எல் ஆர் ஜெகதீசன் : சமகால அரசியல்வாதிகளின் மனைவிகளில் அதிகபட்ச சோதனைகளையும் மன உளைச்சலையும் அலைச்சலையும் சந்தித்தவர்.
இந்திய ஒன்றிய அரசாங்கத்தையும் அதன் பிரதமர்களையும் ஒரு பத்தாண்டுகாலம் நிர்ணயிக்கும் வலிமைபெற்றிருந்த திமுக என்கிற மாநில கட்சியையும் அதன் தலைவர் கலைஞரையும் குறிவைத்து டில்லி சுல்தானியமும் அதன் சூத்ரதாரிகளான முப்புரிநூலோரும் சேர்ந்து உருவாக்கிய திட்டமிட்ட சதிவலையில் பாரதப்போரின் அபிமன்யுவைப்போல் மோசமாக சிக்கிக்கொண்டவர் ஆ ராசா.
ஒட்டுமொத்த ஹிந்திய சர்வாதிகார நிறுவனங்களாலும் ராசா துரத்தித்துரத்தி வேட்டையாடப்பட்டபோது ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக ஆ ராசா ஒருபக்கம் தன் மீதான தாக்குதல்களை திறமையோடும் தைரியமாகவும் நேருக்கு நேர் நீதிமன்றத்தில் எதிர்கொண்டாலும் அவரது மனைவியாக இவர் சந்தித்த பெரும் நெருக்கடி சொல்லிமாளாது.
மிகச்சிலர் மட்டுமே அறிந்த கொடுமையான காலமது.
அந்த கொடுமை போதாதென ராசாவையும் கனிமொழியையும் தொடர்புபடுத்தி அன்றைய தமிழ்நாட்டு முதல்வரும் ஆணவக்கொழுப்பே ஆனப்பெரிய பெண்ணியம் என்றுகொண்டாடும் தமிழ்நாட்டு மேல்தட்டு பெண்ணியவாதிகளின் பெண்ணீய அரசியல் ஆதர்ஷமான ஜெயலலிதா முதல் விகடன் உள்ளிட்ட தமிழ்நாட்டு Mainstream Media தொடங்கி சமூக ஊடக பொறுக்கிகள் வரை எழுதிக்குவித்த அவதூறுகளையும் அது ஏற்படுத்திய மன உளைச்சல் பாதிப்புகளும் மறுபக்கம். அத்தனைக்கும் ஈடுகொடுத்து நின்றவர்.
விடியும் என்கிற நம்பிக்கையே அற்றுப்போன அந்த இருண்டகாலத்தில் ஆ ராசாவுக்கு உண்மையான உறுதுணையாக நின்றவர்கள் இரண்டுபேர். ஒருவர் அவரது கட்சித்தலைவர் கலைஞர். மற்றவர் அவர் மனைவி.
இன்று தன் மீதான களங்கத்தை நீதிமன்றத்தில் நேர்கொண்டு வீழ்த்திய ஆ ராசாவோடு அவர் இன்னும் ஒரு பத்தாண்டுகாலமாவது வாழ்ந்து மறைந்திருக்கலாம். ராசாவுக்கும் அவரது மகளுக்கும் எவ்வளவோ ஆறுதலாய் உறுதுணையாய் இருந்திருக்கும். மகள் வளர்ச்சியின் முழுமையை நேரில் கண்டு மகிழும் தாயாகவும் அவர் இருந்திருப்பார்.
ஆனால் ஏனோ இயற்கை அதை அனுமதிக்கவில்லை. அவருக்கு இந்த மரணத்தின் மூலம் கொடிய புற்றுநோயின் வலிமிகுந்த வாழ்விலிருந்து விடுதலையாக கிடைத்திருக்கலாம். ராசாவுக்கும் அவர் மகளுக்குக்கும் அவர்கள் வாழ்வில் வலிமிகுந்த இன்னொரு கட்டம். அவர்கள் இருவரும் அதிலிருந்து மீள இயற்கை வழிகாட்டட்டும். ஆழ்ந்த இரங்கல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக