திங்கள், 17 மே, 2010

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் - 'கட்' அடித்த நடிகைகள்!

டெல்லி: நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் 90 முதல் 100 சதவிகித வருகை தந்துள்ளனர். ஆனால் எம்பியாக உள்ள நடிகைகள் பெருமளவில் கட் அடித்துள்ளனர்.

மாஜி நடிகைகளான ஜெயா பச்சன், விஜயசாந்தி, ஜெயபிரதா ஆகியோர் ஒன்று நாள் முதல் 4 நாள்கள் மட்டுமே வந்துள்ளனர். அப்போதும்கூட எவ்வித விவாதத்திலும் கலந்து கொள்ளவில்லை.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், இரு கட்டங்களாக நடந்து முடிந்தது. கடந்த பிப்ரவரி 22 முதல் மார்ச் 16 வரை முதல் கட்டமாகவும், ஏப்ரல் 15 முதல் மே 17 வரை இரண்டாம் கட்டமாகவும் அவை நடந்தன. மொத்தம் 32 நாட்கள் மட்டுமே, லோக்சபாவும், ராஜ்யசபாவும் இயங்கின.

எதிர்க்கட்சித் தலைவர்களைப் பொறுத்தவரை, முக்கிய தலைவர்கள் எல்லாரும், 90 முதல் 100 சதவீத வருகையை பதிவு செய்துள்ளனர்.

பிரபல தலைவர்கள் லோக் சபைக்கு வந்த நாட்கள் விவரம்:

அத்வானி 32, யஷ்வந்த் சின்ஹா 31, பாசுதேவ் ஆச்சார்யா 31, மிலின் தியோரா 31, சுப்ரியாசுலே 30, முலாயம் சிங் 30, குருதாஸ் தாஸ்குப்தா 30, ஜோஷி 29, லாலுபிரசாத் 29, முண்டே 28, நவீன்ஜிண்டால் 28, மேனகா 27, வருண்காந்தி 27, சரத்யாதவ் 27, ராஜ்பாப்பர் 27, ஜெகன்மோகன் ரெட்டி 26, சத்ருகன் சின்கா 25, அசாருதீன் 25, ராஜ்நாத்சிங் 24, ராகுல் 24, பிரியாதத் 22, அகிலேஷ்யாதவ் 22, தேவகவுடா 20, சோனியா 20, சசி தரூர் 15, பஜன்லால் 14, ஜஸ்வந்த்சிங் 12, அஜித்சிங் 10, சித்து 7, கல்யாண்சிங் 6, ஜெயப்ரதா 4, அகதா சங்மா 2, சிபுசோரன் 2, சந்திரசேகர ராவ் 1, விஜயசாந்தி 1.

ராஜ்யசபாவில் பிரபலங்கள் வந்திருந்த நாட்கள்:

அலுவாலியா 32, மோதிலால்வோரா 32, நஜ்மா 31, அம்பேத்ராஜன் 29, எம்.எஸ்.சுவாமிநாதன் 29, ஆஸ்கர் பெர்னாண்டஸ் 29, சீதாராம் யெச்சூரி 29, பிருந்தாகராத் 28, அகமது படேல் 28, கரண் சிங் 25, ரவிசங்கர்பிரசாத் 22, வெங்கையா நாயுடு 21, அருணஷோரி 11, அர்ஜுன் சிங் 10, ஜெயா பச்சன் 4, அமர்சிங் 3.

கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபா எம்.பி.,யாகி இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி, ஒரு நாள் கூட சபைக்கு வரவில்லை!

பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 17 May 2010 2:48 pm
இவங்களை குத்தம் சொல்லகூடாது. இவன்களுக்கு ஒட்டு போட்டவங்களை வரிசையா நிக்க வெச்சு செருபல அட்டிகனும்.

பதிவு செய்தவர்: விஜயசாந்தி
பதிவு செய்தது: 17 May 2010 2:35 pm
நாடாளும் மன்றத்தில் நடன போட்டி வைக்காததால் கலந்து கொள்ளவில்லை,ரெண்டு பீஸ் துனியும் உடுத்த கூடாதாம் பிறகு அங்கு எங்களுக்கு என்ன வேலை

கருத்துகள் இல்லை: