திங்கள், 17 மே, 2010

போரில் 2.6 லட்​சம் வீடு​கள் சேதம்

கொழும்பு,​​ மே 16:​ இலங்​கை​யில் ராணு​வத்​துக்​கும்,​​ விடு​த​லைப் புலி​க​ளுக்​கும் இடையே நடந்த இறு​திக் கட்​டப் போரின் போது ஈழத்​த​மி​ழர்​கள் அதி​கம் வசிக்​கும் வடக்​குப் பகு​தி​யில் ​ 2 லட்​சத்து 60 ஆயி​ரம் வீடு​கள் சேதம் அடைந்​த​தாக செஞ்​சி​லு​வைச் சங்​கம் கூறி​யுள்​ளது.​

இந்த வீடு​கள் அனைத்​துமே மனி​தர்​கள் வசிக்க முடி​யாத அள​வுக்கு உருக்​கு​லைந்​து​விட்​டன.​ சில வீடு​கள் மேற்​கூரை மட்​டும் இடிந்​துள்​ளன.​ சில வீடு​கள் மேற்​கூ​ரை​யும்,​​ சுவர்​க​ளும் இடிந்து கிடக்​கின்​றன.​ இவற்றை சீர​மைத்​தால்​தான் குடி​யி​ருக்க இய​லும் என்​றும் செஞ்​சி​லு​வைச் சங்​கம் தெரி​வித்​துள்​ளது.​

வடக்​குப் பகு​தி​யில் சேதம் அடைந்த வீடு​களை சீர​மைக்​கா​விட்​டா​லும் அப்​ப​கு​தி​யில் தமி​ழர்​களை மீண்​டும் குடி​ய​மர்த்த வேண்​டும் என்​ப​தில் இலங்கை அரசு முனைப்பு காட்டி வரு​கி​றது.​

வடக்​குப் பகு​தி​யில் தாற்​கா​லிக முகாம்​க​ளில் தங்​கி​யி​ருந்த 2.07 லட்​சம் தமி​ழர்​கள் இது​வரை அவர்​க​ளது சொந்த ஊர்​க​ளுக்கே அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ள​னர்.​ வவு​னியா,​​ மன்​னார்,​​ யாழ்ப்​பா​ணம்,​​ ஆகிய மாவட்​டங்​க​ளில் உள்ள முகாம்​க​ளில் இன்​னும் 80,246 பேர் தங்​கி​யுள்​ள​னர்.​

இவர்​க​ளை​யும் அவர்​க​ளது சொந்த ஊர்​க​ளி​லேயே விரை​வில் குடி​ய​மர்த்த அதி​பர் ராஜ​பட்ச தலை​மை​யி​லான புதிய அரசு நட​வ​டிக்கை எடுத்து வரு​கி​றது.​ அடுத்த 6 மாதத்​துக்​குள் இவர்​கள் அனை​வ​ரும் அவர்​க​ளது சொந்த ஊர்​க​ளில் குடி​ய​மர்த்​தப்​ப​டு​வார்​கள் என்று எதிர்ப்​பார்க்​கப்​ப​டு​கி​றது.​ இலங்கை அர​சும் இந்த காலத்​துக்​குள் அவர்​களை மறு​கு​டி​ய​மர்த்​தவே திட்​ட​மிட்​டுள்​ளது.​

வடக்​குப் பகு​தி​யில் கண்​ணி​வெ​டி​கள் அகற்​றப்​பட்ட பகு​தி​யில் மட்​டுமே இது​வரை தமி​ழர்​கள் மறு​கு​டி​ய​மர்த்​தப்​பட்​டுள்​ள​னர்.​

 வடக்​குப் பகு​தி​யில் பெரும்​ப​கு​தி​யில் கண்​ணி​வெ​டி​கள் அகற்​றப்​பட்​டு​விட்​டன.​ இந்த பகு​தி​கள் மக்​கள் வசிப்​ப​தற்கு பாது​காப்​பா​ன​தாக மாற்​றப்​பட்​டுள்​ளன.​ மற்ற பகு​தி​க​ளி​லும் கண்​ணி​வெ​டி​களை அகற்​றும் பணி துரி​த​மாக நடந்து வரு​கின்​றது.​

வடக்கு மாகா​ணத்​தின் கிழக்கு கட​லோ​ரப் பகு​தி​யில் புதைத்து வைக்​கப்​பட்ட கண்​ணி​வெ​டி​களை அகற்றி அப்​ப​கு​தியை பாது​காப்​பா​ன​தாக மாற்​ற​வும் இலங்கை அரசு நட​வ​டிக்கை எடுத்து வரு​கி​றது என்று செஞ்​சி​லு​வைச் சங்​கம் தெரி​வித்​துள்​ளது.​

இலங்​கை​யில் மறு​கு​டி​ய​மர்த்​தல் உள்​ளிட்ட மறு​வாழ்​வுப் பணியை துரி​த​மாக செய்​து​வ​ரு​வ​தாக அந்​நாட்டு அரசு கூறி​வ​ரு​கி​றது.​ ஆனால் இலங்கை அர​சின் மறு​வாழ்​வுப் பணி​யில் தங்​க​ளுக்கு திருப்தி இல்லை என்​ப​து​தான் பெரும்​பா​லான ஈழத்​த​மி​ழர்​க​ளின் குற்​றச்​சாட்​டா​க​வுள்​ளது.

கருத்துகள் இல்லை: