தமிழ் மறவன் : பாரதியின் ஆரியப்பற்று குறித்து சில பாடல்களை காண்போம்..
"இன்னல்வந் துற்றிடும் போததற்கஞ்சோம்
ஏழையராகி இனிமண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்
கன்னலும் தேனும் கனியும் இன்பாலும்
கதலியும் செந்நெலும் நல்கும் எக்காலும்
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவம் இஃதை எமக்கிலைஈடே."
இப்பாடலில் ஆரியத்தை "உன்னத ஆரியம்" எனக் குறிப்பிடுகிறார்.
மிக முக்கியமான செய்தி இந்தியத் துணை கண்டத்தையே "ஆரிய நாடு" என்றே எப்போதும் குறிப்பிடுகிறார் பார்ப்பன பாரதி
மேலும் பிரிதோர் பாடலில்..
"தேனார் மொழிக்கிள்ளாய்! தேவியெனக் கானந்த
மானாள்பொன் னாட்டை அறிவிப்பாய் -- வானாடு
பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்
ஆரியநா டென்றே அறி." என இம்மண்ணை பார்ப்பன நாடாக அறிவிக்கிறார் பாரதி!
இன்னுமோர் பாடலில்...
"என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.
மூன்று குலத்தமிழ் மன்னர் என்னை மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளி னுள்ளே உயர் ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்" என்கிறார்.
இங்கே "உயர் ஆரியம்" எனக் குறிப்பிடுவதை கவனியுங்கள்.
தன் பாடல்களில் தன் ஆரிய இனத்தை குறிப்பிடும் இடங்களிலெல்லாம்..
உன்னத ஆரியம்,
உயர் ஆரியம் என குறிப்பிடுவதும், பட்டியலின மக்களை குறிப்பிடுகையில்..
"ஈனப் பறையர்க ளேனும -- அவர் எம்முடன் வாழ்ந்திங்
கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ?" என ஒடுக்கப்பட்ட மக்களை ஈனப்பறையர் என்று பட்டமளிக்கிறார்!
பாரதியின் பார்ப்பன சுயசாதி வெறியும்,
பட்டியலின மக்களின் மீதான வெறுப்பையும் உணர அவர் பாடல்களே போதுமான ஆதாரம் என்கிறேன்.
தொடர்வேன்...
- மு.தமிழ் மறவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக