திங்கள், 23 ஆகஸ்ட், 2021

தமிழ்நாடு அரசு வங்கி" உதயமாகிறது

 கி.பிரியாராம் கிபிரியாராம்  :  தமிழ்நாடு அரசு வங்கி"  உதயமாகிறது!
தமிழ்நாடு அரசின் சார்பாக வங்கி ஆரம்பிப்பதை கொண்டாடுகிறீர்களே அதனால் என்ன பலன் என்று நண்பர்கள் கேட்கிறார்கள்.
அவற்றை விரிவாக பார்ப்போம்.
1.  எந்த ஒரு வங்கியிலும் பொதுமக்களின் சேமிப்பு பணம் பல்லாயிரம் கோடி இருக்கும்.
இன்றைய நிலையில் தமிழர்கள் பல்லாயிரம் கொடி சேமிப்பு பணம் தேசியமயமாக்கப்பட்ட  வங்கிகளிலும் தனியார் வங்கிகளிலும் இருக்குன்றன. அந்த பணம் வட இந்திய பெருமுதலாளிகளின் தொழிலுக்கு கடனாக கொடுக்கப்படுகின்றன.
உதாரணமாக ஆஸ்திரேலியாவில் சுரங்க்த்தொழில் செய்ய அதானிக்கு ஆறாயிரம் கோடி கடனை SBI வங்கி வழங்கியது. தமிழ்நாட்டில் இருப்பவர்களின் பல நூறுகோடி சேமிப்பு பணம் SBI வங்கியில் இருக்கும். ஆனால் அவை முதலீடாக தமிழ்நாட்டிலேயே வருமா என்றால் அது கேள்விக்குறிதான்.
அவை பெரும்பாலும் வட இந்திய பெருமுதலாளிகளுக்கு கடனாக கொடுக்கப்பட்டு அவற்றில் பல நூறு கோடி வாராக்கடனாக கொள்ளையடிக்கப்படுகிறது. தமிழர்களின் சேமிப்பு தமிழ்நாட்டிலேயே முதலீடு செய்யப்படும்போது வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும்.


2. வங்கியின் மேலாளரும் காசாளரும் வட இந்தியாவில் இருந்து வந்து இந்தியில் திமிராக ஆணவமாக பேச வேண்டிய தேவை இருக்காது.
3: வங்கியின் படிவங்கள் தமிழில் இருக்கும். இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இருக்கும் என்று இருக்க முடியாது.
4. வேலைவாய்ப்பில் 69 % இட ஒதுக்கீடு பின்பற்றப்படும். இந்தியாவில் வேறு எந்த வங்கியிலும் இந்த அளவிற்கு இட ஒதுக்கீடு இல்லை.
5. அரசின் நலத்திட்ட உதவிகள் பொதுமக்களைச் சென்றடைய இந்த வங்கியை பயன்படுத்த முடியும்.
6. நிதியமைச்சர் பலமுறை சொன்னது போல நம்மிடம் தகவல்கள் இல்லை. ஒரு வங்கியின் மூலம் அரசுக்கு கிடைக்கப்போகும் தகவல்கள் ஏராளம். ஒவ்வொரு பகுதியின் வளரச்சியைக்கூட கணக்கிட முடியும்.
7. அ்ரசின் இன்னொரு நிதியாதாரமாக இருக்கும்.
8. எதிர்காலத்தில் வட இந்திய வங்கிகள் திவாலாகும்போது குறைந்த பட்சம் நம் மக்களின் பணமாவது பாதுகாப்பாக இருக்கும்.
9. வெளிநாடு வாழ் தமிழர்கள் தாராளமாக தங்களது சேமிப்பிற்காக இந்த வங்கியை நம்பிக்கையுடன் பயன்படுத்துவார்கள்.
10. உலகின் பொருளாதார வளர்ச்சி வங்கிகளுக்கு பிறகுதான் பலமடங்கு வளர ஆரம்பித்தது. அதுதான் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மூலதனத்தை கொடுத்தது. ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான வங்கியை உருவாக்குவது அவசியம்.
அறிஞர் அண்ணாவின் மாபெரும் கனவின் முதல்படி.💐
Shared

கருத்துகள் இல்லை: