செவ்வாய், 7 செப்டம்பர், 2010

அமெ ரிக்காவையே உலகமயம் ஒழித்துக் கொண்டு இருக்கும்போது... பூனை போல இருக்கும் இந்தியாவின்

உலை வைத்த உலகமயம்... ஓலமிடும் ஒபாமா...
இது காலம் வரை எங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தவறு செய்துவிட்டோம். இனி, எங்கள் நாட்டின் பொருளாதாரம் பாதுகாக்கப்பட்ட பொருளாதாரமாக இருக்கும். அதனால் சுண்டைக்காய் முதல் சூரியசக்திவரை அனைத்தும் இனி எங்கள் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும். அனைத்து வேலைக ளும் என்நாட்டு மக்களுக்குத்தான். உள்நாட்டினருக்கு வேலை கொடுக் கும் கம்பெனிகளுக்கு வரி விலக்கு. வெளிநாட்டினருக்கு... குறிப்பாக இந்தியாவுக்கு வேலை வாய்ப்பு களைக் கொடுப்பவர்க ளுக்கு இனி எந்தச் சலுகையும் கிடைக்காது” -இப்படி ஒப்பாரி வைத்திருக்கி றார் உலகம் முழுக்க தனியார்மயத் தைக் கட்டவிழ்த்துவிட்ட, ‘உலக நாட்டாமை’யான அமெரிக்காவுக்கு இப் போது அதிபராக இருக்கும் ஒபாமா.

உலகமயம்என்ற பெயரில் உலக நாடுகளை, தற்சார்பு கொள்கைகளி லிருந்து பிரித்து பன்னாட்டு கம் பெனிகளின் கொட்டிலில் அடைக்க மூலக்காரணமான அமெரிக்காவே, தன்னையும் அறியாமல் அந்தக் கொட்டிலில் மாட்டிக்கொண்டது தான் வேடிக்கை. தடையற்ற வர்த் தகம்பேசிய நாட்டின் தலைவர், இப் பொழுதுஎல்லாவற்றுக்கும் தடை வேண்டும்என்பதுதான் வேடிக் கையிலும் வேடிக்கை.

ஆனால், ஒபாமா ஒப்பாரி வைத் தாலும் ஒன்றும் நடக்காது என்பது தான் அமெரிக்க உண்மையாக இருக் கிறது. தன்வினை தன்னைச்சுடும்என்பார்களே அதைத்தான் அமெ ரிக்கா அனுபவிக்கத் தொடங்கியுள் ளது. வேலை வாய்ப்புகளைக் கொடுக்கும் தனியார் கார்ப்பரேட் கம் பெனிகள், “நாங்கள் சேவை செய் யவா தொழில் நடத்துகிறோம். காசு பார்க்கத்தானே! அதனால் எங்கு குறைந்த கூலிக்கு, அதிக வேலை செய்யும் அடிமைகள் கிடைப்பார் களோ அங்கு போகிறோம்என்று மிரட்டுவது தனிக்கதை.

யானை பலம் கொண்ட அமெ ரிக்காவையே உலகமயம் ஒழித்துக் கொண்டு இருக்கும்போது... பூனை போல இருக்கும் இந்தியாவின் நிலையை நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்குகிறது.

ஏற்கெனவே இங்கே எடுக்கப் பட்ட தவறானப் பொருளாதாரக் கொள் கைகள் காரணமாக, கிட்டத்தட்ட 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என் பது நாடறிந்த சங்கதி. இப்போதும் கூட அந்தத் தற்கொலைகள் தொட ரவே செய்கின்றன. பணக்கார நாட் டில் மானியத்தில் விளையும் பொருட்கள், இந்தியச் சந்தையில் குவிகின்றன. கடன் வாங்கி விளை விக்கும் உள்ளூர்விவசாயிகள், உலக சந்தைக்கு ஈடுகொடுக்க முடியா மல், விவசாயத்தை விட்டு வெளி யேறிக் கொண்டே இருக்கிறார்கள். உயிரைத் துறந்து கொண்டிருக் கிறார்கள்.

உலகமயமாக்கல் என்பது இந்தியா போன்ற நாடுகளை உலை யில் தள்ளுமே தவிர, உருப்படியான தாக ஒன்றும் இருக்காதுஎன பல் வேறு தரப்பினரும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்கள். அதையும் மீறி உலகமயமாக்கல் விஷயத்தில் உறுதியாக நின்ற இந்தியா, தற்போது திருடனுக்கு தேள் கொட்டியது போல் விழித்துக் கொண்டிருக்கிறது.

கட்டுப்பாடு, பாதுகாப்பு இவை யெல்லாம் கொண்ட பொருளாதார வளர்ச்சிதான் பாதுகாப்பானது என்று தன்னைத் திருத்திக்கொள்ள தயாராகிவிட்டது அமெரிக்கா. அதைப் பார்த்தாவது இந்தியாவுக்கு புத்தி வரவில்லை என்றால், ஆண்ட வனால்கூட இந்தியாவைக் காப்பாற்ற முடியாது.

நீடித்த, நிலைத்த விவசா யத்தில் தோற்றுப்போயிருக்கும் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடு களின் சித் தாந்தத்தை இங்கே திணிக்காமல், நமது பாரம்பரிய அறி வை முறைப்படுத்தினாலே... இன் னொரு இந்தியாவுக்கு சோறு போட முடியும் என் பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி: பசுமை விகடன் (10.9.2010)

கருத்துகள் இல்லை: