ஞாயிறு, 16 மே, 2010

ராவணன் படம், ராமாயண கதையா?


ராமாயணக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதா ராவணன் என்ற கேள்விக்கு நடிகர் [^] விக்ரம் பதில் கூறினார்.

விக்ரம், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, கார்த்திக் [^], பிருதிவிராஜ், பிரியாமணி ஆகியோரை வைத்து, தமிழ்-தெலுங்கு-இந்தி ஆகிய 3 மொழிகளில், மணிரத்னம் டைரக்டு செய்துள்ள புதிய படம், ராவணன்.

இந்த படத்தின் கதை, ராமாயணத்தை அடிப்படையாக கொண்டது என்ற தகவல் வெளியில் பரவி இருக்கிறது. பல இணையதளங்கள் முழுக் கதையையும் வெளியிட்டுள்ளன.

பிருதிவிராஜ், ஒரு போலீஸ் அதிகாரி. சந்தர்ப்பவசத்தில் விக்ரமின் தங்கையான பிரியாமணியை கொன்று விடுகிறார். அதற்கு பழிவாங்க பிருதிவிராஜின் மனைவி ஐஸ்வர்யாராயை, விக்ரம் காட்டுக்குள் கடத்திச் சென்று விடுகிறார். ஐஸ்வர்யாராயை விக்ரமிடம் இருந்து போலீஸ் அதிகாரி பிருதிவிராஜ் மீட்க முயற்சிக்கிறார். ஒரு கட்டத்தில் விக்ரமே ஐஸ்வர்யா ராயை அனுப்பி வைத்து விடுகிறார்.

ஆனால் இதற்காக சந்தோஷப்பட வேண்டிய ப்ருத்விராஜ், ஐஸ்வர்யாராயை சந்தேகப்படுகிறார். அப்போது ஒரு அதிரடியான முடிவை எடுக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

-இதுதான் கதை என்கிறார்கள் (இதே மாதிரி கதையுடன் ஒரு அருமையான படம் 25 ஆண்டுகளுக்கு முன்பே வந்தது. படம் சிறை. கதை அனுராதா ரமணன். இயக்குநர் [^] ஆர் சி சக்தி. ராஜேஷ் - லட்சுமி நடித்தது. பல விருதுகள் கிடைத்தன).

இந்த படத்தை பற்றிய முன்னோட்ட நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது. கார்த்திக்-பிரியாமணி இருவரும் ஒருவரையொருவர் பேட்டி காண்பது போல், நிகழ்ச்சி தொடங்கியது.

இதில் நடிகர் விக்ரமை கார்த்திக் இப்படிக் கேட்டார்.

கார்த்திக்: ராவணன் படம், ராமாயண கதையா?

விக்ரம்: ராவணன் படத்தில் ராமாயணம் இருக்கிறது. மகாபாரதம் இருக்கிறது. சிலப்பதிகாரமும் இருக்கிறது.

கார்த்திக்: நீங்கதான் ராவணனா?

விக்ரம்: படத்தில் அது என் செல்லப்பெயர்.

கார்த்திக்: உங்க ஒரு தலை இங்கே இருக்கிறது. மற்ற ஒன்பது தலைகள் எங்கே?

விக்ரம்: ஒரு தலையை மேக்கப் ரூமில் வைத்து இருக்கிறேன். இன்னொரு தலையை மேலே தொங்க விட்டு இருக்கிறேன். மூன்று தலைகள், `கேன்ஸ்` பட விழாவுக்கு போய் இருக்கின்றன. இப்படி மீதி தலைகளையும் ஒவ்வொரு வேலைக்கு அனுப்பி இருக்கிறேன்..." என்றார் விக்ரம்.

ராவணனும் சீதையும் காதலர்கள் ராமன் ஒரு போதும் சீதையை மதித்ததில்லை.யாவர்களின் காதல் ராமனுக்கு தெரியும், ஆனால ராமனின் கவலை எல்லாம் சமுக மதிப்பே ஒழிய சீதையின் கற்ற்பல்ல.சீதை ஒருபோதும் ராமனை நல்ல புருஷனாக எண்ணியதே இல்லை.பொருந்தாத திருமணத்தில் மாட்டுப்பட்ட சீத ஒரு அபாக்கியவதி. அவளை ராவணன் மீட்க முயற்சித்தான்.ராவணனுக்கு பிறந்த குழைந்தைகளே லவனும் குசனும்.அதனால்தான் அவர்களை காட்டுக்கு கலைத்துவிட்டான்.

கருத்துகள் இல்லை: