ஞாயிறு, 16 அக்டோபர், 2011

மங்காத்தா கன்னாபின்னா ஹிட்!

'தல’ யோட 50வது படமான மங்காத்தா கன்னாபின்னா ஹிட்!
இந்த வெற்றியில் ஒரு பங்கு படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி பாஸ்கரையும் சேரும்!
இவர் இளையராஜா, கங்கை அமரனின் சகோதரர் பாஸ்கரின் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது!


‘‘நான் லயோலாவில் ஃபேஷன் டிஸைனிங் கோர்ஸ் படிச்சுகிட்டிருந்தப்போ ஒரு ஷோவுக்கு பாரதிராஜா அங்கிள் வந்திருந்தார். அப்போ என்னைப்பற்றி விசாரிச்சு தெரிஞ்சுகிட்டார். ரெண்டு நாள் கழிச்சு தன் ஆஃபீஸுக்குக் கூப்பிட்டு ‘கண்களால் கைது செய்’ படத்துக்கு காஸ்ட்யூம் டிசைனரா ஒர்க் பண்ணச் சொன்னார். நானும் தைரியமா பண்ணினேன். அந்தப் படமும் காஸ்ட்யூமுக்காக பாராட்டப்பட்டது. அங்கிளும் பாராட்டினார்.
அதுக்கப்புறம் சரணோட ‘உன்னைச் சரணடைந்தேன்’ படத்துக்கும் அஜித்தோட ‘பரமசிவம்’, விஜயோட ‘வில்லு’, த்ரிஷா நடிச்ச ‘அபியும் நானும்’ படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைன் செய்தேன். அட்வர்டைஸிங் ஃபிலிம்லயும் என் கான்சென்ட்ரேஷன் இருந்துச்சு. இப்படி ஒர்க் எக்ஸ்பீரியன்ஸில்தான் காஸ்ட்யூம் டிஸைனிங் கத்துக்கிட்டேன். ஒரு காஸ்ட்யூம் டிசைனர் ஒரு நடிகரோட, டாப் டூ பாட்டம் லுக்கில் மட்டுமல்ல, டெக்னிக்கல் ரீதியாகவும், கேமரா கோணத்திலும் கலர் கான்ட்ராஸ்டிலும் கவனம் செலுத்தினால்தான், காஸ்ட்யூம் டிசைனில் பெயரெடுக்க முடியும்னு தெரிஞ்சுகிட்டேன். இந்த விஷயத்தில் ஒரு பெரிய சேலன்ஜிங்கா இருந்து பெயர்வாங்கிக் குடுத்திருக்கு மங்காத்தா!’’ என்கிறார் வாசுகி!

‘‘பிரபு முதல்ல முழு ஸ்கிரிப்டையும் என்கிட்ட சொல்லிட்டு, எல்லாருக்கும் காஸ்ட்யூம் டிசைன் பண்ணச் சொன்னார். நானும் ஓகே சொல்லிட்டேன், எனக்கு ‘தல’ படம்ன்னு இதில எந்த பயமும் இல்ல. இதே ஸ்டார்ஸை இதுக்கு முன்னால பல படங்கள்ல ரசிகர்கள் பார்த்திருக்காங்க. ஆனா இந்தப் படத்தில் எல்லாரையும் புதுசா காட்டணும்னு மட்டும் தீவிரமா யோசிச்சேன், பிரபுகிட்டேயும் சொன்னேன். அப்படித்தான் பிரேம்ஜி, வைபவ், அர்விந்த், ஆகாஷ் கெட்டப்பை புதுசா கொண்டுவந்தேன். அஜித் சார் கெட்டப் மட்டும்தான் பெண்டிங். ரொம்ப யோசிச்சேன், ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளுனி போல அஜித் சாரை கொண்டு வந்தேன், செம பக்கா! பிரபுகிட்ட காமிச்சேன், ஓகேன்னார்.

அஜித் சாரோட சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல் பத்தி நானும் பெரிசா யோசிக்கலை, பிரபுவும் யோசிக்கலை, அதேபோல அஜித்சாரும் யோசிக்காம ஓகே சொல்லிட்டார், படம் பாதி ஷூட் ஆனவுடனேதான் எனக்கு பயம் வந்துடுச்சு. அவரோட 50வது படமாச்சே.. படம் பார்க்கிறவங்களுக்கு இந்த கெட்டப் பிடிக்காமப் போயி, படம் ஹிட் ஆகலேன்னா, மொத்தப் பழியும் நம்மமேல வந்துடுமேன்னு பயந்துகிட்டே இருந்தேன். படம் ரிலீஸாகி ஹிட் ஆனவுடனேதான் எனக்கு பயம் போச்சு! அதோட ‘தல இவ்ளோ ஸ்மார்ட் கெட்அப்பில் ஸ்கிரீனில் வரார். அதுக்கு உங்களுக்கு தேங்க்ஸு’ன்னு நிறையப்பேர் இப்போ பாராட்டறாங்க.’’ என்கிறார் சினிமாத்துறையில் வெற்றித்தடம் பதித்திருக்கும் இந்த இளம் காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி பாஸ்கர்.

‘‘நிறைய இளம்பெண்கள் சினிமாத்துறையில் காஸ்ட்யூம் டிசைனரா வரணும். நுட்பமான ரசனை உடைய பெண்களாலதான் இது முடியும்! கதைக்களத்தில் ஆரம்பித்து கேமிரா ஆங்கிள் வரை எல்லா விஷயங்களையும் கேட்டு புரிஞ்சிக்கிட்டு காஸ்ட்யூம் டிசைன் செய்யும் போது நிச்சயமாக வெற்றி கிடைக்கும்’’ என்கிறார் வாசுகி பாஸ்கர்.

thanks kumudam + rathi Aus

கருத்துகள் இல்லை: