திங்கள், 23 அக்டோபர், 2023

அமிதாப் பச்சனின் 7 மிகப்பெரிய முதலீடுகளும் .. அவற்றின் மதிப்பும்

tamil.goodreturns.in -Goodreturns Staff  :  பாலிவுட்டில் மிகவும் வெற்றிகரமான மற்றும் செல்வாக்கு மிக்க நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன் அக்டோபர் மாதம் தான் 81வது பிறந்த நாள்-ஐ கொண்டாடினார்.
பழம்பெரும் நடிகர் 50 வருடங்களுக்கும் மேலாக இந்தி திரைப்படத் துறையில் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறார்.
வெள்ளித்திரையில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல் பல்வேறு வணிகங்களிலும் வெற்றி கண்டுள்ளார். பிக் பி என்று பிரபலமாக அறியப்படும் அமிதாப் பச்சன். இவருடைய மொத்த சொத்து மதிப்பு 3,190 கோடி ரூபாய்.
நடிப்பு மற்றும் பிராண்ட் ப்ரோமோஷன் அவரது முதன்மையான வருமான ஆதாரங்கள் என்றாலும், அவர் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதன் மூலம் தனது நிதி ஆதரங்களை பன்முகப்படுத்தியுள்ளார்.
சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக்கில் (ஐ.பி.டி.எல்) சிங்கப்பூர் ஸ்லாமர்ஸ் டென்னிஸ் அணியின் இணை உரிமையாளராக இருப்பதில் துவங்கி தயாரிப்பு மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை நடத்துவது வரை, 81 வயதான நடிகர் ஆண்டுக்கு ரூ.60 கோடி சம்பாதிக்கிறார்.


அமிதாப் பச்சன் திரைப்படத்தில் நடிப்பதை தாண்டி 7 பிரிவில் அதிகப்படியான வருமானத்தை பெற்று வருகிறார்.

Film Production and Event Management: 1994 ஆம் ஆண்டில், அமிதாப் பச்சன் அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் லிமிடெட் (ABCL) என்ற ஒரு ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை உருவாக்கினார். இதன் மூலம் நிகழ்ச்சி, சினிமா தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை நிறுவினார்.

ஏபிசிஎல் நிறுவனம் மிருத்யுதாதா (1997) மற்றும் மேஜர் சாப் (1998) ஆகிய திரைப்படங்களை தயாரித்தது மற்றும் மிஸ் வேர்ல்ட் 1996 நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்தது.

Endorsements: அமிதாப் பச்சனின் எல்லை தாண்டிய பிரபலம் மூலம் பல முக்கிய பிராண்டுகள் அவரை தங்கள் பிராண்டின் முகமாக தயாராக உள்ளன. ஒவ்வொரு என்டோர்ஸ்மென்ட்-க்கும் அமிதாப் பச்சன் ரூ.5-8 கோடி வரை வசூலிக்கிறார். தற்போது கேட்பரி, டாபர், நெஸ்லே மற்றும் பெப்சி போன்ற பல்வேறு பிரபலமான உள்நாட்டு மற்றும் சர்வதேச பிராண்டுகளுக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Real estate: அமிதாப் பச்சன் மும்பையில் ஐந்து பங்களாக்களை (ஜல்சா, பிரதீக்ஷா, ஜனக் மற்றும் வத்சா) வைத்திருப்பதோடு, உலகம் முழுவதும் பல ரியல் எஸ்டேட் சொத்துக்களையும் வைத்திருக்கிறார். அவர் தனது குடும்பத்துடன் ஜல்சா வீட்டில் வசிக்கும் போது, பிக் பி தனது சில சொத்துக்களை மும்பையில் வாடகைக்கு விட்டுள்ளார்.

அந்தேரி, லோகந்த்வாலா சாலையில் உள்ள அட்லாண்டிஸ் கட்டிடத்தின் 27வது மற்றும் 28வது மாடியில் அமைந்துள்ள அவரது டூப்ளக்ஸ் ஒன்று நடிகை க்ரித்தி சனோனுக்கு மாதம் ரூ.10 லட்சத்துக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கூடுதலாக, 81 வயதான நடிகர் தனது ஜூஹு சொத்துக்களில் ஒன்றை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு 15 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டுள்ளார்.

Investment : 2013 ஆம் ஆண்டில், அமிதாப் பச்சன் ஜஸ்ட் டயலில் 10% பங்குகளை வாங்கினார். மேலும் ஸ்டாம்பீட் கேபிடல் (3.4%) மற்றும் மெரிடியன் டெக் ஆகியவற்றிலும் முதலீடு செய்தார். ஆன்லைன் கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் பகிர்வு தீர்வுகள் நிறுவனமான Ziddu.com இல் பச்சன் குடும்பம் முதலீடு செய்தது.

Hosting television shows: 81 வயதான நடிகர், 20 வருடங்களுக்கு மேலாக புகழ்பெற்ற வினாடி வினா நிகழ்ச்சியான கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அமிதாப் பச்சன் சீசன் 14 இன் ஒவ்வொரு எபிசோட்-க்கும் சுமார் ரூ. 4-5 கோடி சம்பாதித்துள்ளார், இது முதல் சீசனில் அவர் பெற்ற ஒரு எபிசோடில் ரூ.25 லட்சம் சம்பளத்தில் இருந்து பல மடங்கு உயர்ந்துள்ளது.

கவுன் பனேகா குரோர்பதியை தொகுத்து வழங்குவதைத் தவிர, பிக் பாஸ் மூன்றாவது சீசனையும் பிக் பி தொகுத்து வழங்கியுள்ளார்.

Tennis team: 2015 ஆம் ஆண்டில், அமிதாப் பச்சன் UD குழுமத்துடன் இணைந்து, சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக்கில் (IPTL) சிங்கப்பூர் ஸ்லாம்மர்ஸ் என்ற டென்னிஸ் அணியை வாங்கினார்.

NFT: டிஜிட்டல் நிதியுலகில் முதன்மையாக நுழைந்த இந்திய பிரலங்களில் அமிதாப் பச்சன் முக்கியமானர். சில வருடங்களுக்கு முன்பு அமிதாப் பச்சன் Non-fungible tokens எனப்படும் NFT-யில் முதலீடு செய்தார். தற்போது அமிதாப் பச்சன் 7.18 கோடி ரூபாய் மதிப்பிலான NFT வைத்துள்ளார்.

தற்போது அமிதாப் பச்சன் ஒரு திரைப்படத்திற்கு 6 கோடி ரூபாயை சம்பளமாக பெறுகிறார். ஆனால் சமீபத்தில் 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
Amitabh Bachchan business empire: 7 sources of income apart from movies 

கருத்துகள் இல்லை: