திங்கள், 9 மே, 2011

500 அகதிகளுடன் சென்ற கப்பல் பாறையில் மோதியது

ரோம்,மே 8: 500 அகதிகளுடன் சென்ற கப்பல் பாறையில் மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.லிபியா நாட்டில் ஆசியா மற்றும் ஆப்ரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பாத்து வருகிறார்கள். இவர்களில் 500 பேர் இத்தாலி நாட்டுக்கு அகதிகளாகச் செல்ல முடிவு செய்து ஒரு கப்பலில் புறப்பட்டனர்.இத்தாலி அருகே லம்பிடிசா என்ற தீவில் ஞாயிற்றுக்கிழமை இவர்கள் சென்ற கப்பல் திடீரென்று ஒரு பாறையில் மோதி நின்றது. இதனால் கப்பலில் இருந்த அகதிகள் பயத்தில் அலறினார்கள். சிலர் கடலில் குதித்து தத்தளித்தனர். அப்போது இந்த வழியாக வந்த இத்தாலிய கடலோரக் காவல் படையினர் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.இந்த விபத்தில் சில அகதிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இந்த நிலையில் 800 அகதிகளுடன் மற்றொரு கப்பல் ஞாயிற்றுக்கிழமை லம்பிடிசா தீவுக்கு வந்தது. இந்த ஆண்டு இது வரை 30 ஆயிரம் பேர் லம்பிடிசா தீவுக்கு அகதிகளாக வந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் துனிசியா நாட்டைச் சேர்ந்தவர்கள். துனிசியா நாட்டில் கடந்த ஜனவரி மாதம் புரட்சி வெடித்ததில் இருந்து பலர் வாழ்வு தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: