Robert Caldwell |
Vimalaadhithan Mani : ராபர்ட் கால்டுவெல் என்ற திராவிட கருத்தியல் ஆசான் !!!
தமிழ்மொழி சம்ஸ்கிருதம், கிரேக்கம், சீனம் ஆகியவற்றிற்கு சளைக்காத ஒரு தனித்துவமான செம்மொழி என்பதை உலகிற்கு நிரூபிக்கும் விதமாக
” A comparative grammar of the Dravidian or South-Indian family of languages “ நூலினை எழுதியவர் ராபர்ட் கால்டுவெல். அவர் மட்டும் இந்த நூலை எழுதியிருக்காவிட்டால் இந்திய மண்ணில் தமிழ் மொழியின் பெருமையைக் குழி தோண்டிப் புதைத்திருப்பார்கள். .
”A Political and General History of the District of Tinnevelly ” என்ற நூலையும் அவர் எழுதினார்.
கால்டுவெல் வெறும் மொழியறிஞர் மட்டுமில்லை.
அவர் வெகு தீவிரமான சமூகமுகம் கொண்டவரும்கூட என்பதை அவரது வாழ்க்கையை ஊன்றி கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திராவிட மொழிகள் தனித்துவமான ஒரு திராவிட மொழிக் குடும்பம் என்பதைக் கால்டுவெல் நிறுவினார்.
ஏறக்குறைய 1816 வரை இந்திய மொழிகளுக்கு எல்லாம் முதன்மை சமஸ்கிருதம் என்ற பரப்புரை விவாதத்திற்கு இடமின்றி தொடர்ந்தது.இந்த வாதம் தவறு என 1816ல் பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் என்ற ஆங்கிலேய அதிகாரி இங்கே சமஸ்கிருதம்,பிராகிருதமல்லாத திராவிட மொழிக் குடும்பம் என்ற ஒன்று இருக்கிறது என அறிவித்தார்.
இந்தியா என்பது வேதங்களின் நாடு என்பதை சில ஆதிக்க பிரிவினர் வலியுறுத்திய வேளையில் வேதமில்லாத பண்பாடுகளின்,வேத மறுப்பு பண்பாடுகளின் நாடாகவும் இந்தியா இருந்துள்ளது என்பதை நிலைநாட்ட கால்டுவெல்லின் ஆய்வுகள் தெளிவுபடுத்தியது.
அதனால்தான் பார்ப்பனர்களும் அவர்களின் அடிவருடிகளாக இருக்கும் RSS சங்க பரிவாரங்களும் இன்றுவரை கால்டுவெல்லை திட்டி தாக்கி பேசி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக