வியாழன், 17 நவம்பர், 2011

நாட்டின் எல்லைக்கு கீழே, அரை கி.மீ. நீள ரகசிய சுரங்கப் பாதை சிக்கியது!

Viruvirupu

San Diego, USA: A tunnel stretched about half a kilometer and linked between two border cities of two countries found on Wednesday. An estimated 14 tons of marijuana was seized with the discovery of this tunnel. It linked two warehouses in San Diego, USA; and Tijuana, Mexico. US authorities said this was one of the most significant drug smuggling passages ever found on the United States-Mexico border.

இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் நிலத்தடியே ரகசியமாக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன், அதன் ஊடாக கடத்துவதற்காக வைதக்கப்பட்டிருந்த 14 டன் (14,000 கிலோ) மரிஜூவானா போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா-மெக்சிகோ இடையிலான இந்த ரகசிய சுரங்கப்பாதைதான் இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நீளமான சுரங்கப்பாதை.
இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக் கோட்டுக்கு கீழே நிலத்தடியே செல்லும் சுரங்கப்பாதையின் நீளம் சுமார் அரை கி.மீ. (500 மீட்டர்). அமெரிக்காவின் சான் டியாகோ நகரிலுள்ள வேர்ஹவுஸ் ஒன்றையும், மெக்சிகோவின் டிஜூவானா நகரிலுள்ள வேர்ஹவுஸ் ஒன்றையும் இணைக்கும் வகையில் சாமர்த்தியமாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருந்தது.
அமெரிக்கா-மெக்சிகோ எல்லை
இந்த இடத்தில் தரையடியே சுரங்கப்பாதை ஒன்று இருப்பது எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது?

சான் டியாகோ நகரிலுள்ள வேர்ஹவுஸில் சந்தேகத்துக்குரிய நடமாட்டங்கள் இருப்பதை கடந்த சில தினங்களாகவே அமெரிக்க உளவு அதிகாரிகள் கவனித்திருக்கின்றனர்.
இதையடுத்து அந்த இடம் கண்காணிப்புக்கு உட்படுத்தப் பட்டிருந்தது.
நேற்று (புதன்கிழமை) அங்கிருந்த ட்ரக் ஒன்றில் லோடு ஏற்றப்படுவது தெரிந்தவுடன், அமெரிக்க ஸ்பெஷல் கிரைம் டிவிஸன் டீம் ஒன்று அந்த இடத்தை முழுமையாகச் சுற்றி வளைத்தது.
ட்ரக்கில் 10 டன் மரிஜூவானா சிக்கியது.
அமெரிக்க இமிகிரேஷன் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரி டெரெக் பென்னர், “இந்த லேர்ஹவுஸை நாம் சோதனையிட்டபோது, சுரங்கப்பாதை சிக்கிக் கொண்டது. எமது அதிகாரிகள் இருவர் சுரங்கப்பாதை ஊடாகச் சென்று பார்த்தபோது, மெக்சிகோவிலுள்ள வேர்ஹவுஸை சென்றடைந்தார்கள். மெக்சிகோ அதிகாரிகளுக்கு விஷயம் அறிவிக்கப்பட்டதில், அந்த என்டில், 4 டன் மரிஜூவானா, அமெரிக்கா செல்ல தயாராக இருந்தது சிக்கியது” என்கிறார்.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையின் ஆழம் மற்றும் அகலம் ஆகிய விபரங்களை வெளியிட டெரெக் பென்னர் மறுத்துவிட்டார். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவலை மாத்திரம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மகாணம், சான் டியாகோ நகரை சுரங்கம் தோண்டுவதற்கு கடத்தல்காரர்கள் தேர்ந்தெடுக்க காரணமே, அங்குள்ள மண் இலகுவாக உதிரும் தன்மை கொண்டது என்பதுதான். அப்படியான மண் உடைய தரையை இலகுவாக தோண்டி சுரங்கம் அமைக்கலாம் என்கிறார்கள் அமெரிக்க அதிகாரிகள்.

கருத்துகள் இல்லை: