இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, பள்ளி மாணவிகளுக்கு அனுப்பிய ஆபாச படம், குறுஞ்செய்திகளை ராஜகோபாலன் வரதாச்சாரியார் நீக்கியுள்ளார். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் நீக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீண்டும் எடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கிட்டதட்ட 6 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற விசாரணையில், கடந்த 5 ஆண்டுகளாக 11, 12 ஆம் வகுப்பு மாணவிகளிடம் வாட்ஸ் ஆப் மூலம் சாட் செய்து பாலியல் தொந்தரவு அளித்ததும், மாணவிகளிடம் அந்தரங்க போட்டோவை அனுப்ப வற்புறுத்தியதும், பள்ளியில் தன்னைப் போன்று மேலும் சில கருப்பு ஆடுகள் உள்ளதாக ராஜகோபாலன் வரதாச்சாரியார் கூறியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
பல மணி நேர விசாரணைக்கு பின்பு, ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோர்கள் மூலம் புகார் அளிக்க முன்வர வேண்டும். புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். எந்தவித அச்சுறுத்தலும் வராது என சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் 9444772222 என்ற செல்போனில் தொடர்புக் கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-வினிதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக