ராதா மனோகர் : பொதுவில் பன்னாட்டு காப்பரேட்டுக்களில் உச்ச பதவிகளை வகிக்கும் நம்மவர்கள் பற்றி பெரிதாக நல்ல அபிப்பிராயம் எனக்கில்லை
பலரும் நமக்கு வாய்த்த அடிமைகள் புத்திசாலிகள் என்பது போலத்தான் உள்ளார்கள்.
வெறும் எலும்பு துண்டுகளுக்காக மக்களை வாட்டிவதைத்து பன்னாட்டு முதலாளிகளுக்கு இலாபம் சம்பாதித்து கொடுபதில் வல்லவர்கள்.
ஒரு மோசமான கங்காணிதன்மை என்பது நம்மவர்களிடம் தாராளமாக உண்டு.
இவர்களுக்கு மிக உயர்ந்த பொறுப்பினை கொடுக்கும் முதலாளிகள் முட்டாள்கள் அல்ல.
உள்ளூர்காரனை பிடித்தால் அவன் மனிதாபிமானம் எதிக்ஸ் மாரால் கிரௌண்ட் என்றெல்லாம் நமக்கே வகுப்பெடுப்பான்
ஆனால் தெற்காசிய அடியாட்கள் அப்படி அல்ல
காசு மணி துட்டு . அம்புட்டுதே
ரிஷியை பிரதமராக்கியதே குடிவரவலர்கள் மீது ஈவு இரக்கம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க இதுதான் சரியான கருவி என்ற நோக்கத்தில்தான்
அதே பாணியில் தன்னையும் அமெரிக்க மக்கள் நம்புவார்கள் என்ற கோணத்தில்,
குடிவரவாளர்களின் குழந்தைகளின் குடியுரிமைக்கு வேட்டுவைக்கும் சட்டத்திற்கு ஆதரவாக இந்த அய்யர்வாள் பேசுகிறார்
நம்மவர் உயர்கிறார் என்று மட்டும் பார்ப்பதிலும் பார்க்க அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்றுதான் பார்க்கவேண்டும்
சென்ற இடத்தில எல்லாம் மனு அநீதியை செயல்படுத்தும் முனைப்பில் இருக்கிறாரா என்பதை உன்னிப்பாக கவனிக்கவேண்டும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக