துடியலூர் பேருந்து நிலையம் வாழ் மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்க!
முதல்படத்தில் ஒரு 8 வயது பெண் குழந்தை தியேட்டருக்குள் பிச்சை எடுக்கிறாள்.
எதுக்கு பணம் என்றதும் புத்தகம் நோட்டு வாங்க அப்பா அம்மாவிடம் 500 ரூபாய் நோட்டு தான் உள்ளது என பிச்சை எடுக்க அனுப்பியதாக பதில் தந்தாள்.
அடுத்த படத்தில் ஒரு அம்மா குழந்தையுடன் பிச்சை எடுக்கிறார்.
ஏன் பிச்சை எடுக்குறீங்க? கணவர் என்ன செய்கிறார் என்றதும் அவர் வேலைக்கு போவதில்லை.குழந்தையுடன் வேலைக்கு செல்ல முடியவில்லை அதனால் பிச்சை எடுக்கிறேன் என்றார்.
கையிலிருக்கும் குழந்தை தன் தாயைப்போல் கை நீட்டி அதே போல் பிச்சை கேட்கிறது.
குழந்தையின் கையை மடக்கி மேல தூக்கி விட்டு குழந்தையை கை இப்படி உசத்தி உரிமை கேட்டு சண்டை போட பழகனும்.கை நீட்டி பழக்கி விடக்கூடாது.(நம்ம என்ன போற போக்குல அட்வைஸ் கொடுப்போம்.தொடர்ந்து வாழ்வாதார சிக்கல்னா என்ன செய்வாங்க?
3 ,4 வது படத்தில் பேருந்து நிலையத்தில் வசிக்கும் வயதானவர்கள்.இவர்களும் அங்கு பிச்சை எடுத்தே வாழ்கின்றனர்.
ஒரு பேக்கரி வாசலில் வயதான ஒரு அம்மாவை சுற்றியுள்ள பலர் போகச்சொல்லி விரட்டினர்.அந்தம்மா கையில் கம்புடன் இங்க தான் இருப்பேன் என்றார்.
ப்ரெட் வாங்க பேக்கரி போனேன்.ஒரு ப்ரெட் பாக்கெட் வாங்கி கொடுத்தேன்.அம்மா ஒரு ஜீஸ் மட்டும் வாங்கித்தா என்றார்(சுயமரியாதைக்காரரா நாம பேசுற பேச்சை கேட்டாலே கெஞ்சலாம் மாட்டாங்க..வாங்கித்தான்னு உரிமையா கேட்க ஆரம்பிச்சிருவாங்க..)
..தலை சுத்துது என்றார்..சுகர் இருக்கா என்றேன்.அதெல்லாம் இல்லம்மா என்றதும் .2 ஜூஸ் வாங்கி கொடுத்தேன்.குடிச்சார்.சிரித்தார்.
கம்பை ஊன்றிக்கொண்டு பேக்கரி அருகில் இடத்தைக்காலி செய்து பேருந்து நிலையத்துக்கு ப்ரெட்டுடன் சென்று விட்டார்.பசிக்கு வழி கிடைத்தால் அவர்கள் ஏன் அடுத்த கடை முன் இருக்கப்போகின்றனர்?
சிறுவர்கள் கையேந்துதல்,பிக் பாக்கெட் குற்றச்செயல் பழக வாய்ப்பு இருக்கு.பழக்கப்படுத்தி விடுதல் இயல்பா நடக்கும்.
ஒருத்தர் 2 பேரெனில் எதாவது NGO வழி வாழ்வாதாரத்துக்கு முயற்சிக்கலாம்.இது ஒரு க்ரூப் மக்கள் பேருந்து நிலையம் ,மார்க்கெட் அருகில் என ரோட்டில தான் வாழ்க்கையே நடத்துறாங்க.இது பல மாதமாக தொடர்கதை..
தீர்வு காண்பவர்கள் கண்களுக்குள் இத்தனை பேரும் படவில்லை என்பதை கண்டிப்பாக ஏற்க முடியாது.
முக்கியமான ஒன்னு எல்லார்க்கும் பணப்பற்றாக்குறையில் மட்டும் பிச்சை எடுக்கவில்லை.அது ஒரு பழக்கமாக வழக்கப்படுத்தி பள்ளி செல்லும் குழந்தையையும் செய்ய வைக்கின்றனர்.சிலர் உண்மையிலேயே ஏதுமற்றவர்கள் தான்.
தயவு கூர்ந்து #எல்லார்க்கும்எல்லாம். என கொடுக்க பகுதி திமுக பொறுப்பாளர்கள் முன் வர வேண்டுகிறேன்.
லோகநாயகி.
24.10.23
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக