெட்டிஷன் மீதான உத்தரவு வரும்னு ஒரு தகவல் உலவினாலும், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மீதான ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கு பெயில் கொடுக்கணும்ங்கிற வாதத்தை, அதே சுப்ரீம் கோர்ட்டின் மூன்று நீதிபதிகள் பெஞ்ச் ஏற்றுக்கொண்டிருக்கு. அது கனிமொழி தரப்பின் நம்பிக்கையை அதிக மாக்கியிருக்கு.''
மிஸ்டு கால்!
தை-1ல் புதுக்கட்சிக் காண முடிவு செய்திருக்கிறார் பா.ம.கவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ வேல்முருகன். திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என பா.ம.க தீர்மானித்துள்ள நிலையில்,அக்கட்சிகளுடன் கூட்டணி என்பதே வேல்முருகனின் நிலைப்பாடாம்.

புது ரவுடிகள் லிஸ்ட்டைத் தயாரிப்பதில் தமிழக காவல்துறை தீவிரமாக இருக்கிறது. தி.மு.க.வினரில் யார் மீதெல்லாம் மிரட்டல் புகார்கள் இருக்கிறதோ அவர்களையும் லிஸ்ட்டில் சேர்க்கச் சொல்லியிருக்கிறதாம் மேலிடம்.
thanks nakkeran+sethuraman,madhurai

கருத்துகள் இல்லை: