திங்கள், 6 செப்டம்பர், 2010

காவித் தீவிரவாதம் உருவெடுத்து வருவதாக ப.சிதம்பரம்


நாட்டில் காவித் தீவிரவாதம் உருவெடுத்து வருவதாக கூறிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பு கடுமையாக சாடியுள்ளது.

ப.சிதம்பரத்தின் காவித் தீவிரவாத கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, அந்த அமைப்பின் பத்திரிகையான 'பாஞ்சஜன்யா' வில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில், சிதம்பரத்தின் இந்தக் கருத்து காங்கிரஸின் வாக்குவங்கி அரசியலை வெளிப்படுத்துவதாக உள்ளது என குற்றம்சாற்றப்பட்டுள்ளது.

'புனிதப் போர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆதரவுடன் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படும்போது, 'காவித் தீவிரவாதம்' எனக் குறிப்பிடுவது வாக்குவங்கிக்கான ஒரு அரசியல் சதி என்றும், ஆர்எஸ்எஸ் பத்திரிகையான பாஞ்சஜன்யாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற மாநில காவல்துறை தலைவர்கள் கலந்துகொண்டு பேசுகையில் இக்கருத்தை தெரிவித்த சிதம்பரம், காங்கிரஸின் மனநிலையைத்தான் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தற்போதய அரசில் தங்களது நலன்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை நாட்டில் உள்ள 85 விழுக்காடு இந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், ஒன்றுபட்ட இந்து சக்தி மட்டுமே தேசவிரோத சதிச்செயல்களை தோற்கடிக்க முடியும் என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: