ஞாயிறு, 16 மே, 2021

முருங்கையும் காமமும் உண்மை என்ன? பிசின்,முருங்கைக் கீரைக்குதான் விந்து சக்தியும், உயிரணுக்களைக் கூட்டும் சக்தியும் உண்டு! ... முருங்கை காய்?

முருங்கைக் காய் எதுக்கெல்லாம் நல்லது?- Dinamani

Umamaheshvaran Panneerselvam   :   முருங்கை மரத்துக்கு பிரம்ம தண்டி என்று இன்னொரு பெயர் உண்டு.
பிரம்மம் என்றால் படைப்பு. தனது ஒவ்வொரு பாகமும் மக்களுக்கு பயன் தரும் வகையில் இருப்பதாலும்,  விந்து சக்தியை நேரடியாக கூட்டவல்லதாக இருப்பதாலும் அதற்கு அது காரணப் பெயர்.
நிற்க.
முருங்கையில் பல்வேறு நற்குணங்கள் இருக்கிறது. ஆனால் முருங்கை பிசின், முருங்கைக் கீரை இவற்றுக்கு தான் விந்தை கெட்டிப்படுத்தும் சக்தியும்,
உயிரணுக்களைக் கூட்டவல்ல சக்தியும் உளது.
அப்பொழுது சினிமாவில் காட்டுவது போல் முருங்கைக்காயில் இது இல்லையா என்று கேட்கலாம். இல்லை என்பதே உண்மை.
முருங்கைக் காய் விந்தை நீர்த்துப் போகச் செய்யும் ஒரு பொருள்.
விந்து கெட்டிப்படாமல் நீர்த்துப் போவதால் அது மிகும். விந்து மிகுவதால் விந்து நிறைய சுரப்பதுபோல் தோன்றும். ஆனால் அது அடர் விந்தாக இருக்காது. நீர்த்த விந்து. Sperms concentration
அதனால் மாறுபட்டு பெண்ணின் உடம்பில் செல்லும் successful sperm எண்ணிக்கைக் குறையும்.


ஒரே செடி. ஆனால் அதன் ஒரு பகுதி விந்து கெட்டிபடுவதற்கும், மற்றோர் பகுதி விந்து நீர்த்துப் போவதற்கும் செயல்படுகிறது.
இதை நுணுக்கமாக அணுகாவிடில் விந்து நாசம்.
விந்துவிட்டவன் நொந்து கெட்டான் என்ற சொலவடை எல்லாம் முன்னோரின் அனுபவ மொழி.
பாக்கியராஜ் சொல்வதை அப்படியே கேட்டு முருங்கைக் காயை மட்டும் உண்டு, கீரையை , பிசினை, முருங்கப்பட்டையை கழித்துவிட்டால் சத்து கெட்டு, விந்தும் கெட்டும் உடல் நலிவது திண்ணம்.
ஒரே செடியை முழுவதுமாக புரிந்துகொள்ளாவிடில் இது தான் சிக்கல். சினிமா, ஊரில் காஜ்ஜு வெறி பெருசுகள் பேச்சை மட்டும் கேட்டு முருங்கைக் காயை தின்றுவந்த செட்டுக்கு விந்து நீர்த்துப் போயிருக்கும் என்பது தான் எதார்த்தம்.
இது தான் அரைகுறை வைத்தியம் எனப்படுவது.
மீண்டும் நிற்க. கஞ்சா போதைப்பொருள். கஞ்சா உண்பதை நான் ஊக்குவிப்பது இல்லை. சதுரகிரி சாதுக்கள் சொன்னதை இங்கே பகிர்கிறேன். சிவபானம் எனும் கஞ்சா அருமருந்து. ஆனால் அதில் உள்ள விதைகளை கவனமாக களையாமல் உட்கொண்டால் அந்த விதைகளால் சித்த பிரம்மை ஏற்படும். இலை மட்டுமே அதில் நன்மை. விதைகள் உடலுக்கு விஷம்.
போக, நன்றாக தாவரங்களை படித்தவர்களிடம் கேளுங்கள் .குறிப்பாக மந்திரயோகம், தாந்திரீகம் பயின்றவர்களிடம்.  சில மூலிகைகள் பெளர்ணமி அன்று பறிக்க வேண்டும். அப்பொழுது தான் அதில் சில வேதிப்பொருட்கள் இருக்கும். சிலவற்றை அமாவாசயைன்று பறிக்க மட்டுமே சித்தியாகும். இன்னும் சில தாவரங்கள் சாபம் கொடுக்கும் என்பது ஐதீகம். முறையான சாப நிவர்த்தி கொடுக்காமல் , சுத்தி செய்யாமல் பயன்படுத்தினால் அது விஷமாகும் என்பது சித்த மரபு. சில தாவரங்கள் குறிப்பிட்ட நட்சத்திர நாளன்று தான் வெளியே பூக்கும். சுவாதி, ரோகிணி, மிருகசீரிடம் என நாட்காட்டியில் நாள் காட்டும் அல்லவா. அன்று தான் சிற்சில மூலிகைகள் சக்தி மிகுந்தவையாக இருக்கும்.
அழுக்கண்ணி, தொழுக்கண்ணி என இரண்டு மூலிகைகள். அவிசிறந்த மூலிகைகள். இவற்றில் ஒன்றை ( எது என சொல்ல விரும்பவில்லை) பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும். இன்னொன்றை காய்ந்த நிலையில் வைத்திருந்தால் குடும்பம் சிதறுண்டு போகும் என்பது சித்த மரபு. போலவே சிவகரந்தை, விஷ்ணுகரந்தை இரண்டையும் , சுடுகாட்டில் விளையும் வெள்ளெருக்கு செடியின் வேர் வைத்து ஆண்பெண் வசியம் செய்யலாம். சரியாக பயன்படுத்தாவிடில் உயிருக்கு ஆபத்து நேரும்.
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். தாவரங்களின் மருத்துவ/விஷ குணங்கள், மாந்திரீகம், ரசவாதம், காயகல்பம், காயசுத்தி இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய ஆனால் சரியான புரிதல் இல்லையென்றால் உயிருக்கு ஊறு விளைவிக்கக்கூடிய ஆபத்தான  கல்வியியல்.
போலவே ஒரே செடியாக இருந்தாலும் அது விளையும் ,இடம் சூழல் பொறுத்து அதிலுள்ள வேதிப்பொருட்கள் மாறுபடும். ஒருமுறை சிவகரந்தை தேடி புதுகோட்டை வரை சென்று புவனேஷ்வரி அம்மன் கோயில் அருகே எடுத்தோம். பின்னர் திருவில்லிப்புத்தூர் மடவர் வளாகம் அருகே இன்னொரு சிவகரந்தை எடுத்தோம். இரண்டும் ஒரே செடி. ஆனால் புதுக்கோட்டையில் எடுத்தது கொஞ்சம் சுத்தமான இடத்தில் விளைந்ததும், திருவில்லிப்புத்தூர் மடவார் வளாகம் அருகே எடுத்தது கொஞ்ச அசுத்தமான இடத்திலிருந்தும் வந்ததாக இருந்ததால் அவற்றின் தன்மை diagonally different ஆக இருந்தது.
ஆக, பல்வேறு சூழல், இடம் இவற்றில் விளையும் ஒரே செடியை தீவிரமாக ஆராய்ந்து வகைமைப்படுத்தும் அனுபவம் இருந்தால் மட்டுமே அதை சரியாக பயன்படுத்த முடியும்.
இப்பொழுது கூறுங்கள். நீங்கள் நாட்டு மருந்து கடைகளில் போகிற போக்கில் வாங்கும் எத்தனை மூலிகைகள் பற்றிய நுட்பமான அறிவு நமக்கு இருக்கிறது. அவை சுத்தி செய்யப்பட்டவையா அல்லது சரியான முறையில் தயாரிக்கப்பட்டவையா, அல்லது சரியான இடத்திலிருந்து சரியான நேர கால ஹோரையில் எடுக்கப்பட்டவையா என்று எத்தனைப் பேருக்குத் தெரியும் ?
இத்தகைய சிக்கல்கள் எல்லாம் இருப்பதால் தான் நோய்நீக்கும் மூலிகைகள் என்று கொடும் நோய்க்கு பெரியதாக பரிந்துரைக்காமல் கரிசாலை எனும் கரிசலாங்கண்ணியை மட்டுமாவது உண்டு வாருங்கள் என minimal risk இருக்கும் மூலிகையை வள்ளலார் பரிந்துரைத்தார்.
இப்படி herbology, அதிலும் மாந்திரீகம், நோய் நீக்கியல் சார்ந்து இயங்கும் herbology ஒரு சிக்கலான, ஆபத்து நிறைந்த பாடம்.
வெளிப்டையாக சொல்லவேண்டுமானால் சித்த மருத்துவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலருக்கும் இது தெரியாது. தெரிந்தவர்கள் சிலர் லாப நோக்கம் பார்க்காமல் நோய்நாடி நோய்முதல் நாடி என்பதுபோல் சரியாக ஒவ்வொருவரை சித்த மரபின்படி அணுகி மருந்து தருவார்கள். Strenuous process. சும்மா வாட்சாப்பில் கிராம்பு, அதிமதுரம் சப்பு, அஷ்வகந்தாவை ஓம்பு என்று காமாசோமா என்று அனுப்பிக்கொண்டிருக்க மாட்டார்கள். இது தான் உண்மை.
இது எனது version. அல்லது எனது school of thought. இதே இன்னொரு சித்த மருத்துவ ஆர்வலரிடம் போனால் இன்னொரு சித்தர். இன்னொரு மரபு, இன்னொரு பயன்பாட்டு முறை, தயாரிப்பு முறைமுறை சொல்வார்.
Patient data. Failure rate, success rate, excipients , formulations, efficacy and efficiency, LD50 value என எவருக்குமே History இருக்காது. அதுபோக முக்கியமான விஷயம் reproducible result இருக்காது. Internal blot clot க்கு மருந்து இருக்காது. Aneurysm burst என்றால் என்ன என்றே புரியாது. Hypoxia என்றால் என்னவென்று புரியாது. ஆனால் உங்களுக்கு என்வென்றே தெரியாத ஒரு வேரை வாயில் வைத்து Rootjob செய்ய சொல்வார்கள்.(வாய்வலிக்க நீங்கள் Rootjob செய்தாலும் அந்த வியாதி சரியாகாது என்பது வேறு விஷயம்). கொடுக்கும் சித்த மருந்தில் paracetamol, azithromycin , ibruprofen கலந்து உங்களுக்குக் கொடுத்தால் நானும் ஓர் ஜுர நீக்கி சித்தர். நான் கொடுப்பதில் என்ன இருக்கிறது, எனக்கு என் மருந்துக்கு தரச்சான்று இருக்கிறதா என்று பார்க்காமல் சித்தா என்ற பெயரை மட்டும் பார்த்து உண்ணும் நீங்கள் எனக்கு ஆட்டு மந்தையாக பணம் கொழிக்கும் இயந்திரமாக இருப்பீர்கள். நானும் சுகவாழ்வு வாழ்வேன்.
இன்றும் பிரபல சித்த மருத்துவர்களாக தங்களைக் காட்டிக்கொள்ளும் சில அயோக்கிய சிகாமணிகள் முதல் நாளிலேயே ஒரு லட்சம் கட்டு என்றும், ஆக்சிஜன் அளவு குறைகையில் ஒன்றரை லட்சம் கட்டு என்று அப்பாவிகளை ஏமாற்றும் கதையை சக ஊடகவியலாலர்களின் கூற்றால் கண்டு அதிர்ச்சியுற்றேன். பின்னர் ஆக்சிஜன் அளவு குறைந்ததும் எடுத்துக்கிட்டு தனியார் நவீன மருத்துவமனைக்கு ஓடச்சொல்லும் வீர சித்த வைத்தியர் கதையைக் கேட்டதும் காறித் துப்பலாம் என்று தோன்றியது.
இதனால் தான் மூடுமந்திரமாக இருக்கும் ஏமாற்று மருத்துவ முறைகளை நம்பாதீர்கள், proven medicine பக்கம் நின்று உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று கேட்கிறோம். ஆனால் swiggy ல் order செய்யும் pizza வில் என்னென்ன Toppings, என்னென்ன crest, என்னென்ன seasonings என்று நூத்து நூத்து பார்க்கும் நாம் சித்தா என்ற பெயரைப் பார்த்தாலே வாயை மூடி எந்த கேள்வியும் இல்லாமல் உண்போம். எவ்வளவு அவலம் இது ? உங்கள் மருந்துக்கு , அதன் பக்க விளைவுக்கு யார் பொறுப்பு ?
இந்த ஆபத்தன விளையாட்டை குறைந்தப்பட்சம் கொரோனா மாதிரியான உயிர்கொல்லி நோய் காலத்திலாவது விளையாடாமல் proven medicine பக்கம் நில்லுங்கள் என்று கேட்கிறோம்.
இல்லை அதையும் மீறி கண்ட கண்ட whatsapp forward, குன்சாக அடித்துவிடும் composition, கிராம்பை ஓம்பு என்று சொல்லும் மருத்துவ வாயர்கள், விட்டலாச்சாரியா காலத்து வைத்திய முறையர்களை நம்புவேன், கண்ட கண்ட சுரக்குடிநீர், நில ஓம்பு சூரணம் சரியான முறை தெரியாமல் குடித்து cytokine storm உருவாக்கிக் கொண்டு மண்டையைப் போடுவேன் என்றால் தாராளமாக செத்து விடுங்கள்.
இதுபோல் அகால மரணமடையும் ஆட்களின் உடலில் இந்த வேதிப்பொருட்கள் இருக்கும் அவர்களைது மண்டை ஓட்டுக் கபாலம் என்பது விசேஷ சக்தி நிறைந்ததாக இருக்கும் என்று (மூட?) நம்பிக்கையோடு சில மந்திரவாதிகள் சுடுகாட்டில் தவம் கிடப்பார்கள். அவர்களது மாந்திரீக தாந்திரீக பூசைகளுக்கும், யெட்சிணி வசிய முறைகளுக்கும் உங்கள் கபாலம் நன்கு பயன்படும்.
வெறுமனே சாவதைவிட குறைந்தபட்சம் ஒரு ஏழை சுடுகாட்டு மந்திரவாதிக்காவது பயனுள்ளவகையில் சாவது தானே நம் பாரம்பரிய தமிழர் வாழ்வியல் ?

கருத்துகள் இல்லை: