புதன், 19 மே, 2010

புலிகளின் செயற்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது அமெரிக்கத் தூதரகம்

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிப்போர் மற்றும் வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்குவோர் தொடர்பில் கண்காணித்துத் தண்டனை வழங்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஐக்கியமானதும் ஜனநாயக ரீதியானதுமான இலங்கையின் உருவாக்கத்திற்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாகவும் தூதரகம் கூறியுள்ளது. இதேவேளை நாடு கடந்த தமிழீழ ராஜ்ஜியத்தின் நிர்வாகிகள் கடந்த மூன்று நாள்களாக அமெரிக்காவில் மாநாடு ஒன்றை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் இந்த மாநாடு நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப் படுகின்றது. குறித்த மாநாடு நடைபெற்றதாக நாடு கடந்த தமிழீழ ராஜ்ஜிய நிர்வாகத்தின் இணைப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
நாடு கடந்த தமிழீழ ராஜ்ஜிய நிர்வாகத்தின் ஆரம்பக் கூட்டம் அமெரிக்காவில் நடைபெற் றுள்ளதாக உருத்திரகுமாரன் மின்னஞ்சல் மூலம் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தகவல் வெளியிட்டுள்ளார். தமிழர்களுக்குச் சுயாட்சி உரிமைகள் கிடைக்கப் பெறும் வரையில் உலக நாடுக ளில் வாழும் தமிழர்கள் தொடர்ச்சியாக நாடு கடந்த தமிழீழ ராஜ்ஜியத்தின் ஊடாக அழுத் தங்களைப் பிரயோகிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அமைதியான முறையில் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு அமெரிக்க அரசியல் சாசனத்தில் தடை எது வும் விதிக்கப்படவில்லை என அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. ஐக்கியமானதும் ஜனநாயக ரீதியானது மான இலங்கையின் உருவாக்கத்திற்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாறெனினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: