வெள்ளி, 8 ஜூலை, 2011

contempt of court அரசு மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது?


சமச்சீர் கல்வி வழக்கு: பழைய பாடத் திட்ட நூல்களை அச்சடித்தது ஏன்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்விசமச்சீர் கல்வி வழக்கு தொடர்பான விசாரணையின் போது சென்னை உயர்நிதிமன்ற தலைமை நீதிபதி தமிழக அரசுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வழக்கு நடைபெறும்போது பழைய பாடத்திட்ட புத்தகங்களை அச்சிட நடவடிக்கை எடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள தலைமை நீதிபதி, தமிழக அரசு மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரக்கூடாது என்றும் கூறினார்.

உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சமச்சீர் கல்வி திட்டம் குறித்து ஆராய தமிழக அரசு நியமித்த 9 பேர் கொண்ட குழு அண்மையில் தமது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

தமிழ் படிக்கவே தெரியாதவர்களும், கல்வி வணிகர்களையும் கொண்ட இந்த குழு சமச்சீர் கல்வியை குழி தோண்டி புதைக்கும் விதமாக அறிக்கை தயாரித்திருப்பதாக, அரசியல் பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த அறிக்கை மீதான வழக்கறிஞர்களின் வாதம் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட முதண்மை அமர்வு முன்பாக உயர்நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.
அதிமுக அரசு சார்பாக உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிபி ராவ் தமது வாதத்தை எடுத்துரைத்தார். அப்போது குறிக்கிட்ட தலைமை நீதிபதி இக்பால், வழக்கு விசாரணை முடிவற்கு முன்னதாகவே, பழைய பாடத்திட்டத்தின் நூல்களை அச்சிட தமிழக அரசு டெண்டர் விடுத்தது ஏன்? இதற்காக அரசு மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார்.
நீதிமன்றத்தை தமிழக அரசு கேலிக்கூத்தாக்குவது வேதனையளிக்கிறது என்றும் தலைமை நீதிபதி கூறினார். நூல்களை அச்சிடுவதை ராவ் ஒப்புக்கொண்டதையும் நீதிபதி பதிவு செய்து கொண்டார்.
சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாத், மாநில கல்வி திட்டம் பற்றி எதுவும் அறியாதவர்கள் அடங்கிய குழுவின் அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இந்த வழக்கின் விசாரணை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: