வியாழன், 7 ஜூலை, 2011

யாழ் கோட்டையை மிக விரைவில் சுற்றுலாத் தளமாக மாற்ற நடவடிக்கை

104 மில்லியன் ரூபா செலவில் யாழ் கோட்டை மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலா தளமாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸீல் ராஜபக்‌ஷ அவர்களின் கண்காணிப்பின் கீழ் இடம்பெறும் இவ் வேலைத்திட்டங்கள் விரைவில் நிறைவு செய்யப்படவுள்ள அதேவேளை, சுற்றுலா பிரயாணிகளுக்கு அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு சுற்றுலா தளமாகவும் இக் கோட்டை மாற்றப்படவுள்ளது.
யாழ் கோட்டையானது 1618ஆம் ஆண்டு போத்துக்கேயரால் சிறிய அளவில் நிர்மானிக்கப்பட்டதுடன், 1650 ஆம் ஆண்டு ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டதுடன், பின்னர் 1795ஆம் ஆண்டு பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது. இக் கோட்டையானது யுத்ததின் போது முழுமையாக சேதமடைந்தது.
மேலும் அரசாங்கம் யாழ்பாணத்தில் உள்ள புராதன தளங்களை பாதுகாக்க பல திட்டங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: