Kay Vee : செல்லாது செல்லாது =
ரோலிங் ஸ்டோன் பத்திரிக்கையின் இந்திய பதிப்பு இன்று அறிவு புகைப்படத்துடன் ஒரு Digital Cover வெளியிட்டுள்ளது .
அதாவது இந்த அட்டைப்படம் அச்சில் வராது ஆனால் அவர்களின் சமூக வலைதளத்தில் வரும் . இது வழக்கமான ‘மக்கள் தொடர்பு’ கண்துடைப்பு என்பதை தாண்டி ஒன்றும் சொல்வதற்கில்லை.
புதிதாக பாடல் வெளிவரும் சமயம் இது போன்ற அட்டைப்படம் வருவது இயல்புதான் என்று ஒரு சாரார் கூறுகின்றனர் .
( புதிய சினிமா படம் வெளியாகும் போது அந்த நடிகரின் பேட்டி பல ஊடகங்களில் வருமே அது போல ) . ஆனால் அப்படியான கட்டுரையை அந்த எல்லையோடு அதாவது புதிய பாடலை புரமோட் செய்வதோடு நிறுத்தியிருக்க வேண்டும் .
ஒட்டு மொத்த தமிழ் பாடகர்கள் குறித்தும் அறிவு குறித்தும் அவர் பங்களிப்பு குறித்தும் சிலாகித்து எழுதிவிட்டு படம் மட்டும் போடாதது தான் glaring omission .
கல்யாண வீட்டில் ஒன்று மொய் வாங்காமல் ஒருக்க வேண்டும் அல்லது அப்படி வாங்கினால் மொய் வைத்தவர் பெயர் அறிவிக்க வேண்டும்.
குறைந்த பட்சம் ஒரு புரமோவை ஒரு பத்தி அல்லது கவர் ஸ்டோரி போலவோ காட்ட முயற்சித்திருக்கக்கூடாது .
இதே போல சில மாதங்களுக்கு முன் Dhee வேறொரு பிரெஞ்சு DJ வுடன் 'எஞ்ஞாயி எஞ்ஞாமி' பாடலை ரீமிக்ஸ் செய்து வெளியிட்டிருக்கிறார். அதன் புரமோவாக வந்த செய்தியிலும் அறிவின் படம் இல்லை . வேண்டுமானால் அவர்களில் தளத்தில் போய் தேடிப்பார்க்கலாம் அறிவு குறித்த குறிப்புகள் பல கட்டுரைகளில் வந்திருக்கும் ஆனால் எதிலுமே படம் வந்திருக்காது .
அந்த பத்திரிக்கையில் பெரிதாக அறிமுகமே இல்லாத பல பாடகர்கள் குறித்த குறிப்புகள் , கட்டுரைகள் எல்லாம் வந்திருக்கும்போது . அதை விட பரவலாக அறியப்பட்ட, நல்ல பாடல்களை அளித்த அறிவுக்கு ஏன் அந்த visibility அளிக்கப்படவில்லை என்பதே இங்கு அடிப்படை கேள்வி .பரப்பிசை பெரிதும் இமேஜை நம்பி இருக்கும் துறை இந்த visibility இருப்பதும் இல்லாமல் இருப்பதும் ஒருவரின் கேரியரையே தலைகீழாக மாற்றும் தன்மை கொண்டது .
ரோலிங் ஸ்டோனின் அடுத்த அச்சு இதழிலாவது அறிவு குறித்தும் அவரின் பாடல்கள் குறித்தும் ஒரு முழுமையான குறிப்புடன் அட்டைப்படம் அல்லது Inset படம் வந்தால் அதை மனமுவந்து நிகழும் ஒரு அடையாளப்படுத்தல் என்று கருதலாம் .
ரோலிங் ஸ்டோன் புத்திசாலித்தனமானவர்களாக இருந்தால் இதை தயங்காமல் முன்னெடுப்பார்கள் . ஒரு நல்ல பாடகர் குறித்த அறிமுகம் பத்திரிக்கையின் நல்லெண்ணத்திற்கும் வாசகர்களில் விரிவாக்கத்துக்கும் உதவும் , ஒட்டுமொத்த indie music சூழலுக்குமே இது நல்லது . அறிவு இதற்கெல்லாம் தகுதியானவரே என்று தயங்காமல் சொல்லலாம் . Hope better sense and goodwill prevails.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக