எல் ஆர் ஜெகதீசன் :உண்மையில் பத்மா சேஷாத்ரி பள்ளியின் முதன்மை உரிமை யாருக்கு என்பது தொடர்பில் ஒய்ஜிபி குடும்பத்தார் மீது நீண்டநாட்களாக ஒரு வழக்கொன்று நடந்துகொண்டிருந்தது.
அந்த பள்ளியை அவர்கள் சட்டவிரோதமாக கைப்பற்றிக்கொண்டார்கள் என்பது குற்றச்சாட்டு,.
இந்த பள்ளி, பாலபவன் என்கிற பெயரில் பொதுசேவையில் ஈடுபாடுகொட பெண்கள் சிலர் இணைந்து சங்கம் அமைத்து கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டது என்றும்,
அந்த மகளிர் கூட்டு முயற்சிக்குதான்அன்றைய காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசு அரசாங்க நிலத்தை பொதுப்பள்ளியின் பயன்பாட்டுக்கு கொடுத்ததாகவும்,
ஆனால் காலப்போக்கில் அந்த பள்ளியின் நிறுவன உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் ஒய்ஜிபி குடும்பம் ஓரம்கட்டி மொத்த பள்ளியையும் தானே கைப்பற்றிக்கொண்டார்கள்,
என்பதும் தான் வழக்கின் பிரதான குற்றச்சாட்டே.!
பள்ளியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த திருமதி ஒய்ஜிபி பள்ளியின் பெயரையும் பால பவன் என்பதில் இருந்து தன் பேருக்கு மாற்றிக்கொண்டதோடு பொதுஅமைப்பாக இருந்த அந்த பள்ளியை தன் குடும்ப நிறுவனமாக மாற்றிக்கொண்டார் என்பது கூடுதல் குற்றச்சாட்டுகள்.
அதனால் பாதிக்கப்பட்ட நிறுவன உறுப்பினர்களில் ஒருவர் திருமதி ஒய்ஜிபிக்கு எதிராக அந்த வழக்கை தொடுத்திருந்தார். அந்த வழக்கு கட்டுகளோடு அவர் தமிழ்நாட்டு ஊடகங்களின் கதவை நீண்டகாலம் தட்டிக்கொண்டிருந்தார். ஆனால் ஊடகங்கள் அந்த சர்ச்சையை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. முக்கியகாரணம் திருமதி ஒய்ஜிபிக்கு தமிழ்நாட்டு ஊடகங்களிடமும் ஊடகவியலாளர்களிடமும் இருந்த செல்வாக்கு. ஜாதிப்பாசத்தோடு தமிழ்நாட்டு ஊடகர்களில் பலர் அந்த பள்ளியில் தத்தம் குழந்தைகளை சேர்ப்பதை பெரும் வாய்ப்பாக கருதினார்கள் என்பதும் காரணம்.
தமிழ்நாட்டு அரசாங்கம் அந்த பழைய புகார்களையும் விசாரித்து உண்மையை கண்டறியவேண்டும். ஏனெனில் இந்த பள்ளியின் நிலம் அரசாங்க நிலம். பொதுப்பயன்பாட்டுக்காக கொடுக்கப்பட்டது. அதை தனியார் அபகரிப்பு செய்வது சட்டப்படி குற்றச்செயல்.
பிகு: ஒருவகையில் இந்த பாலபவன் பள்ளி பத்மாசேஷாத்ரி பள்ளியாக மாறிய கதையைப்போன்றது தான் குமுதம் நிறுவனம் பறிபோன கதையும். பயந்த சுபாவிகளான செட்டிநாட்டுக்குடும்பத்திடம் இருந்து குமுதம் நிறுவனம் மொத்தமாய் இன்னொரு குடும்பமும் இப்படித்தான் அபகரித்துக்கொண்டு ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் இவர்கள் தான் அடுத்தவர்கள் மீது எல்லாவிதமான அபகரிப்புக்குற்றச்சாட்டுக்களையும் ஆவேசமாக முன்வைக்கிறார்கள், பெரிய நியாயவான்களைப்போல.
Surya Xavier : YGP குடும்பத்தில் P என்பது பார்த்தசாரதி என்று அனைவருக்கும் தெரியும். YG க்கு விரிவு என்ன தெரியுமா ?
யக்ஞ குஞ்சான். குஞ்சான் ( Gunjan ) என்பது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பார்ப்பனர்களின் சர் நேம்.( Sur name)
பாண்டே, சர்மா என்பது பீஹார் மாநிலத்தில் கங்கை கரையிலுள்ள பக்சார் பகுதியின் பார்ப்பனர்கள் பெயர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக