சனி, 29 மே, 2021

அமெரிக்க சுவாமி நாராயணன் கோயிலில் இந்திய கொத்தடிமைகள்! அமெரிக்க FBI போலீஸ் அதிரடி ரெயிட்

May be an image of text that says 'theprint.in Swaminarayan temple in US raided, workers taken from India treated as forced labour: Report 90 labourers removed from site by US federal agencies. In lawsuit, 6 workers alleged they were paid merely 10% of hourly minimum wage, forced to live in gruelling conditions. SHUBHANGI MISRA 12 May, 2021 Print BAPS Shri Swaminarayan Mandir, Robbinsville, New Jersey www.baps.org'

தமிழ் இளந்திரையன்  :   அமெரிக்காவில் பார்ப்பனர்களால் பொதுமக்களின் நன்கொடையில் கட்டப்பட்டு இயங்கிவரும் கோவில்களில் ஒன்றான ,
நியுசெர்சி மாநிலத்திலிருக்கும் சுவாமிநாராயணன் கோவிலில் சட்டத்திற்குப் புறம்பாக,
இந்தியாவிலிருந்து பிற்படுத்தப்படுத்த வகுப்பினரை அரசின் குறைந்தபட்ச சம்பள பரிந்துரைக்கும் 90% குறைவாக கொடுத்துப் பணியமர்த்தி,
அந்த பணியாளர்களை ஒரு குறிப்பிட்ட அரணுக்குள்ளேயே அடிமைகளாக வைத்திருந்தது தெரியவருகிறது. அமெரிக்க அரசின் FBI எனப்படும் குற்றப்புலனாய்வுத்துறை இந்த கோவில் மற்றும் அதன் ஆளுமைகளின் மீதும் வழக்குத்தொடுத்து ஆய்ந்துவருகின்றனர்.
மேலும் இந்தக்கோவிலின் அறக்கட்டளை பாசகவிற்கு 2.1 கோடி நன்கொடை அளித்ததும் தெரியவருகிறது. தமிழகத்திலும் அரசிடமிருந்து கோவில்களைப் பறிக்கப் போராடுவது பாசகவினரே என்பதை நோக்காமல் கடந்துசெய்வது கடினம்தான்.  swaminarayan-temple-us-raided


தமிழக அரசிடமிருந்து கோவில்களை கைப்பற்றினால் பார்ப்பனியம் வளர்க்கப்போவது கடவுளையல்ல அதன் பெயரில் அடிமைத்தனத்தையே என இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. மேலும் இதையெல்லாம் இந்திய பார்ப்பன ஊடகம் மக்களுக்குத் தெரயப்படுத்தாது!
செய்தியின் இணைப்புகள்:
https://www.nytimes.com/.../nj-hindu-temple-india-baps.html
https://theprint.in/.../swaminarayan-temple-in-us.../656884/

கருத்துகள் இல்லை: