புதன், 19 மே, 2021

புலிகள் கலைஞரை மீறி பாஜகவை நம்பியது ஏன்? போர்நிறுத்ததை ஏன் மீறினார்கள்

 தணிகை குமரன்  : கலைஞரின் உண்ணாவிரத்திற்கு பிறகு சீஸ்ஃபயர்அறிவிப்பு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் சென்னைக்கு வந்து இலங்கைஅரசு அனுப்பிய ஃபேக்ஸ் செய்தியைக் காட்டுகிறார்.
காலை 7 மணிக்கு துவங்கிய உண்ணாவிரதத்தை 2 மணியளவில் முடிக்கிறார் கலைஞர்.
ஆனால் அடுத்த மூன்று நாட்களில் மீண்டும் போர் துவங்கியது எப்படி..?
கலைஞரின் உண்ணாவிரதத்திற்கு அடுத்த தினத்திற்கு அடுத்த தினம் புலிகளின் அரசியல் ஆலோசகராய் அப்போது இருந்த திரு.நடேசன் "நாங்கள் செய்வது பின் வாங்கும் தந்திரோபாயம்! 

கருணாநிதி எங்கள் வெற்றியை மழுங்கச் செய்கிறார் என்று அறிக்கை வெளியிட்டார். "இன்னும் ஒரு சில தினங்களில் இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்துவிடும், பிஜேபி நிச்சயம் வெல்லும். அதுவரை தாக்குப் பிடியுங்கள்" என்று தமிழக அரசியல்வாதிகள் குடுத்த யோசனையைக் கேட்டே புலிகள் போரை நீடித்ததாக நார்வே குடுத்த அறிக்கை இப்போதும் இணையத்தில் இருக்கிறது!
போர் நிறுத்தம் என்றால் இரு தரப்பும் நிறுத்த வேண்டும். ஒருவர் மட்டும் நிறுத்தி மறு தரப்பு நிறுத்தாமல் அடிப்பதற்கு பெயர் போர் நிறுத்தம் அல்ல.
கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார். அறிவிப்பு வந்தது. ஆனால் நாங்கள் தொடருவோம் என்று சொன்னவர்கள் யார்..?


அன்றைக்கு ,
மொத்த மீடியாவும் திமுகவுக்கு எதிராக இருந்த நிலையில் பல செய்திகள் மக்களிடம் மறைக்கப்பட்டது. சமூக வலைதளத்தின் வீச்சும் இந்த அளவிற்கு இல்லை அப்போது.
ஆனால் அதையும் மீறி மக்களிடம் சொல்ல ஒரு வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்து அநியாயமாகக் கோட்டை விட்டார். எப்படி?
"போர் நிறுத்தம் வந்துவிட்டது என்று சொன்ன பிறகும் போர் நடக்கிறதே?" என்று கலைஞரிடம் கேட்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள். பெரிய இலக்கியத் தரமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு இந்த மனுசனும் " மழை விட்டும் ( அதாவது இலங்கை நிறுத்தியும்) தூவானம் விடவில்லை ( புலிகள் விடவில்லை) என்றார். இதற்கு பதிலாக நேரடியாக " இலங்கை நிறுத்திருச்சு..!
அவங்க (புலிகள் ) நிறுத்தலையே..?
என்னைய என்ன பண்ணச் சொல்றீங்கன்னு..? பாமரத்தனமாகக் கேட்டு இருந்தால் அது மக்களுக்கு எளிதில் புரியும் செய்தியாகி இருக்கும்.
இலக்கிய வாயால் அதைக் கோட்டை விட்டார் தலைவர் கலைஞர்.
இந்த விசயத்தில் எனக்கு அவர் மேல் தீராத கோபம் உண்டு.
இனி புலிகளின் கதையும் ஈழமும் மொத்தமாய் முடிந்தது என்பதை உணர்ந்த ஜெயலலிதா .தன் வாழ்நாள் முழுவதும் புலிகளை ஈழத்தை எதிர்த்த ஜெயலலிதா போர் முடிவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் #தனிஈழமே தீர்வு என்று..நடக்காது என்று உறுதியாகத் தெரிந்த விசயத்திற்கு பல்டி அடித்து பேசி #ஈழத்தாய் ஆனார்.
கலைஞர் துரோகியானார்.
இன்றைக்கு புலிகள் வாழ்க ஈழம் வாழ்க என்று யார் வேண்டுமானாலும் பேசலாம். ஈழம் என்று வாயை அசைத்தாலே பொடாவிலும் தடாவிலும் தள்ளிய அன்றைய நேரத்தில் ,
பிரபாகரன் வாழ்க தமிழ் ஈழம் வெல்க என்று எழுதிய யுவகிருஷ்ணாக்களும் அப்துல்லாக்களும் நரேன்களும் இன்று திடீர் குபீர் டாலர் வசூல் போராளிகளுக்கு இன்று தமிழின விரோதியாகிப் போனோம். மகிழ்ச்சி..!

கருத்துகள் இல்லை: