ஞாயிறு, 5 செப்டம்பர், 2010
70 ஆயிரம் கோடியில் ரூ.11 ஆயிரம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளத காமன்வெல்த் போட்டிகளுக்காக
காமன்வெல்த் போட்டிகள் : மணிசங்கர் அதிருப்திகாமன்வெல்த் போட்டிகளால் இந்தியாவிற்கு எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காமன்வெல்த் போட்டிகளால் இந்தியாவிற்கு எவ்வித பயனும் ஏற்பட போவதில்லை எனவும், மாறாக விளையாட்டு அமைப்புக் குழுவில் நடைபெற்ற முறைகேடுகளால் அவப் பெயரே ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் காமன்வெல்த் போட்டிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.70 ஆயிரம் கோடியில் ரூ.11 ஆயிரம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். இந்த தொகையை கிராமங்களில் விளையாட்டு பயிற்சி மையங்கள் அமைக்க பயன்படுத்தி இருந்தால், இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக