வியாழன், 9 செப்டம்பர், 2010

முரளி, மனைவி எழுப்பியபோது, அசைவற்று கிடந்தார்.

சென்னை வளசரவாக்கம் இந்திரா நகரில் நடிகர் முரளி வீடு உள்ளது. மனைவி ஷோபா. காவியா என்ற மகளும் ஆதர்வா, ஆகாஷ் என்ற மகன்களும் உள்ளனர். வழக்கமாக அதிகாலையில் எழுந்துவிடும் பழக்கம் உடையவர் முரளி. காலை 5 மணிக்கு அவரை மனைவி ஷோபா எழுப்பியபோது, அசைவற்று கிடந்தார். அதிர்ச்சியடைந்த ஷோபா, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதித்து பார்த்த டாக்டர், ஒரு மணி நேரம் முன்பே அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
மரணம் அடைந்த முரளியின் உடலுக்கு திரையுலகம் அஞ்சலி செலுத்தி வருகிறது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவக்குமார், வயதே ஆகாத ஒரு கலைஞன். பூ விலங்கு படத்தில் நடித்ததுபோலவே முரளி இருப்பார். வயதே ஆகாது. அப்படியே இருப்பார். அவருடைய பையன் நடித்த படம் அண்மையில்  வெளிவந்துள்ளது. முரளி மகளுக்கு நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார்கள். அந்த திருமணத்தைக் கூட பார்க்க முடியாத நிலையில் முரளி மரணம் அடைந்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் கடவுளை சபிக்கிறதைத் தவிர வேறு வழியில்லை. வேறு எதுவும் சொல்ல தோணவில்லை. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.

நடிகர் வடிவேலு, நடிகர் முரளி எப்போதும் மச்சான் மச்சான் என்றுதான் கூப்பிடுவார். நடிகர் மட்டும் அல்ல சிறந்த மனிதர். படப்பிடிப்பில் டென்ஷனாக இருந்தாலும், அதை ஈஸியாக குறைத்து விடுவார். இன்றைக்க்கு அவர் எல்லாத்தையும் டென்ஷனாக்கி விட்டு போய்விட்டார். முரளி மரணம் அடைந்துவிட்டார் என்று கேள்விப்பட்டதும் திரையுலகம் மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகமே அதிர்ச்சியாகியுள்ளது. அவரை இழந்தது கஷ்டமாக உள்ளது. கூட நடிச்ச எங்களுக்கே கஷ்டமாக இருக்கும்போது, அவரது குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை: