தமிழகத்தில் பெரும அளவு மக்களால் தந்தை பெரியார் என்று போற்றப்படும் பெரியார் சிலை குறித்த செய்தியில் ஈவேரா சிலை சேதம் என்று தலைப்பிட்டு தனது பார்பன, இந்துத்துவ அரிப்பை செய்தித்தலைப்பாக வெளி இட்டுள்ளது தினமலர். செய்தி இதழ்கள் தலைவர்களின் பெயரை போட்டு எழுதலாமா அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்ட பெயர்களை வைத்து அழைக்கலாம் என்று கேட்டால் தலைவர்களின் பெயரைப் போட்டு எழுதுவது தவறில்லை என்பது சரியான நிலைப்பாடு என்றாலும் மறைந்த பெண்ணிய எழுத்தாளர் அனுராதா இரமணனை கையைப் பிடித்து இழுத்தவர் என்று சொல்லப்படும் மற்றும் சங்கரராமன் கொலை வழக்கில் வாய்தா வாங்கும் காஞ்சி மட சாமியார் சுப்பிரமணியும் அவரது இளவலையும் பெயரிட்டு இந்த செய்தி இதழ்கள் எழுதுவதில்லை மாறாக 'பெரியவா, பாலப் பெரியவா' என்றே எழுதுகின்றன என்பதில் இருந்து இவர்களின் தமிழர் எதிர்ப்போக்கு மற்றும் இந்துத்துவ நிலைப்பாடு வெட்ட வெளிச்சம். இதே தினமலர் தம் நிறுவனர் பெயரை 'ராமசுப்பையர்' என்று சாதிப் பெருமையுடனே எழுதிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தினமலரை கண்டனம் செய்யவோ, தினமலர் தம் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நான் இதைக் குறிப்பிட வில்லை, நாய்வாலையும், சாதி மதவெறியர்களையும் நிமிர்த, நிறுத்த முடியாது.
பெரியார் வெறுப்பாளர்கள் கோழைகள் போல் இரவு நேரங்களில் பெரியார் சிலைகளுக்கு சேதம் விளைவிப்பது பகுத்தறிவு பகலவன் கருணாநிதி ஆட்சி காலங்களில் தான் அவ்வப்போது நடைபெறுகிறது, கடந்த முறை திருவரங்கத்தில் பெரியார் சிலைக்கு சந்தனம் குங்குமம் வைக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்ட போது கருணாநிதிய ஆட்சியில் இருந்தார்.
கருணாநிதி பெரியாரின் வாரிசு, காவலன் என்று காட்டிக் கொண்டாலும் அவருடைய ஆட்சியின் போது தான் பெரியார் எப்போதும் அவமரியாதை செய்யப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக