மாலை மலர் : உச்சநீதிமன்ற உத்தரவின் படி தமிழகத்திற்கு காவேரி நீர் திறந்து விடப்பட்டு இருப்பதை கண்டித்து கர்நாடக மாநிலத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மேலும் கர்நாடக மாநிலத்தில் இன்று முழு அழைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், காவேரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று கூடியது. இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு அக்டோபர் 15-ம் தேதி வரை தினமும் விநாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்து கர்நாடக முதலமைச்சர் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங் தெரிவித்து உள்ளார். மேலும் மேகதாது விவகராம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடப்போவதாக அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக