இதனையடுத்து டவ்தே புயலால் கடுமையான
பாதிப்புக்குள்ளான குஜராத் மற்றும் டையூ யூனியன் பிரதேச பகுதிகளை பிரதமர்
மோடி இன்று (19.05.2021) பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து, இன்று குஜராத்
தலைநகர் அகமதாபாத்தில் புயல் பாதிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டத்தை
நடத்தினார்... அதற்குப் பின்னர், உடனடி
நிவாரணப்பணிகளுக்காக குஜராத்திற்கு 1000 கோடி நிதியுதவியைப் பிரதமர் மோடி
அறிவித்துள்ளதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, மத்திய
அரசு குஜராத்தில் ஏற்பட்டுள்ள சேதாரத்தை மதிப்பிட மத்திய அமைச்சர்கள்
அடங்கிய குழு ஒன்றையும் அமைக்கும் எனத் தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம்,
இந்தியா முழுவதும் டவ்தே புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு
இரண்டு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் வழங்கப்படும் எனவும்
கூறியுள்ளது.
புதன், 19 மே, 2021
உடனடி நிவாரண பணிகளுக்காகக் குஜராத்திற்கு 1000 கோடி - பிரதமர் உத்தரவு!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக