திங்கள், 27 நவம்பர், 2023

இந்தியா - மது போதையில் பணிக்கு வந்த 1000 ரயில் ஓட்டுநர்கள்..இதுதான் 'சரக்கு' ரயிலோ.

tamil.samayam.com - ஜே. ஜாக்சன் சிங்  :  டெல்லி: இந்தியாவில் மது அருந்திவிட்டு பணிக்கு வந்ததாக சுமார் 1000 ரயில் ஓட்டுநர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஆர்டிஐ மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. லட்சக்கணக்கான பயணிகளை அழைத்து செல்லும் ரயில் ஓட்டுநர்கள் இவ்வளவு அலட்சியமாக செயல்பட்டிருப்பது திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகிலேயே அதிக ரயில் விபத்துகள் நிகழும் நாடுகளில் ஒன்றாக இந்தியா ஏன் இருக்காது என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது.
இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக விளங்குவது ரயில்வே தான்.


ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வசிக்கும் நாடு என்பதால், இந்தியாவில் ரயில்வேயின் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது.
மற்ற பொது போக்குவரத்துகளை ஒப்பிடும் போது, ரயில்களில் தான் குறைந்த அளவிலான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல, ரயில் விபத்து அதிகம் நிகழும் நாடுகளில்

இத்தனை மக்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்து செல்லும் ரயில் ஓட்டுநர்கள் எத்தனை கவனமாக இருக்க வேண்டும்? அவர்கள் செய்யும் சிறு தவறு கூட ஆயிரக்கணக்கான உயிர்களை பலியாக்கி விடும் அல்லவா? ஆனால், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கெளர் என்பவர் தாக்கல் செய்து பெற்ற தகவல்களோ நம் வயிற்றில் புளியை கரைக்கின்றன.

ஏனெனில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 995 ரயில் ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு பணிக்கு வந்தது தெரியவந்திருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், மேற்கு, வடக்கு, மத்திய வடக்கு ரயில்வேக்கள் என 3 ரயில்வே மண்டலங்கள் மட்டும் தான் இந்த தகவலை கொடுத்திருக்கின்றன. தெற்கு ரயில்வே உட்பட பல ரயில் மண்டலங்களில் இதற்கான தரவுகள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மூன்று மண்டலங்களிலேயே கிட்டத்தட்ட 1000 ரயில் ஓட்டுநர்கள் மது அருந்தி ரயில் ஓட்டிருக்கிறார்கள் என்றால், மற்ற மண்டலங்களில் எண்ணிக்கை வெளியிடப்பட்டால் மினி ஹார்ட் அட்டாக்கே நமக்கு வந்திருக்கும் என்கின்றனர் மூத்த ரயில்வே அதிகாரிகள்.

இந்நிலையில், இப்படி சிக்கிய ரயில்வே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரயில்வே விளக்கமும் அளித்திருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை, ரயில் ஓட்டுநர்களிடம் பணி நேரத்தின் போதோ அல்லது பணி நேரத்திற்கு பிறகோ தான் பெரும்பாலும் இந்த போதை பரிசோதனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், வெளிநாடுகள் பலவற்றிலோ விமான பைலட்டுகளை போல ரயில் ஓட்டுநர்களுக்கும் பணி நேரத்திற்கு முன்பாகவே போதை பரிசோதனை செய்யப்படுகிறது. எனவே, இந்திய ரயில்வேயும் இந்த முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஜே. ஜாக்சன் சிங்
டிஜிட்டல் கன்டென்ட் புரொடியூசர்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள்

கருத்துகள் இல்லை: