மாலை மலர் : கட்டாரில் எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு நேற்று அங்குள்ள நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தனியார் நிறுவனமான அல் தஹ்ராவில் பணிபுரிந்த இந்திய பிரஜைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உளவு பார்த்ததாகக் கூறப்படும் வழக்கில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை கத்தார் அதிகாரிகளோ அல்லது புது டெல்லியோ பகிரங்கப்படுத்தவில்லை.
கட்டார் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்களையும் இந்தியா திரும்பக் கொண்டுவர சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தெரிவித்துள்ளது.
கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் அஜய் அலோக், வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே இந்த விஷயத்தை ஆராய்ந்து வருகிவதாகவும் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
இந்த பிரச்சினையில் இந்தியா தனது நிலைப்பாட்டை முறையாக வைத்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்களும் நடப்பதை கண்டு நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். இந்த விவகாரத்தில் நாங்கள் சட்டப் போராட்டம் நடத்துவோம். சர்வதேச நீதிமன்றம் உள்ளது.
இந்திய அரசு தனது நிலைப்பாட்டை எடுக்கும் என்று நான் நம்புகிறேன். அவர்களை அங்கிருந்து மீட்டெடுப்பதில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக