வெள்ளி, 1 டிசம்பர், 2023

லஞ்சத்துடன் சிக்கிய ED அமலாக்கத்துறை அதிகாரி- மோடி ED லட்சணம் பாரீர்.. சிபிஎம் பாலகிருஷ்ணன்!

tamil.oneindia.com - Mathivanan Maran  :  சென்னை: திண்டுக்கல்லில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி ரூ31 லட்சம் லஞ்சப் பணத்துடன் சிக்கிய சம்பவத்தை முன்வைத்து மத்திய பாஜக அரசை சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பணியாற்றிய அங்கிட் திவாரி என்ற அமலாக்கத்துறை அதிகாரி திண்டுக்கல்லில் தனி நபரிடம் ரூபாய் 20 லட்சம் லஞ்சம்வாங்கிய போது கையும் களவுமாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினரால் பிடிபட்டிருக்கிறார்.


தமிழ்நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மீது ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை தீவிரமாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேலையில் இந்த சம்பவம்நடந்தேறி இருப்பது கவனத்திற்குரியது.
விசாரணையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் ஒன்றில் நடவடிக்கையைக் கைவிட உறுதியளித்து ரூ 20 லட்சம் லஞ்சம் திவாரி கேட்டதாகத் தெரியவந்துள்ளது. தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சஒழிப்புத் துறையினால் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

தொடையில் உள்ள புண் நடையில் காட்டும் என்று பழமொழி உள்ளது. அதைப்போலக் கடந்த மாதம் மணிப்பூர் மாநிலம் இம்பாலில் அமலாக்கத்துறையில் பணிபுரிந்த நாவல்கிஷோர் மீனா என்பவர் 15 லட்சம் லஞ்சம் பெற்றதாக ராஜஸ்தான் மாநில லஞ்சஒழிப்புத்துறை கைது செய்யப்பட்டு இருப்பதும் கவனிக்கத்தக்கது. லஞ்ச ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் அமலாக்கத்துறை ஒன்றிய அரசின் ஏவல்துறையாக மட்டுமே இருப்பது நகைப்புக்குரியது. இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

    லஞ்ச ஊழல் புகாரில் சிக்கும் அமலாக்கத்துறை
    குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பணியாற்றிய அங்கிட் திவாரி என்ற அமலாக்கத்துறை அதிகாரி திண்டுக்கல்லில் தனி நபரிடம் ரூபாய் 20 லட்சம் லஞ்சம்வாங்கிய போது கையும் களவுமாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினரால்… pic.twitter.com/4GkTUsmKoS
    — Jawahirullah MH (@jawahirullah_MH) December 1, 2023

சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை அங்கித் திவாரி‌ என்பவர் மதுரையில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

ஏற்கனவே ரூ.31 லட்சம் லஞ்சமாக வாங்கிய அந்த அதிகாரி, அடுத்த தவணையாக ரூ. 20 லட்சம் பெறும்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் மாட்டிக்கொண்டுள்ளார். இதுபோல வசூலாகும் லஞ்சப் பணம் யாருக்கெல்லாம் பங்கு போகிறது என்பது துருவி விசாரிக்கப்பட வேண்டியதாகும். அதற்காக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு செய்துள்ளனர். இது அவசியமான நடவடிக்கை.

கூண்டோடு சிக்கும் மதுரை அமலாக்கத்துறை ஆபீஸ்? லஞ்சத்தை கூறு கூறாக பங்கு பிரித்த அதிகாரிகள் யார் யார்? கூண்டோடு சிக்கும் மதுரை அமலாக்கத்துறை ஆபீஸ்? லஞ்சத்தை கூறு கூறாக பங்கு பிரித்த அதிகாரிகள் யார் யார்?

சில நாட்கள் முன்புதா‌ன் ராஜஸ்தானில் இதே‌ போல ஒரு அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக மாநில அதிகாரிகளிடம் மாட்டினார்.

    மோடி ஆட்சியில், ED யின் லட்சணம் பாரீர் !
    ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை அங்கித் திவாரி‌ என்பவர் மதுரையில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

    ஏற்கனவே ரூ.31 லட்சம் லஞ்சமாக வாங்கிய அந்த அதிகாரி, அடுத்த தவணையாக ரூ. 20 லட்சம் பெறும்போது
    — கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan (@kbcpim) December 1, 2023

ஏற்கனவே, ஊழல்வாதிகளை தப்ப விடுவதற்கு சி.பி.ஐ அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது, பாஜகவை சார்ந்த நபர்கள் மத்திய முகமைகளின் பேரால் லஞ்சம் வாங்குவது, பாஜகவினர் வீட்டில் சோதனைக்கு சென்றுவிட்டு கட்சியினர் தலையீட்டுக்கு பணிந்து திரும்பி வருவது‌ என அடுக்கடுக்கான முறைகேடுகளை பார்த்து வருகிறோம். பிரதமர் மோடியின் ஆட்சியில், ஒன்றிய விசாரணை முகமைகள் அனைத்தும் அரசியல் ஏவலுக்கான துறையாக மாறிப்போய் விட்டன. அதற்காகவே வானளாவிய அதிகாரங்களை அந்த முகமைகளிடம் குவிக்கப்பட்டன. இப்போது, மோடி ஆட்சியின் ஊழல் முறைகேடுகளும் மத்திய முகமைகளில் ஊடுருவி கேடுகெட்ட நிலைமைக்கு ஆளாகிவிட்டுள்ளன. இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: