சென்னை சத்யம் திரையங்கில் நடிகர் சுந்தர்.சி. நடித்த நகரம் மறுபக்கம் என்ற படத்தின் குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு குறுந்தகடை வெளியிட, நடிகர் கமல் பெற்றுக் கொண்டார்.
விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி,
இந்தப் படத்தில் எத்தகைய காட்சிகள் இருக்கும் என்பதற்கு ஒரு சான்றாக சுந்தர் சி, வடிவேலு நடித்த ஒரு காட்சி இங்கே காட்டப்பட்டது. எனக்கு அந்தவொரு காட்சியிலேயே தமிழகத்தில் நடைபெறுகின்ற அரசியல் நிகழ்ச்சி படம் பிடித்துக் காட்டப் பட்டது போன்ற எண்ணம் தோன்றியது.
சுந்தர் சி. கதாநாயகனாக நடிக்கும்போது, உனக்குப் பதிலடி வேறு இடத்திலே கொடுக்கிறேன் வா என்று வடிவேலு சொல்லிவிட்டு எந்த இடத்திலும் சந்திக்காமல், பதிலடியும் கொடுக்காமல், எங்கேயோ மலை உச்சியிலே போய் உட்கார்ந்து கொண்டதைப் போல வடிவேலு தான் வீரன் என்றும், அந்த வீரத்தைக் காட்ட இது இடம் அல்ல, இது நேரமும் அல்ல என்றும் சொல்வது நல்ல நகைச்சுவையாக, இன்றையதினம் நாட்டிலே இருக்கின்ற அரசியல் நிகழ்ச்சிக்கு எடுத்துக்காட்டாக படம் பிடிக்கப்பட்டிருப்பதாக நான் கருதுகின்றேன்.

நம்முடைய தம்பி சுந்தர் சி. பற்றி இங்கே சொன்னார்கள். அவர் அருணாசலம் படத்தில் பாடல் வரியிலே சேர்ப்பதற்கு லிங்கம் கிடைக்காத காரணத்தால், அண்டாவைக் கவிழ்த்து இதுதான் லிங்கம் என்று சொல்லி, படமெடுத்தார் என்று சொன்னார்கள். அண்டப் புளுகைகளையெல்லாம் கவிழ்த்து இதுதான் ஆண்டவன் என்று சொல்கின்ற காலத்தில், சுந்தர் சி. எவ்வளவு பெரிய சுயமரியாதைக்காரராக இருந்து அந்தப் படத்திலே பகுத்தறிவினை விதைத்திருக்கிறார் என்பதை எண்ணும்போது, இந்தப் படத்திலும் அது போன்ற பகுத்தறிவு துளிகளை எதிர்பார்க்கிறேன்.
அவர் வெறும் சினிமாக்காரராக மாத்திரமல்ல, சிந்தனையாளராகவும் இருக்கிறார் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. அவரைப் போன்றவர்கள் கருணாநிதி பாராட்டி விட்டாரே என்று பயந்து விடக் கூடாது. நாம் அண்டாவைக் கவிழ்த்து ஆண்டவன் என்று சொன்னோம் என்பதற்காகப் பயந்து விடக் கூடாது. பெரிய சிந்தனைகளை விதைத்திட வேண்டும். நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே சுத்தி வந்து மொணமொணன்னு சொல்லும் மந்திரம் ஏதடா, நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்” என்று சித்தர் சிவபாக்கியரே பாடியிருக்கிறார். அதனால் பயப்படாமல் இந்தக் கருத்துக் களை படக் காட்சிகள் வாயிலாகவும் எடுத்துச் சொல்வது தவறல்ல. இந்தப் படத்திலே இது போன்ற பகுத்தறிவு கருத்துக்கள், சீர்திருத்தக் கருத்துக்கள் நிறைய வரவேண்டுமென்று நான் விரும்புகிறேன். பயப்படக் கூடாது.
இவரை அழைத்தால் அவருடைய கட்சிப் பிரச்சாரம் செய்கிறாரே என்று எண்ணக் கூடாது. கட்சிப் பிரச்சாரம் என்பது சரியல்ல கட்சி என்பதும் சரியல்ல. கட்சி என்பது ஒரு இலட்சியத்திற்காகத் தான் இருக்கிறது. ஒரு கொள்கைக்காகத் தான் இருக்கிறது. அப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு தான் குஷ்பு இந்தக் கட்சியிலே தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.
ஆகவே இனி இவர்கள் இருவரும் சேர்ந்து இந்த இயக்கத்தின் கொள்கைகளை வளர்க்க வேண்டும், இலட்சியங்களை வளர்க்க வேண்டும், இவைகளை வளர்ப்பதற்காக அவர்கள் பாடுபட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். குஷ்பு மாத்திரம் தி.மு.கழகத்திலே சேர்ந்திருக்கிறார் என்றால் போதாது. சுந்தரும் குஷ்புவோடு சேர்ந்திருக்கிறார் என்ற அளவிற்கு இந்தப் படத்திலே வெற்றிகரமாக பல நல்ல கருத்துக்களை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

அதற்காக பட விநியோகஸ்தர்கள் யாரும் பயப்பட வேண்டாம். அந்தக் கருத்துக்கள் எல்லாம் வந்தால் தான் படம் வெற்றிகரமாக ஓடும், ஐம்பது நாள், நூறு நாள் என்றெல்லாம் ஓடும் என்பதை மறந்து விடாமல், அந்தக் கருத்துக்களைச் சொல்வதற்கு முன் வர வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டு, வருவார்கள், வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையோடு விடைபெற்றுக் கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக