செவ்வாய், 5 ஜூலை, 2011

கல்வி முதலாளிகளை கொண்ட ஆய்வுக் குழு அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்


மாணவர்களின் சிந்தனையை வளர்க்கும் வகையில் சமச்சீர் கல்வி புத்தகம் இல்லை-ஆய்வுக் குழு அறிக்கை

சென்னை: சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு தனது ஆய்வு மற்றம் பரிந்துரை அறிக்கையை இன்று சென்னை  செய்யப்பட்டது.

தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் இந்த அறிக்கையை தாக்கல் செய்தார்.

சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது.

அப்பீலை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக ஆய்வுக் குழுவை நியமித்து ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அதன்பேரில் ஆய்வுக் குழு ஆய்வு நடத்தி வநத்து. மொத்தம் நான்கு முறை கூடி குழு உறுப்பினர்கள் 9 பேரும் தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி தலைமையில் ஆலோசனை நடத்தினர்.

இதன் இறுதியில் அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கையை இன்று முற்பகல் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு தாக்கல் செய்தார்.

இதையடுத்து அறிக்கையின் நகல்கள், சமச்சீர் கல்வி கோரும் மனுதாரர்களுக்கும் வழங்கப்பட்டது.

அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?

500 பக்கங்களைக் கொண்டதாக இந்த அறிக்கை உள்ளது. அதில், சமச்சீர் கல்வித் திட்டப் பாடப் புத்தகங்கள் தரமானதாக இல்லை. மாணவர்களின் சிந்தனையை வளர்க்கும் வகையில் புத்தகங்களில் பாடத் திட்டங்கள் இல்லை.

மேலும் பாடப் புத்தகங்களை உருவாக்கியபோது, தேசியப் பாடத் திட்ட வழிமுறைக் கவுன்சிலின் விதிமுறைகளையும் முற்றிலும் பின்பற்றவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன் முதல் தினசரி விசாரணை

அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து வியாழக்கிழமை முதல் இதன் மீதான விசாரணை தொடங்கும் என்று தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் அறிவித்தார். தினசரி விசாரணை நடைபெறும். ஒரு வாரத்திற்குள் இதன் மீது தீர்ப்பு அளிக்கப்படும்.

அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் சமச்சீர் கல்வி பாடத் திட்டம் தொடருமா, அல்லது பழைய பாடத் திட்டம் தொடருமா என்பது தெரிய வரும். அதன் பின்னரே 1 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களைத் தவிர மற்றவர்களுக்குரிய பாடப் புத்தகங்களை மாநில அரசு முடிவு செய்யும்.

English summary
Panel on USE will submit its report to the Madras HC today as per SC order. The nine member panel headed by TN govt's chief secretary had discussed about the Samacheer Kalvi scheme for 4 times. 
சமசீர்கல்வி தரமற்றது என கல்வி முதலாளிகளை கொண்ட குழுவின் ஆய்வு 

கருத்துகள் இல்லை: