சனி, 11 செப்டம்பர், 2010

1500 ஆண்டுகளுக்கு முன்பே ஆன்டிபயாடிக்கை பயன்படுத்திய வடக்கு ஆப்பிரிக்கர்கள்

பாக்டீரியா ஒரு ஆன்டி பயாடிக் என்பது தெரியாமலேயே அதை அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர
கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கு முன்பே வடக்கு ஆப்பிரிக்கர்கள் ஆன்டிபயாட்டிக்கை பயன்படுத்தியுள்ளதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

பீருடன் சேர்த்து டெட்ராசைக்ளின், ஸ்டிரெப்டோமைசிஸ் போன்ற பாக்டீரியாக்களை வடக்கு ஆப்பிரிக்கர்கள் பயன்படுத்தியுள்ளனராம்.

சூடான், எகிப்து எல்லைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புகளை வேதியியல் ஆய்வுக்கு உட்படுத்தியபோது இது தெரிய வந்துள்ளது. ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்ட எலும்புகள் கிடைத்த இடம் ஒரு காலத்தில் நூபியா என அழைக்கப்பட்டது. அப்பகுதியில் டெட்ரா சைக்ளினை உற்பத்தி செய்யும் பாக்டீரியா மண்ணில் இருப்பது தெரிய வந்துள்ளது.

இப்பகுதியில் பீர் உற்பத்தி மிகவும் பிரபலமானது. குறிப்பாக பழங்காலத்து எகிப்தில் பீர் உற்பத்தி அக்காலத்தில் வெகு பிரபலமாக இருந்துள்ளது. அக்காலத்தில் நூபிய மக்கள் ஸ்டிரெப்டோமைசிஸ் அல்லது அது தொடர்பான பாக்டீரியாக்களை பீர் தயாரிக்க பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் அடர்த்தியான பீரை அவர்கள் தயாரித்துள்ளனர். இந்தப் பீரை 2 வயது முதலானவர்கள்
அருந்தியுள்ளனராம்.

அவர்கள் பயன்படுத்தி வந்த பாக்டீரியா ஒரு ஆன்டி பயாடிக் என்பது தெரியாமலேயே அதை அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர் என்கிறது அந்த ஆய்வு.

கருத்துகள் இல்லை: