ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

புலன்பெயர்வுகள் உசுப்பிவிட.. ஊனமடைந்த இளைஞர்கள் தெருக்களில் பிச்சை

வாழும் மனிதம்' 
'இலங்கைவாழ் ஏழைத்தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் கனடியத் தமிழ்க்குழு'
- இராஜெஸ்வரி பாலசுப்பிரமணியம்
இன்று கனடாவிலுள்ள ரொரான்டோ நகருக்குப்போனால் அங்கு தமிழ் முகங்களைத் தாராளமாகக் காணலாம். இன்று உலகிற் பல நாடுகளில் இலங்கைத் தமிழர்கள் வாழ்கிறார்கள். இலங்கையில் வாழும் தமிழர்களின் தொகைமாதிரிக் கிட்டத்தட்ட அதே தொகையிற் தமிழர்கள் பல நாடுகளிலும் வாழ்கிறார்கள். பல தரப்பட்ட துறைகளிலும் வேலைசெய்கிறார்கள். தமிழ்க் கலைகளைப் படிக்கிறார்கள் (இந்தியக்கலை)?. தாங்கள் புலம் பெயர்ந்து போன நாடுகளிலுள்ள பாராளுமன்றத்துக்கும் போயிருக்கிறார்கள். பல விழாக்களை வைத்துக் களிப்படைகிறார்கள். பரதம் நாட்டியம் பழகி அரங்கேற்றம் வைக்கிறார்கள். ஒருத்தருக்கொருத்தர் போட்டிபோட்டுக்கொண்டு வீடுகளையும் நகைகளையம் வாங்கிக் குவிக்கிறார்கள். சிலர் மேற்குநாட்டின் சுவாத்தியம், மொழி என்பவற்றால் படும் துன்பத்தால் இன்னும் தங்கள் தாய்நாட்டை நினைத்துக்கொள்கிறார்கள்.
புலம் பெயர்ந்த ஒரு சமுதாயத்தில் இருக்க வேண்டிய அத்தனை குறை நிறைகளும் கனடியத் தமிழர்ளிடமும இருக்கின்றன.


இலங்கையில் முரண்பாடு தொடர்வதை வைத்து வாழ்க்கை நடத்துபவர்கள் 'பழிவாங்கலுக்குப்'; பணம்சேர்த்துப் பலநாடுகளிலும் அடிக்கடி சந்திப்பு வைக்க வானத்தில் பறந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் ஒரு போர் தொடங்கப் பணமும் சேர்க்கிறார்கள். தங்கள் குழந்தைகளை உயர்ந்த கல்வி பயில அனுப்புகிறார்கள். இலங்கையில்  நடந்த போரைச் சாட்டிப் புகலிடம் தேடியவர்கள் இன்று அந்தப் போரினால் அவதியுற்றுப் பசியால் இலங்கையில் வாடும் ஒரு தமிழ்க் குழந்தைக்க ஒரு நேர உணவு கொடுக்க மாட்டார்கள்.

இவர்களால் உசுப்பிவிடப்பட்ட போரினால் ஊனமடைந்த பலநூறு இளைஞர்கள் தமிழ்ப்பகுதிகளில் தெருக்களில் பிச்சை எடுப்பது இவர்களின் கண்களிற்படாது. போராளிப் பெண்களாகப்போன இளம் தளிர்கள் வீரப்புறாக்கள் என்று ஒருகாலத்தில் வர்ணிக்கப்பட்டவர்கள் இன்று அதே சமூகத்தால் ஒதுக்கி வைத்திருப்பது பற்றி ஒரு துளிக்கிலேசமும் கிடையாது. இதுபற்றி எழுதுபவர்களைத் துரோகிகள் என்று தமிழத்தேசியம் வசைபாடுகிறது.

1970ல் ஒரு பனிபெய்யும் ஒரு காலை நேரத்தில் லண்டனில் வந்திறங்கியபோது லண்டன் தெருக்களில் தமிழர்களைக்காண்பது அரிதாகவிருந்தது. 1970ம் ஆண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் கிட்டத்தட்ட பத்தாயிரமாயிருந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. மேற்படிப்புக்காக வரும் வைத்தியர்கள் , எஞ்சினியர்கள், என்று ஒரு கூட்டம். அத்துடன் லண்டனில் படிப்புக்காக வந்த மாணவர்கூட்டம். பிரித்தானிய அரசால்  வைத்தியர்கள், ஆசிரியர், அக்கவுண்டன்ட், எஞ்சினியர்கள் போன்ற வேலைகள் செய்ய  அழைக்கப்பட்டவர்கள் என்று பலரும் இருந்தனர். படிக்க வநதவர்கள் எப்போது தங்கள் படிப்பை முடித்துவிட்டு ஊருக்குப்போவோம் என்று துடித்துக்கொண்டிருப்பார்கள். அதனால் அடிக்கடி தமிழ்ப் புது முகங்கள் லண்டனிற் தென்படும்.

எப்போதாவது இருந்து, லண்டனில் நடக்கும் ஏதோ ஒரு கூட்டத்தில், அல்லது உறவினர், சினேகிதர்களின் திருமணவிழாவில் எங்களுக்குத் தெரிந்த தமிழர்களைக் காண நேரிட்டால் பெரிய சந்தோசமாகவிருக்கும். அன்று வந்தவர்கள் உத்தியோக நிமிர்த்தமாய்ப் பெரும்பாலும் பல இடங்களில் (தமிழர்களைக்காணமுடியாத) வாழ்ந்ததால் தானும் தன்பாடும் என்று வாழப் பழகியிருந்ததர்கள்.

இன்று கனடாவிலுள்ள ரொரான்டோ நகருக்குப்போனால் அங்கு தமிழ் முகங்களைத் தாராளமாகக் காணலாம். இன்று உலகிற் பல நாடுகளில் இலங்கைத் தமிழர்கள் வாழ்கிறார்கள். இலங்கையில் வாழும் தமிழர்களின் தொகைமாதிரிக் கிட்டத்தட்ட அதே தொகையிற் தமிழர்கள் பல நாடுகளிலும் வாழ்கிறார்கள். பல தரப்பட்ட துறைகளிலும் வேலைசெய்கிறார்கள். தமிழ்க் கலைகளைப் படிக்கிறார்கள் (இந்தியக்கலை)?. தாங்கள் புலம் பெயர்ந்து போன நாடுகளிலுள்ள பாராளுமன்றத்துக்கும் போயிருக்கிறார்கள். பல விழாக்களை வைத்துக் களிப்படைகிறார்கள். பரதம் நாட்டியம் பழகி அரங்கேற்றம் வைக்கிறார்கள். ஒருத்தருக்கொருத்தர் போட்டிபோட்டுக்கொண்டு வீடுகளையும் நகைகளையம் வாங்கிக் குவிக்கிறார்கள். சிலர் மேற்குநாட்டின் சுவாத்தியம், மொழி என்பவற்றால் படும் துன்பத்தால் இன்னும் தங்கள் தாய்நாட்டை நினைத்துக்கொள்கிறார்கள்.
புலம் பெயர்ந்த ஒரு சமுதாயத்தில் இருக்க வேண்டிய அத்தனை குறை நிறைகளும் கனடியத் தமிழர்ளிடமும இருக்கின்றன.

இலங்கையில் முரண்பாடு தொடர்வதை வைத்து வாழ்க்கை நடத்துபவர்கள் 'பழிவாங்கலுக்குப்'; பணம்சேர்த்துப் பலநாடுகளிலும் அடிக்கடி சந்திப்பு வைக்க வானத்தில் பறந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் ஒரு போர் தொடங்கப் பணமும் சேர்க்கிறார்கள். தங்கள் குழந்தைகளை உயர்ந்த கல்வி பயில அனுப்புகிறார்கள். இலங்கையில்  நடந்த போரைச் சாட்டிப் புகலிடம் தேடியவர்கள் இன்று அந்தப் போரினால் அவதியுற்றுப் பசியால் இலங்கையில் வாடும் ஒரு தமிழ்க் குழந்தைக்க ஒரு நேர உணவு கொடுக்க மாட்டார்கள்.

இவர்களால் உசுப்பிவிடப்பட்ட போரினால் ஊனமடைந்த பலநூறு இளைஞர்கள் தமிழ்ப்பகுதிகளில் தெருக்களில் பிச்சை எடுப்பது இவர்களின் கண்களிற்படாது. போராளிப் பெண்களாகப்போன இளம் தளிர்கள் வீரப்புறாக்கள் என்று ஒருகாலத்தில் வர்ணிக்கப்பட்டவர்கள் இன்று அதே சமூகத்தால் ஒதுக்கி வைத்திருப்பது பற்றி ஒரு துளிக்கிலேசமும் கிடையாது. இதுபற்றி எழுதுபவர்களைத் துரோகிகள் என்று தமிழத்தேசியம் வசைபாடுகிறது.

தமிழ்த்தேசியத்தை மட்டும்பேசாமல் தமிழ் இலக்கியம், முற்போக்கு சிந்தனைகள் பற்றி எழுதவும் சுதந்திரமாகச் சிந்திக்கவும் செயற்படவும் முடிந்த தமிழ் இலக்கியவாதிகள் ஐரோப்பிய நாடுகளில் ஒருகாலத்தில் பரவலாக வாழ்ந்தார்கள். அந்த நாட்கள் இனிமையானவை. இன்று கிட்டத்தட்டப் பெரும்பாலான தமிழ்மக்கள் தீவிர தமிழ்த்தேசியம் என்ற ஒரு பாசிசக் கட்டமைக்குள் தெரிந்தோ தெரியாமலோ பயந்தோ பயப்படாமலே அகப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பல தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்போர் இன்று தமிழ்த்தேசியத்தால் வாழப் பழகிக்கொண்டதால் சுதந்திர சிந்தனையை மறந்து விட்டார்கள் அல்லது மறக்கப் பண்ணியவர்களுடன் சேர்ந்து விட்டார்கள்.

அரசியற் கண்ணோட்டமின்றி ஆயுதத்தை மட்டும் நம்பிய ஒரு குழுவால், முப்பது வருடமாக நடந்து முடிந்த போரில் தோல்வி கண்டதற்கு, வெற்றி கொண்ட தரத்தைப்; பழிவாங்கப் பல வியுகங்களை அமைக்கும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் ஊதுகுழல்களாகப்  பல எழுத்தாளர்களும் கலைஞர்களும்  பாவிக்கப் படுவதால், இதுவரை இலங்கையில் நடந்த போரில் மிக மிக மிகத் துன்பப் பட்ட ஏழைத்தமிழர்களுக்கு எதுவும் கிடைக்காமற் பண்ணி அந்தத் துன்பத்தைத் தங்கள் வியாரத்தின் மூலப் பொருளாக்கி வாழப் பழகிவிட்டார்கள்.

தமிழ்த் தேசியம் என்பது தமிழ்ப் பிற்போக்குவாதிகளாலும், பணம் படைக்கும் வியாபாரிகளாலும், மனிதர்களைக்கடத்திக் கோடி சேர்க்கம் மாபியாக்களாலும் மிகவும் பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு மூலப்பொருளாகும். அதை வைத்துக்கோடி படைக்கத் தங்கள் மனச்சாட்சியை பலர் விற்று விட்டார்கள்;.

அதற்கப்பால் மனித்நேயத்தை வளர்க்கும் ஒரு சிறு கூட்டம் எப்போதும், உலகத்தின் எங்கோ ஒரு மூலையிற் தமிழ்த்தேசியத்தின், யாழ் மேல்வர்க்கமையவாதத்தை எதிர்த்துக்கொண்டிருக்கும்.  கடந்த நூற்றன்டின் நடுப்பகுதியில் கார்த்pகேசன் மாஸ்டர், சுப்பிரமணியம் போன்றோரால் யாழ்ப்பாணத்தில் வளந்த முற்போக்கு சக்திகளை எதிர்க்கத் தமிழ்த்தேசியம் திட்டமிட்டு வேலைசெய்தது. அதேமாதிரி இன்றும் தமிழ்த்தேசியத்தால் பிழைத்துக்கொண்டிருக்கும் புலிகளின் ஆதிக்கத்தைத் தாண்டி, ஒட்டு மொத்த தமிழர்களுக்கும், முக்கியமாக ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்குக் குரல் கொடுக்க முனையும்போது தமிழ்த்தேசியம் பல முட்டுக்கட்டைகளை அவர்களுக்குப்  போடுகின்றது. அதை எதிர்த்து முற்போக்குவாதத் தமிழ் நேயம் போராடிக்கொண்டிருக்கிறது.

அவர்களில் ஒருசிலர் கனடாவிலும் வாழ்கிறார்கள். வேலை செய்கிறார்கள். அவர்களின் முயற்சிகளால் இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு உதவி செய்யும் ஒருசில வேலைகள் நடைபெறுகின்றன. அவர்களின் அழைப்பு எனக்குக் கிடைத்தது. தமிழ்த்தேசியவாத அங்கீகாரம் செய்த எழுத்தாளர்களுக்குப் பரிசு கொடுக்கும் கனடியக் கூட்டமல்ல இவர்கள். மனித நேயத்தக்காகத் தங்கள் எழுத்தாக்கத்தை அர்ப்பணித்து எழுதுபவர்களை அடையாளம் கண்ட கூட்டமிது.

இதுவரையும், தமிழர்கள் வாழும் நாடுகளிற் சிலவான ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடக்கும் இலக்கிய கூட்டங்களில் பங்கு பற்ற அழைக்கப்படும்போது அங்கெல்லாம் சென்றிருக்கிறேன். அத்துடன் தமிழர்கள் ஐரோப்பாவுக்கு 1980 களில்  அகதிகளாக வந்துகொண்டிருந்தபோது அவர்களுக்கான ஆதரவு பிரசாரத்தைச்செய்ய ஐரோப்பாவின் பல நாடுகளுக்கும் சென்றிருக்கிறேன். இன்று எங்கள் சொந்தக்காரர்களும் பல நாடுகளிலும் இருப்பார்கள் அதனால் போகவேண்டிய சந்தர்ப்பங்கள் வரும். ஆனாலும் இதுவரையும் கனடா போனது கிடையாது.

கனடாவிலிருந்து கொண்டு இலங்கைவாழ் தமிழ் மக்களுக்காகத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்துகொண்டுவரும்  ஒரு சிறு குழுவான 'வாழும் மனிதம்' அமைப்பினரின் அழைப்பில் இருவாரங்கள் அங்கு சென்றிருந்தேன். இவர்கள் இதற்கு முன்னர் மனித நேயம் பற்றிய ஒரு சிறு கூட்டங்களைக் கனடாவில் வைத்திருக்கிறார்கள்.

27.08.11ல் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்குக் கிட்டத்தட்ட எழுபதுபேர் வந்திருந்தார்கள். 'வாழும் மனிதம்' அமைப்பின் அமைப்பாளரான எழுத்தாளர் தேவராஜா தனது சொந்தச் சிரமங்கள் எதையும் பாராமல் இக்கூட்டம் நன்றாக நடக்கவேண்டும். ஒரு ஆளுமையான கருத்துப் பறிமாறல் நடக்கவேண்டும், இலங்கையில் அல்லற் படும் மக்களுக்கு நாங்கள் என்ன செய்யலாம் (இதுபற்றி நான் எழுதிய கட்டுரை தேனீ தொடக்கம் பல பத்திரிகைகளில் வந்திருந்தன) என்ற கேள்விகள் வரவேண்டும்  என்று பலரையும் அழைத்திருந்தார்.

வந்திருந்தவர்களிற் பெரும்பாலோர் இலங்கையில் ஒருகாலத்தில் பல தரப்பட்ட சமுக சேவைகளில் ஈடுபட்டிருந்தவர்கள். பலர் இடதுசாரிகள். ஓருசிலர் நடுநிலை ஊடகவாதிகள். கனடாவிலிருந்து வரும் 'வானவில்' பத்திரிகையின் ஆசிரியரான மணியம் போன்ற ஓரு சிலர் புலிகளாற் சிறை பிடிக்கப் பட்டிருந்தவர்கள். சிறைபிடிக்கப்பட்டிருந்தாலும் சிந்தனைச் சிறகு ஒடியாமல்வாழும் ஒருசிலர் இன்னும் அங்குமிங்குமாய் வாழ்கிறார்கள். தங்களாலான உதவிகளை இலங்கையிலுள்ள எங்கள் அன்பான தமிழ்ச்சமுகத்துக்குச் செய்துகொண்டிருப்பவர்கள இவர்கள்;.

தாய்நாடாகவிருந்தாலும் புலம் பெயர்ந்த நாடாகவிருந்தாலும், ஓரு காலத்தில் புலிகளைத் தவிர யாரும் எந்தக் கூட்டத்தையும் வைக்க முடியாத என்ற நிலைமாறி இன்று யாரும் கூட்டம் வைக்கலாம் என்ற நிபை;பாடு அங்கு வந்திருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் நடுநிலமையைத் தெளிவு படுத்தும் கூட்டங்களுக்கு வரும் தமிழர் தொகை எப்போதும் போல் மிகக்குறைவாகத்தானிருக்கும்.

அத்துடன்; கனடாவில் வாழும் என்னைத் தெரிந்த ஒரு சில எழுத்தாளர்களோ அல்லது 'பெண்ணியவாதிகள்' என்று சொல்லிக்கொள்பவர்களோ கூட்டத்திற்குத் தலைகாட்டவில்லை. அந்தச் செயலை முன் கூட்டியே எதிர்பார்த்திருந்தேன். போட்டி பொறாமை, பிராந்திய வெறி, பலிப்பாசிச அடக்குமுறைக்குள் அவர்களின் சிந்தனைகளில் ஊறிப்போயிருக்கலாம். எழுதத் தொடங்கி எத்தனையோ வருடமாகியும் இதுவரையும் யாரின் தயவையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காமல் ஒடுக்கப் படும் மக்களுக்காக எழுதுவதால் இவர்களின் ஏளனம் என்பது நாங்கள் நடந்துபோகும் வாழ்க்கைப் பாதையில் தெரிந்துகொள்ளப்படவேண்டிய ஒருசில விடயங்களே.

தேவராஜன் போன்றோர் கனடாவிலுள்ள ஒரு பிரமாண்டான, பிற்போக்கான தமிழச்சமூகத்திலிருந்து தூரத்தில் நிற்கும் ஒரு சிறிய கூட்டம் என்று தெரியும். ஆனாலும் இவர்களின் நேர்மையான செயல்களுக்கு மதிப்புக்கொடுத்து கனடாவில் இயங்கும் ஒரு வானொலி என்னை இருதரம் பேட்டி கண்டது. நிகழ்ச்சியை நடத்தும் இளையபாரதி ஒரு கைதேர்ந்த தயாரிப்பாளர் என்பது அவர் எப்படிக் கேள்விகளைப்போடுகிறார்,  நிகழ்ச்சிகளைக்கொண்டு போகிறார் என்பதிலிருந்து தெரிந்தது. இனவாதம் தாண்டிய ஒரு கருத்தரங்கை ஒரு ஊடகம் நடத்தும்போது வரும் தடங்கல்களை வானோலியில் பங்கு பற்ற வந்தவர்களின் கேள்வியிலிருந்து தெரிந்தது. அதிலும் என் கருத்துக்களுக்குச் சேறடித்து மகிழ என்று ஒரு கூட்டம் எங்கும் இருக்கிறது; என்று தெரியும்.

 லண்டனுக்கு அகதிகளாக வநத் தமிழரை அரவணைத்து நான் செய்த பணிகள் இனவாதம் பேசும் இந்தக் கூட்டத்திற்குத் தெரியாது.  லண்டனிற் 'தமிழ் அகதிகள் ஸ்தாபனம்', 'தமிழ் அகதிகளுக்கான வீடமைப்புத் திட்டம்';, இலங்கையில் நடந்த கொடுமைகளை எதிர்க்க அமைக்கப் பட்ட 'லண்டன் தமிழ் மகளீர் அமைப்பு'என்பனவற்றுக்குத் தலைமை தாங்கித் தமிழ் மக்களுக்கு நான் புரிந்த பணி இவர்களுக்குத் தெரியாது.

1980 களில் இலங்கைத் தமிழர் எதிர்நோக்கிய அரசியல் சமுதாயப் பிரச்சினையைப் பற்றிய எனது நாவலான 'ஒருகோடைவிடுமுறை' என்ற நாவல்தான் தமிழர் பிரச்சினையயை இலக்கிய உருவில் வெளிக்கொண்டுவந்த முதலாவது படைப்பு. இதுபற்றி ஒருகாலத்தில் ஓகோ என்று புழுகியவர்கள் போரால் எங்கள் மக்கள் அழிந்ததுபோது,, 'இலங்கையில் இனியும் நாங்கள் போராட முடியாது. எண்ணற்ற தமிழ் உயிர்களை இழந்து விட்டோம, இனி என்றாலும் இணைந்த அரசியலை முன்னெடுப்போம்' என்று சொல்லும்போது முகம் சுளிக்கிறார்கள்.

1986ல் இலங்கையிற் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய இன ஒழிப்பு பற்றி நான் எடுத்த ' த எஸ்கேப் புறம் ஜெனோசைட்' என்ற டாக்குயுமென்டரி ஐரோப்பிய படவிழாக்களில் காட்டப்பட்டு அன்று ஐரோப்பா நோக்கி ஓடிவந்த தமிழ் அகதிகளின் அரசியல் தஞ்ச விண்ணப்பத்துக்கு உதவிசெய்தது என்பதால் நன்மை பெற்றவர்களும் அதைபப் பற்றித்  தெரிந்தவர்களும் ஒன்றும் தெரியாதவர்கள் மாதிரி இன்று என்னைத் தமிழரின் துரோகி என்று ஒதுக்குவது என்னைப் போன்ற பொதுநலவாதிகளால் எதிர்பார்க்கப்புடம் விடயமாகும்.

இவர்கள் எனது பணி பற்றிய விடயங்கள் தெரிந்துகொள்ளப் போவதுமில்லை. தெரிந்தாலும் அதற்கு மதிப்போ அங்கிகாரமோ தரப்போவதில்லை. ஏனென்றாவ் இவர்களின் கண்களைப் பிராந்தியவெறி மறைத்திருக்கிறது. இந்த வெறிதான் புலிகளின் தோல்விக்கு ஒருகாரணம் என்ற விடயத்தைக்கூட கிரகிக்க முடியாத கூட்டமிது.

 இலங்கையில் தொடரும் துன்பங்களைத் தவிர்க்க எங்களைப்போல் பிராந்திய வேறபாடற்ற ஒரு மனிதநேயக் குழுவாக ஒரு சிலர் முன்வருகிறோம். இலங்கையில் தொடரும்போரால் இலங்கையை விட்டு ஓடமுடியாத தமிழ் இனம் படும் பாட்டைத் தவிர்க்க அரசுடனான பேச்சுவார்தைகள் முன்னெடுக்கப் படவேண்டும் என்கிறோம். அந்தப் பிரக்ஞையில் எங்கள் பணியைத் தொடர்கிறோம்.

 அங்கு குரல் கொடுக்க யாருமற்ற தமிழர்களக்குக் குரல் கொடுக்கவும் இலங்கையில் நடக்கும் போரின் தாக்கத்தினால் அல்லலுறும் மக்களுக்கு உதவி செய்ய, இலங்கை அரசுடன் மட்டுமல்லாது, இலங்கையிலிருக்கும் அகில உலக ஸ்தாபனங்களுடனும், தமிழர்கள் வாழும் நாடுகளிலுள்ள உயர் ஸ்தானிகர்களுடனும், பௌத்த, கிறிஸ்தவ ,மதத் தலைவர்களுடனும் கலந்துரையாடச் சென்ற அகில உலகத் தமிழர் குழவில் நானும் சென்றது தமிழ்த் தேசியவாதிகளுக்கும் இனவாதிகளுக்கும் பொறாமைவாதிகளுக்கும்  பிடிக்காத விடயமாகி விட்டது.

அரசியல் நுண்ணறிவற்ற ஆயதப்போராட்டம் தோல்விகண்டுவிட்டது. இன்று தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கப் பேச்சுவார்த்தை முக்கியம். இலங்கையில் வரும் அரச அதிகாரத்தை அமைக்கும் எந்தத் தகமையும் புலம் பெயர்ந்து வாழும் எங்களுக்குக் கிடையாது. நாங்கள் புலம் பெயர் நாடுகளின் கடவுச் சீட்டை வைத்திருப்பவர்கள். இலங்கையில் யார் பதவிக்கு வந்தாலும் அவர்களுடன் பேசத் தயங்கமாட்டோம்.  ஜனநாயகம், சமத்துவம் என்பவற்றிகுப் போராட எங்கள் தகமைகளான எழுத்து மூலமோ அல்லது கலந்துரையாடல்கள் மூலமோ எதிரணியுடன் தொடர்புகளை உண்டாக்குவது அத்தியாவசியமானது. இதை நம்புவர்களில் எங்களின் சிறு குழுவும் அடங்கும். இதைப்பிடிக்காத சிலர் தனிப்பட்ட முறையில் எங்களைத் தாக்குவாதால் எங்களின் பணியை நிறுத்த முடியும் என்று நினைக்கிறார்கள்.

 இலங்கையில் நடப்பதாகப் புலிகளின் பத்திரிகைகள் எழுதும் பொய்வதந்திகளுக்கு எதிர்மாறக, இலங்கையில் நடக்கும் விடயங்களின் யாதர்த்தமான பரிமாணங்களை கனடாவிலுள்ள வானொலி தேடுகிறது என்பது அங்கு நடந்த நிகழ்ச்சியின்போது நிதர்சனமாகவிருந்தது. இவர்கள் லண்டன் ஊடகவாதிகளை விட மிகவும் உயர்ந்த விதத்தில் ஊடக தர்மத்தைப்பேணுகிறார்கள் என்று சந்தோசமாகவிருந்தது. இலங்கையைப்பற்றிய விடயங்களை உண்மைக்கப்பால் எழுதி புலம் பெயர் தமிழர்கள் தாய்நாட்டுக்குப்போகாமற் பண்ணுவதைப் பல தமிழ்த்தேசியப் புகழ்பாடும் பத்திரிகைகள் செய்கின்றன. அதுபோல்த் தாயகத்தில் வாழும் சில சுயநலவாதிகளும் , புலம் பெயர் நாடுகளிலுள்ள உறவினர்கள் இலங்கைக்கு வரக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதாக ஒருத்தர் சொன்னார். அதற்குக் காரணம், புலம் பெயர்ந்த தமிழர்களின் சொத்தைப் பராமரிக்கும் சொந்தக்காரர்களில் ஒரு சிலர் அந்தச் சொத்துக்களைக் காலக்கிரமத்தில் தங்களுடையதாக்கிக்கொள்ளத் தங்கள் சொந்தக்காரர் இலங்கை வருவதை விரும்பவில்லை என்று சொல்லப்பட்டது.

ஆனாலும்,புலம் பெயர்ந்துவாழும் பல முதிய தமிழர்கள் தாங்கள் தவழ்ந்த பூமியை ஒருதரம் தரிசிக்க ஆவலாகவிருக்கிறார்கள். தங்களின் பெற்றோர் பிறந்த பூமியைப் பார்க்கப் பல இளம் தலைமுறையினர் ஆவலாகவிருக்கிறார்கள். இவைநடந்தால் புலம் பெயர்ந்த மக்களுக்கு உண்மை நிலை தெரியும். தமிழ்ப்பகுதிகளில் சுமுக நிலை படிப்படியாகத் திரும்புவது;ம் நாட்டை முன்னேற்றப் பல அபிவிருத்தித் திட்டங்கள் நடப்பதும் தெரியும். மக்கள் சுதந்திரமாக நடமாடுவதைக் காண்பார்கள். தங்களின் இளம் பிள்ளைகளைப் புலிகள் வந்து போர்க்களத்துக்குப் பிடித்துக்கொண்டுபோயப் பலி கொடுப்பது இன்றில்லாதபடியால் தாய்கள் தங்கள் குழந்தைகளைச் சீராட்டிப் பாராட்டிப் பாடசாலைகளுக்கு அனுப்புவதைக் காண்பார்கள்.

 இலங்கையில் எல்லாக் கோயில்களிலும் மூன்று நேரபூசையும் தேரோட்டமும் திருவிழாவும் அமர்க்களமாக நடக்கின்றன. இளங்கோ அடிகளின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் வரும் சங்ககாலத் தமிழ்  அங்காடிகள்போல் யாழ்ப்பாணப் பெரிய கடை மக்களாலும் பொருட்களாலும் நிரம்பி வழிகிறது. முப்பது வருடத் கோயில்களுக்க யாத்திரைகள் செய்யாத பக்தர்கள் இலங்கையின் பல பகுதிகளிலும் வலம் வருகிறார்கள். சமயக் கொண்டாட்டங்கள், பாடசாலை விழாக்கள் நடப்பது கண்கொள்ளாக் காட்சிகள். உலகத் தமிழ்  எழுத்தாளர்களின் மகாநாடு கோலாகலமாக நான்கு நாட்கள் கொழும்பில் நடந்தது.

இவற்றையெல்லாம் புலம் பெயர்ந்த தமிழ்ப் பத்திரிகைகள் எழுதமாட்டார்கள். அவர்களின் விற்பனை முதற்பொருள் இலங்கையின் தமி;ப் பகுதிகளில் வாழும் தமிழ்ப் பெண்களின் அங்கங்கள் பற்றியதாவிருக்கும். தமிழ்ப்பெண்கள் இராணுவத்தால் பாலியல் கொடுமை செய்வதாக அடிக்கடி எழுதித் தன்மானமுள்ள தமிழ் இளைஞர்;களை உசுப்பிட்டால், அந்த இளைஞர்கள் இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபைக்கு முன் ஆர்பாட்டம் செய்வார்கள். அந்த ஆர்ப்பாட்த்தை ஒழுங்கு செய்யும் வாகனக்காரர் தொடக்கம் சாப்பாடு ஒழுங்கு செய்யும் கடைகள் என்பன நன்றாக உழைக்கும்.

இலங்கைத் தமிழரை ஒரு இழிந்த பிறவியினராகப் படம்போட்டுக்காட்டிப் பிழைப்பு நடத்தும் கூட்டத்திற்கு' வாழும் மனிதம்' குழவினர்போன்றோர் ஒழுங்கு செய்யும் நிகழ்ச்சிகள் பிரச்சினையாகத்தானிருக்கும்.

இலங்கையைப் பற்றி அவதூறு எழுதிப் பிழைக்கும் பல பத்திரிகைகளுக்கு, இலங்கையில் இன்று அவதிப்படும் தமிழ் ஏழைகளுக்கு என்ன செய்யலாம் என்ற கருத்தரங்கை ஓரம் கட்டிவிட்டு,  வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் எப்படி இலங்கை அரசை வீழ்த்தலாம் என்று திட்டமிடும் புனித போதகர்கள்  என்ன சொல்கிறார்கள் என்பதை எழுதுவது  இலாபம் தரும் விடயமாகும்.

புலம் பெயர்ந்த இடமேல்லாம் மக்கள் தங்கள் கலை கலாச்சார விழுமியங்கள், சாப்பாட்டுக் கடைகள், சமயச் சடங்குகளையெல்லாம் கொண்டுபோவார்கள். அதற்குத் தமிழ் மக்கள் விதி விலக்கல்ல. ஐரோப்பிய நாடுகளில் இருப்பதுபோல் கனடாவிலும் பல தரப்பட்ட தமிழக்கோயில்கள் இருக்கின்றன். பல தரப்பட்ட கடைகள் இருக்கின்றன. தாராளமாகப் பல கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன். டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் அறியாப் பருவக்குழந்தைதகள் கரும்புலிகளின் உடையணிந்து ஆட்டம் போடுகிறார்கள்.

சாமர்த்தியப பணச் சடங்குககள் அடிக்கடி நடக்கின்றன. ஐம்பது  வருடங்களுக்கு முன்னிருந்த யாழ்ப்பாணத்தின் சிந்தனை அங்கு நடைமுறைப் படுத்தப் படுகிறது. பணம் கிடைத்ததும் சமூகத்தில் பெரிய நிலை கிடைக்கத் தமிழ்த்தேசியம் உதவி செய்கிறது. இலங்கைத் தமிழர் ஒருத்தர் பல்லறிவுள்ள மனத நேயமுள்ளவராக இருந்தால் கிடைக்காத அங்கீகாரம், இலங்கையில் முரண்பாடுகளை முன்னெடுத்துத் தாயகத்தில் வாழும் தமிழருக்குக்கெடுதி செய்யும் வகையில் உணர்வுகளைத் தூண்டும் இனவாதப்பேச்சுக்கள் பேசினாற் கிடைக்கிறது..

 ஜனநாயம், சமத்துவம், சேர்ந்து வாழுதல் போன்றவற்றை முன்னிலைப்படுத்தும் மேற்கு நாடுகளில் (????) வாழும் தமிழர் ' தமிழன் என்றொரு இனமுண்டு , தனியே அவனுக்கொரு குணமுண்டு' என்பதை வலியுறுத்த எங்கு சென்றாலும் தங்கள் சாதித் திமிர், பிராந்திய வெறி, இனத்துவேசம், பெண்ணடக்கு முறைகள் என்பவற்றைத் தமிழ்த் தேசியக் கலாச்சாரப் பரிமாணங்களாக வளரும் தலைமுறைக்குப் பரப்பி வருவது சொல்லப் பட்டது.

 ஒருகாலத்தில் ஐரோப்பாவுக்கு ஓடிவந்த பெரியதொரு தொகையான தமிழரில், ஒரு குறிப்பிட்டவர்கள் இலக்கியம், முற்போக்கு சிந்தனைகள், புலிபாசிசத்துக்கு எதிரான போராட்ட எழுத்துக்கள் என்பனவற்றில் இணைந்திருந்தார்கள். ஆனால் கனடா சென்ற தமிழர் பெரும்பாலும் போரைச் சாட்டிக்கொண்டு பொருள் தேடப் போனவர்கள் என்றும் இவர்களின் வாழ்வின் அடிப்படையான   பொருளாதாரம், கனடாவில் வாழும் பிற்போக்குத் தமிழ்த்தேசியவாதிகளின் ஆதிக்கத்தில் இருப்பதால் பெரும்பாலோனோர் கும்பலில் கோவிந்தா பாடும் கூட்டமாக மாறிவிட்டார்கள் என்று சொல்லப் பட்டது. மனித நேயத்துக்காகத் துணிந்;து நின்று போரடி தனிமையான சீவியத்தில் வாழ்வதை யாரும் விரும்ப மாட்டார்கள் என்பது உண்மை.

புலிப்பாசிசத்தை எதிர்க்காவிட்டாலும் அவர்களுக்குத் தெரியாமல் இலங்கையிலுளள ஏழைத் தமிழர்களுக்கு உதவி செய்யும் ஒரு சிலரையும் சந்திக்க முடிந்தது.
 ஓரு காலத்தில்புலிகளுக்கு ஆதரவாளராகவிருந்து இன்று, அங்கு துயர்படும் தமிழருக்கு உதவி செய்யும் நல்ல மனிதர்களைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்ததுத் சந்தோசமே.

புலம் பெயர்ந்த நாடுகள் பலதில், தமிழ்ச் சமூகத்துக்கான பல தரப்பட்ட சேவைகளும் தமிழ்த்தேசியவாதிகளிடம் இருப்பதுபோல், கனடாவிலும்  பெரும்பாலான இலக்கியம் சம்பந்தப் பட்ட வேலைகளும் அவர்கள் ஆதிக்கத்தில் இருக்கின்றன. அவர்களால் அங்கிகரிக்கப்பட்டவர்களுக்குப் பரிசுகளும் பட்டாடைகளும்   தமிழ்த்தேசியம் வாரிவளங்கும். ஹிட்லர் காலமும் அப்படியே. நாஷிகளைப் பெருமைபாடினால் அன்று உயர் பரிசுகள் கிடைத்தன.

தமிழ்த்தேசியம் புலம் பெயர்ந்த நடுகளிலுள்ள அரச அங்கீகாரமும் பெற்றிருக்கிறது. தமிழ்த்தேசியம் தமிழர்களின் வாக்குத் தொகையைக் கட்டுப்படுத்துவதால் மேற்கு நாட்டு ஆளும் கட்சிகளும் அவர்களுடன் தங்கள் தேவைக்கு உறவாடும். ஆனால் அந்த ஆளும் கட்சிகளுக்கும் இவர்கள் யாரென்று தெரியும். தங்களுக்குப் பிடிக்காவிட்டால் பயங்கரவாதக் குற்றச்சாட்டையம் கொண்டுவரும்.
 
 ஓருகாலத்தில் ஐரோப்பிய நாடுகளில் நடந்த பெண்கள் சந்திப்பு, இலக்கிய சந்திப்பு போன்றவற்றில் மிகவும் ஆழமாத் தன்னையிணைத்துக்கொண்ட நிருபா என்ற பெண்ணைக் கனடாவில் காணக்கிடைத்தது மிகச் சந்தோசமாக இருந்தது. கள்ளம் கபடமற்ற சின்னப் பெண்ணாக இலக்கியம், பெண்ணியம், முற்போக்குவாதம் என்று ஜேர்மனியில் ஓடித்திரிந்தவா.;.

'நான் இப்போது எந்தச் சநதிப்புக்கும் போவது கிடையாது. இளம் வயதில் வெளுத்ததெல்லாம் பால் என்ற நம்பினேன். இப்படிச் சந்திப்பைச் சாட்டு வைத்துக்கொண்டு வந்த பல ஆண்கள்  மிகவும் நேர்மையற்றவர்கள். சில கலாநிதிகள் கவிஞர்கள் உட்பட பெரும்பாலானவர்கள் மிகவும் நடிக்கத் தெரிந்தவர்கள்;. அதே போலப் பல பெண்கள், பெண்ணியவாதம் பேசிக்கொண்டு  தங்களை முன்படுத்தி அடையாளம் தேட வந்தவர்கள், இப்போது நான் இலங்கையிற் துயர் படும் எழைகளுக்கு   என்னால் முடிந்தவற்றைச் செய்கிறேன். இங்கு இருப்பவர்களிற் பலர் போலிகள். தமிழ் உணர்;வை தொழிலின்  'முதலாகப்';போட்டு  வாழப்பழகிக்கொண்டவர்கள்' என்றார்.

 'தமிழ்த் தேசியவாதிகள் இலங்கையிலுள்ள ஏழைத்தமிழர்களுக்கு உதவாமல் இன்னும் இன்னும் முரண்பாட்டு அரசியலை நடத்துகிறார்களே, இலங்கையிற் பிரச்சினை தொடருவதை வளர்க்கிறார்களே' என்று ஆதங்கப் பட்டபோது ஒரு ஊடகவாதி சொன்னார்,

;' இவர்கள் ஒரு எருமைக் கூட்டம். உலகத்தில் எத்தனை மாறுதல்கள் வந்தாலம் அவற்றை உதறி எறிந்து விட்டுச் சேற்றுக்குள்ளேயே வாழப்பழகிவிட்டவர்கள். எருமை மாடு தான் ஒரு பெரிய மிருகம், தனக்கிருக்கும் கொம்பால் எவரையும் குத்தலாம் என்று நினைப்பதுபோல்; இவர்களும் தங்கள் பாசிச வெறியால் தங்களுக்கு மாற்றுக் கருத்துச் சொல்பவர்களைக் குதறித் தள்ளுகிறார்கள். துரோகிப் பட்டம் கொடுத்து ஒதுக்கி வைக்கிறார்கள். மாற்றுக் கருத்தாளர் பெண்களாயிருந்தால் கேவலமான வார்த்தைகளால் வையத்தொடங்கி விடுவார்கள். இவர்களின் தர்மமற்ற தத்துவங்களால் முள்ளிவாய்க்காலில் முற்றாக அழிந்தபின்னும் இறப்பில் பணம் படைக்கும் தமிழ்த்தேசியம் எப்படியோ தன்னை வளர்த்துக்கொள்ளும். எதிர்ப்பவர்களை அழித்துவிடும். இவற்றுக்கெல்லாம் பயந்த பெரும்பாலான தமிழர்கள், ; இவர்களுக்கு ஆமாம்சாமி சொல்வதை விட வேறு வழியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். என்று துக்கப்பட்டார்.

இவற்றையெல்லாம் தாண்டிய ஒரு குழுதான் 'கனடிய வாழும் மனிதம்'. ஓரு காலத்தில் இலங்கையிலேயே மிகப்பெரிய முற்போக்குவாதிகளை உருவாக்கியது யாழ்ப்பாணப் பொன்னகரம். சாதியின் பெயரால் தமிழர் ஒடுக்கப் பட்டதுபோது தார்மீகப் போர்புரிந்தவர்கள் இவர்கள். முப்பது வருடம் புலிகள் செய்த கொடுமைகளால் அழிந்தவர்கள்போக மிகுதியினர் இன்றும் ஒரு சமத்துவ சமுதாயத்தைப் படைக்க உழைக்கிறார்கள். இவர்களைவ் சந்தித்ததும் பல தமிழர்களிடமிருந்து பலவிதமான கருத்துக்களைப் பெற்றதும் ஒரு நல்ல அனுபவமே. இவர்களின் பணி தொடரட்டும் பரவட்டும்.

கருத்துகள் இல்லை: