திங்கள், 17 மே, 2010

சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி அதிஷ்டான பூஜைகளை ஏற்பாடு

ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி அந்தக் கட்சி அதிஷ்டான பூஜைகளை ஏற்பாடு செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றிக் கொண்டாடப்படவுள்ள எதிர்வரும் 18ம் திகதி அதிஷ்டான பூஜைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத் தளபதி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் யுத்த வெற்றி கொண்டாடப்படுவது விதியின் விளையாட்டு என சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்படை தலைமையகத்திற்கு அருகாமையில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்கான பயிற்சிகள் நடைபெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாள் தோறும் இரண்டு தடவைகள் தனது கணவரை பார்வையிடுவதற்கா கடற்படைத் தலைமையகத்திற்கு செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், யுத்த வெற்றிக்காக ஜெனரல் சரத் பொன்சேகா ஆற்றிய பங்களிப்பினை இந்த நாட்டு மக்கள் மறந்துவிட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: