திங்கள், 17 மே, 2021

முதல்வர் தலைமையிலான குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

முதல்வர் தலைமையிலான குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

 minnambalm :கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவைத் தமிழக அரசு அமைத்திருக்கிறது. இதில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகளவு பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த ஆலோசனை வழங்குவதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதில், நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கச் சட்டமன்றக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஓர் ஆலோசனைக் குழு அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 13 பேர் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

1.திமுக – மருத்துவர் நா.எழிலன்

2.அதிமுக – மருத்துவர் சி.விஜயபாஸ்கர்

3.காங்கிரஸ் – ஏ.எம்.முனிரத்தினம்

4.பாமக – ஜி.கே.மணி

5.பாஜக – நயினார் நாகேந்திரன்

6.மதிமுக – தி.சதன் திருமலைக்குமார்

7.விசிக – எஸ்.எஸ்.பாலாஜி

8.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – வி.பி.நாகை மாலி

9.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – தி.ராமசந்திரன்

10.மமக – ஜவாஹிருல்லா

11.கொ.ம.தே.க – ரா.ஈஸ்வரன்

12.தமிழக வாழ்வுரிமை கட்சி – தி.வேல்முருகன்

13.புரட்சி பாரதம் – பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக் குழுவானது அவசர அவசியம் கருதி நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் பெற அவ்வப்போது கூடி விவாதிக்கும் என்று அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

கருத்துகள் இல்லை: