மதுரை மன்னன் : சென்னை மாகாணத்தின் தலைநகரமும்,
தற்கால தமிழகத்தின் தலைநகரமுமான,
சென்னை உருவான தினம் இன்று. ( 22 ஆகஸ்ட் 1639 )
கிழக்கிந்திய கம்பெனியைச்சேர்ந்த Francis Day, Andrew Cogan ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் ஜெயின்ட் ஜார்ஜ்கோட்டை (Fort St George - தற்போதைய சட்டசபை) உள்ள இடத்தை வாங்கினார்கள்.
அந்த இடத்தை விற்ற வந்தவாசியை ஆண்ட வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட அய்யப்ப நாயக்கர் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கர் (Damarla Chennapa Nayaka) என்பவரின் நினைவாக இந்நகருக்கு சென்னை எனப்பெயரிட்டனர்.
இதனால் இன்றைய தினம் சென்னை தினமாக கொண்டாடப்படுகிறது.
இணைப்பில் இது சம்பந்தமான சில அச்சுப்பிரதிகள்.
சென்னை என்ற பெயர் வைப்பதற்கு முன் இப்பகுதி மதறாஸ் (Madras) என்று அழைக்கப்பட்டது, இதற்கான சரித்திரம்……………………
சென்னை சாந்தோம் தேவாலயத்திற்கு முதலில் "கடவுளின் அன்னை" எனப்பொருள்படும் போர்த்துக்கீசிய மொழியில் “Madre de Deus” என்று பெயர் இருந்தது “Madre de Deus” என்ற இந்த ஆலயத்தின் பெயரால் இப்பகுதி “Madre de Deus” என அழைக்கப்பட்டு, அது Madras - மதறாஸ் என மருவியது. இதன்படியே சென்னையின் பழைய பெயர் மதறாஸ் ஆனது, இன்றும் பலர் மெட்ராஸ் என்றே அழைக்கின்றனர்.
பின்னர் கி.பி. 1500 க்குப்பின்பு இத்தேவாலயம் சாந்தோம் தேவாலயம் (Santhome Basilica) என பெயர்பெற்றது.
சாந்தோம் தேவாலயம் (Santhome Basilica) பெயர்க்காரணம்………………………
கி.பி. 72 ல் சென்னைக்கு கிறிஸ்துவத்தை பரப்ப வந்து சென்னையில் கொல்லப்பட்ட இயேசு கிறிஸ்துவின் 12 புனித சீடர்களில் ஒருவரான புனித தோமா, புனித தோமையார் என்று அழைக்கப்படும், Thomas the Apostle ன் கல்லறை சென்னை சாந்தோம் தேவாலயத்தில் உள்ளது, இவரின் பெயரால் இத்தேவாலயம் பின்னர் சாந்தோம் தேவாலயம் (Santhome Basilica) என பெயர்பெற்றது.
புனித தோமா என்பதன் போர்த்துக்கீசிய San + Thome என்ற சொல்லில் இருந்து சாந்தோம் உருவாயிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக