சனி, 14 மே, 2011

சென்னை: நாளை மறுநாள் (16ம் தேதி ) வரும் திங்கட்கிழமை வாரத்தின் முதல்நாளில் , அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., முதல்வராக பதவியேற்கிறார். ராகு - கேது பெயரும் நேரத்தில் ஜெ., பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் தனி மெஜாரிட்டி பெற்றுள்ள அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று மதியம் ஜெ., தலைமையில் நடப்பதாக இருந்தது. ஆனால் இக்கூட்டம் நாளை ( ஞாயிற்றுக்கிழமை ) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கென தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சென்னையில் குவிந்துள்ளனர்.

நாளை காலை 9. 30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் ஜெ., தலைமையில் எம்.எல்.ஏ., க்கள் கூட்டம் நடக்கிறது. இதில் ஜெ., அ.தி.மு.க., சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்படுவார் பின்னர் தொடர்ந்து கவர்னரை சந்தித்து பேசுவார். இதனை தொடர்ந்து அவர் முதல்வராக பதவியேற்க வருமாறு அழைப்பு கொடுப்பார்.

பல்கலை., நூற்றாண்டு மண்டபத்தில் பதவி‌யேற்பு விழா : வரும் திங்கட்கிழமை காலை சென்னை பல்கலை., நூற்றாண்டு மண்டபத்தில் நடக்கும் விழாவில் முதல்வராக ஜெ., பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க குஜராத் முதல்வர் உள்பட முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலையில் 9. 55 க்கு ராகு, கேது பெயர்ச்சி இருப்பதால் இந்நாளில் அவர் பதவியேற்க முடிவு செய்திருக்கலாம் என அ.தி.மு.க.,வின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது .


சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ‌ஜெயலலிதா, நாளை கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரப்போவதாக கூறினார்.

தலைவர்கள் சிலைகளுக்கு ஜெ., மரியாதை செலுத்தினார் : முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் ஜெ., இன்று மதியம் கட்சி தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்குள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர், மவுண்ட்ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலையிட்டு, தொடர்ந்து மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., சமாதி மற்றும் அண்ணா சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி, 198 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், அ.தி.மு.க., மட்டும் போட்டியிட்ட, 160 தொகுதிகளில், 147ல் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
தமிழகத்தின், 14வது சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் 13ம் தேதி நடந்த தேர்தலுக்கான, ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை நடந்தது. ஆரம்பம் முதல், அ.தி.மு.க., கூட்டணியே பெரும்பாலான இடங் களில் முன்னணியில் இருந்தது.பெரும்பாலான, அ.தி.மு.க., கூட்டணியினர் வெற்றி முகத்தில் இருந்தனர். தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில், பெரும்பாலான அமைச்சர்கள் தோல்வியைத் தழுவினர். அதேபோல, தி.மு.க., தலைமையின் குடும்ப சிபாரிசு மூலம் சீட் வாங்கியவர்களும் தோல்வியடைந்தனர்.அ.தி.மு.க., கூட்டணியில் அக்கட்சி போட்டியிட்ட, 160 தொகுதிகளில், 148ல் அமோக வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மை பெற, 118 எம்.எல்.ஏ.,க்களே தேவை என்பதால், அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைப்பது மிக எளிதானது.

தே.மு.தி.க., போட்டியிட்ட, 41 தொகுதிகளில், 29ல் வெற்றி பெற்றது. இதன் மூலம், பிரதான எதிர்க்கட்சி வாய்ப்பு, தி.மு.க.,வுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க.,வே பிரதான எதிர்க்கட்சி ஆகிறது.அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், பார்வர்டு பிளாக், கொங்கு இளைஞர் பேரவை போன்ற கட்சிகளும், பிரதான கட்சிகளை எதிர்த்து, தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றன. ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா, திருவாரூரில் கருணாநிதி, ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் அமோக வெற்றி பெற்றனர். அ.தி.மு.க., வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சியினர், போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டு முன்பும், சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகம் முன்பும் குவிந்து, பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். அதே நேரத்தில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், போயஸ் கார்டனுக்கு படையெடுத்தனர்.

அ.தி.மு.க.,வின் வெற்றி உறுதியானது தெரிந்ததும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை, கவர்னருக்கு, கருணாநிதி அனுப்பி வைத்தார்; அதை கவர்னர் ஏற்றுக் கொண்டார்.
Arockia Churchill - Chennai,இந்தியா
2011-05-14 14:01:36 IST Report Abuse
இது ஒன்றும் ஜெயலலிதாவுக்கோ அல்லது அதிமுக வுக்கோ கிடைத்த வெற்றி அல்ல. மாற்றம் வேண்டும் என்பதற்காக தமிழக மக்கள் வேறு வழி இல்லாமல் உங்களை தேர்ந்து எடுத்திருக்கிறார்கள். ( திமுக அல்லது அதிமுக ). கருணாநிதி மற்றும் திமுக வுக்கு எதிரான மன நிலையில் மக்கள் இருந்ததனர். கருணாநிதி நிறைய நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால் அவற்றை ஒழுங்காக செயல்படுத்தவில்லை. அனைத்து திட்டங்களிலும் ஊழல். அனைத்து துறைகளிலும் அவரின் குடும்ப ஆதிக்கம். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு. ஆனால் கருணாநிதி அரசியல் நாகரீகம் மிக்கவர். ஜெயலலிதா வைகோ வை அவமானப்படுத்தி வெளியேற்றினார், கூட்டணி கட்சி தலைவர்களை மதிக்காமல் செயல்பட்டார். ஜெயலலிதாவிடம் திறமை இருந்தால் மட்டும் போதாது, மற்றவர்களை மதிக்கும் பண்பும், தான் என்ற ஆணவம், அகம்பாவம் ஆகியவற்றை விட்டொழித்து நல்ல தலைவருக்குரிய பண்புகளும் இருக்க வேண்டும். அப்போதுதான் அவரது ஆட்சி சிறப்பானதாக இருக்கும். ஆனால் ஜெயலலிதாவால் அவரது குணங்களை மாற்றிக்கொள்ள இயலாது. எது எப்படியோ, தமிழக மக்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டால் நல்லது. வைகோ ஒரு நல்ல தலைவர், ஆனால் அவருக்கு அரசியல் சூது வாது தெரியவில்லை, அவரை ஏமாற்றி விடுகின்றனர். இனிமேலாவது அவர் மதிமுக வை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல வேண்டும். அடுத்த சட்டபேரவை தேர்தலிலாவது தமிழ் நாட்டுக்கு ஒரு நல்ல தலைவர் கிடைப்பாரா?
Raj - Detroit,யூ.எஸ்.ஏ
2011-05-14 12:32:33 IST Report Abuse
ஆரம்பிச்சிடாங்க. அம்மா காலில் விழுந்து தொழிலை தொடங்கும் ரத்தத்தின் ரத்தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழ்நாடு மிஞ்சுமா என்று 4 வருடங்களுக்கு பிறகு பார்க்கலாம். நாங்களும் திமுகவுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிப்பார்கள்.
ashokan - thanjavur,இந்தியா
2011-05-14 12:08:26 IST Report Abuse
ராஜீவ் காந்தி இறந்தாலும் பிரபாகரன் இறந்தாலும் பாதிப்பு தி மு க வுக்குதான் தமிழா தமிழா தமிழா
KIm - seoul,தென் கொரியா
2011-05-14 07:26:31 IST Report Abuse
அவனுக திமுக 10 வருஷம் கொள்ளை, இந்தம்மா அதிமுக ஒரு 5 வருஷம் மீண்டும் கொள்ளை அடிக்கணும். அட விடுங்கப்பா, but people watch jaya and sasi !hope not like before adopted son Marriage
Ariharan - Nellai,இந்தியா
2011-05-14 06:14:17 IST Report Abuse
வழக்கம் போல உங்கள் அதிகாரத்தை காட்டி உங்கள் எதிரிகளை அடக்குவதில் காட்டாதீர்கள்.... திமுக ஆட்சியில் நடந்த தவறுகளை சரி செய்யுங்கள்... மக்களுக்கு நல்லது செய்யுங்கள்.. அவர்களின் வாழ்வாதாரம் உயர வழி வகை செய்யுங்கள்... திமுக அரசை குறை கூறுவதை விட்டு விட்டு பல தொலை நோக்கு திட்டங்களை தாருங்கள்.. உதாரணம் சட்டம் ஒழுங்கு, மின்சாரம், விலைவாசி,மணல் கொள்ளை, தமிழக மக்களுக்கு வேண்டிய பாசன நீர், இலங்கை தமிழர் பிரச்சனை, இன்னும் பல இதெற்கெல்லாம் ஒரு நல்ல தீர்வை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.. மொத்தத்தில் உங்களிடம் நல்ல ஆட்சியை எதிர்பார்க்கிறோம்....
Kumar K - Chennai,இந்தியா
2011-05-14 04:49:44 IST Report Abuse
பேய விட நாயே நல்லதுன்னு முடிவேடுதுருக்கொமுங்கோ.. இருக்ற தொழில்துறை எல்லாத்தையும் ஒரு குடும்பத்து வாரிசுகள் மட்டும் கபளீகரம் செய்ய விட்டுட்டு வருங்காலத்துல ஜென்மத்துக்கும் மத்த எல்லாரும் ரெண்டாந்தர முதலாளிகளாகவே இருக்கறத விட சசிகலா & குரூப் பெட்டர்னு தோணுச்சு.. முடிவெடுத்துட்டோம்.. என்ன செய்ய.. இந்த பேயவும் நாயவும் விட்டா எங்களுக்கு வேற நம்பிக்கையான தலைமை இல்லையே..
Santhosh Gopal - Chennai,இந்தியா
2011-05-14 01:19:26 IST Report Abuse
அதிகமான இடங்களில் ADMK அடிஆட்கள் துணையுடன் வாக்கு எண்ணிக்கையின் data entry யில் குளறுபடி செய்து அதிமுக அனைத்து இடங்களிலும் வென்றிருக்கிறது..... தேர்தல் ஆணையமும் இதற்கு துணை போயிருப்பதுதான் மிகவும் கொடுமை மற்றும் வெட்ககேடானது.... இதற்கு உடனே மத்திய அரசு சிபிஐ விசாரணை அமைத்து வாக்கு எண்ணிக்கையை திரும்பவும் முறையாக நடத்தவும்.... இதுமாதிரில்லாம்(ஜெயலலிதா தோற்றிருந்தால் இப்படி தான் புலம்பி இருப்பார்) சொல்லாமல் மக்கள் தீர்ப்பை கண்ணியமாக எற்றுகொண்டதற்கு அவரை பாராட்டியே ஆக வேண்டும்.
Nathan - Manama,பஹ்ரைன்
2011-05-14 14:07:11 IST Report Abuse
திமுக அரசு போகவேண்டியதுதான். ஆனால் இனிமேல் என்னென்ன நடக்கும். இன்னும் இரண்டு வாரத்திற்குள் விஜயகாந்த் ஜே வினால் அவமானப்படுத்த படுவார்., அவர் உண்மையான எதிர் கட்சியாக செயல் பட தொடங்குவார். காம்ரேட்களுக்கும் அதே கதி தான். ஏனென்றால் ஜே காங்கிரஸ் பக்கம் இணைவார். அமைச்சர்கள் , எம் எல் ஏக்கள் எல்லோரும் ஜே காலில் விழுவார்கள், பழ கருப்பய்யா தவிர. ஜே வின் பிறவிக்குணம் மாறாது. ஆனால் திமுக ஆட்சியை விட சற்று பெட்டெர் ஆக இருக்கும்....
 
 

கருத்துகள் இல்லை: