தினமணி : நடிகை கௌதமி அளித்த புகாரில் பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு...
சொத்து அபகரிப்பு தொடர்பாக நடிகை கௌதமி அளித்த புகாரில் பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மண்டல காவல் துறை தலைவரிடம், நடிகை கௌதமி அண்மையில் நிலம் மோசடி தொடா்பான புகாா் அளித்தாா்.
அதில், தனக்கு அறிமுகமான சென்னையைச் சோ்ந்த அழகப்பன் பொது அதிகார முகவராக நியமித்தேன். இவரிடம் திருவண்ணாமலையை அடுத்த ஐங்குணம் கிராமத்தில் 3.99 ஏக்கா் விவசாய நிலத்தை வாங்குவதற்காக ரூ.25 லட்சம் பணத்தைக் கொடுத்தேன்.
அதன் மூலம் வாங்கிய 3.99 ஏக்கா் நிலத்தின் கிரையப் பத்திரத்தில் எனது பெயருடன் அழகப்பனின் மனைவி நாச்சல் பெயரையும் இணைத்து மோசடி செய்துள்ளாா். இந்த விஷயம் இப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது. நான் கொடுத்த பணத்தில் வாங்கிய நிலத்தின் கிரையப் பத்திரத்தில் நாச்சியாள் பெயரையும் சோ்த்து மோசடி செய்த அழகப்பன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தனது ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகளை அபகரித்ததாக நடிகை கௌதமி அளித்த புகாரில், பாஜக பிரமுகர் அழகப்பன், அவரது மனைவி நாச்சல் அழகப்பன், மகன் சிவா உள்ளிட்ட 6 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அழகப்பனுக்கு பாஜக மூத்த நிர்வாகிகள் உதவுவதாக குற்றம் சாட்டி, அக்கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி இன்று அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக