திங்கள், 4 ஜூலை, 2011

ஆக்கிரமிப்பு கோயில்களை அகற்ற இந்து அமைப்புகள் எதிர்ப்பு

"மதுரையில் ஆக்கிரமிப்புகள் எனக்கூறி, கோயில்களை மாநகராட்சி அகற்றினால், இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்,'' என தமிழக இந்து ஆலயப் பாதுகாப்புக்குழு பொதுச் செயலாளர் சுந்தரவடிவேல் கூறினார்.

அவர் கூறியதாவது: மதுரையில் ரோடு, பொது இடங்களை ஆக்கிரமித்துள்ள வழிபாட்டுத் தலங்களை சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அகற்ற உள்ளதாக, சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனால், 300 கோயில்கள் அகற்றப்படும். மாநகராட்சி உருவாவதற்கு முன்பே, கோயில்கள் உருவாகின. அவற்றை ஆக்கிரமிப்பு என மக்கள் கூறவில்லை. ஆதலால், கோயில்களை இடிக்கக்கூடாது. அந்த இடத்தை பட்டா அல்லது கிரையம் அல்லது வாடகைக்கு கொடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பாக இருந்தாலும், உரிய ஆதாரங்கள் இருந்தால், அதே இடத்தில் கோயில்கள் இருக்கலாம் என மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.மாநகராட்சியின் இந்நடவடிக்கையை கண்டித்து, இந்து அமைப்புகள் சார்பில் மக்களிடம் கையெழுத்து பெறுவோம். கோயில் ஆவணங்களை மாநகராட்சியிடம் சமர்ப்பிப்போம். மக்களைத் திரட்டி போராடுவோம் என்றார்.முன்னதாக ஆலோசனைக் கூட்டத்தில், இந்து முன்னணி மாவட்டத் தலைவர் பரமசிவம், மாநிலக்குழு உறுப்பினர் முத்துக்குமார், ஏ.பி.வி.பி.,மாநில துணைத் தலைவர் ஆதிசேஷன், கோயில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Haja Husein - Toronto,கனடா
2011-07-03 19:44:20 IST Report Abuse
ஆக்கிரமித்து கட்டியிருந்தால்,போக்குவரத்து,பொதுமக்களுக்கு இடையுராக இருந்தால் இடிக்க வேண்டியதுதான்.அது கோயிலானாலும்,பள்ளிவாயிலானாலும்,சர்ச் ஆனாலும் சரி. எது எல்ல நாட்டிலும் உள்ள நடைமுறை.
Haja Husein - Toronto,கனடா
2011-07-03 18:21:04 IST Report Abuse
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்தான்.அதற்காக ஊரெல்லாம் கோயிலாக இருந்தால் குடியிருப்பது எங்கே?

கருத்துகள் இல்லை: