:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிவகாசியில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் பேசும்பேது,
நான் ரொம்ப தெளிவாக இருக்கிறேன்; என்னை யாரும் குளப்ப முடியாது என்ற வாசகத்தை பேச்சின் இடையிடையே 10 முறைக்கு மேல் சொன்னார்.
விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசியில் இன்று காலை 10 மணிக்கு விருதுநகர் மாவட்ட தே.மு.தி.க. அவைத் தலைவர் காசிராஜன் மகன் பார்த்தசாரதி திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் விருதுநகர் மாவட்ட தேமுதிக சார்பில் இன்று சிவகாசியில் வறுமை ஒழிப்பு தினம், கட்சியின் 6-ம் ஆண்டு தொடக்க விழா, அண்ணா பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து >கொண்டு பேசினார்.
முப்பெரும் விழாவில் துணை செயலாளர் ஆஸ்டின், மாநில இளைஞர் அணி செயலாளர் சதீஸ், சிவகாசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மா.ப.பாண்டியராஜன் உள்பட தென் மாவட்டங்களை சேர்ந்த தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் >கலந்து கொண்டார்கள்.
முப்பெரும் விழாவுக்கு விருதுநகர் மாவட்ட செயலாளர் என்.டி.ராஜா தலைமை தாங்கினார். அவைத்தரைவர் காசிராஜன், பொருளாளர் சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
சிவகாசி பேருந்து நிலையம் அருகில் எம்.ஜி.ஆர். தெருவில் நடந்த இந்த கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், தெரியாமல் நான் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். நான் மக்கள் விரும்பும் கூட்டணியைத்தான் அமைப்பேன்.என்னை தலைமையாக ஏற்று வருபவர்களோடுதான் கூட்டணி அமைப்பேன்.
>நான் ரொம்ப தெளிவாக இருக்கிறேன்; என்னை யாரும் குளப்ப முடியாது. 30, 40 சீட்டுக்கெல்லாம் மயங்க மாட்டேன். அதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டிருக்க மாட்டேன்’’ என்று அதிரடியாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக